எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

#ஒரு #ஓவியனின் #ஓவிய #கதை ஒரு ஓவியனின் கதை...

#ஒரு #ஓவியனின் #ஓவிய #கதை
ஒரு ஓவியனின் கதை அழகிய கிராமம் ஒரு நடுத்தர குடும்பம் அப்பா,அம்மா விவசாயம் செய்து வருகிறார்கள் அக்கா, திருமணம் ஆயிற்று நம் கதையின் கதாநாயகன் ஓவியனுக்கு மட்டும் திருமணம் ஆகவில்லை வீட்டில் ஒரே பிள்ளை என்பதால் அதிக செல்லம்
ஓவியன் கல்லுரி படிப்பை முடித்துவிட்டு தனது நண்பர்கள் உதவியால் ஓவிய படிப்பில் பட்டம் பெற வெளிமாநிலம் சென்று மூன்று வருடங்கள் ஆகிறது. ஆமங்க நம் கதாநாயகன் பட்டம் பெற்று திரும்புகிறார் அவருடைய திருமணத்திற்கு. வீடே ஒரே சந்தோச அலை நம் கதாநாயகனை எதிர்பார்த்து கதாநாயகன் வீட்டிற்கு வந்ததும் அப்பா அம்மா உறவினரும் சென்று கதாநாயகியை பார்ப்பதற்கு சென்றனர் இருவருக்கும் பிடித்திருகிறதா? என்ற கேள்வி இருவரும் ஒரே பதில் பிடித்து இருக்கிறது என்று. இரு வீட்டாரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் வருகின்ற முகூர்த்ததில் திருமணம் என்று தீர்மானம் செய்து பத்திரிக்கை அச்சிட
கதாநாயகன் எப்படியவது காதாநாயகி இடத்தில் பேச ஆசைப் பட்டான் ஆனால் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை திருமணநாள். திருமணம் சிறந்த முறையில் நடைபெற்றது. முதல் நாள் கதாநாயகி எதையோ பறிகொடுத்தது போல முக பாவனை.
எல்லோருக்கும் உள்ளது தானே! என்று கதாநாயகனின் எண்ணம்.
இருவரும் எல்லா தம்பதியரை போல மகிழ்ச்சியான தம்பதியராக தான் இருந்தார்கள் கதாநாயகி வயிற்றில் குழந்தை உருவாக கதாநாயகன் உலகை வென்ற வீரனை போல் மகிழ்ந்தான். இரு வருக்கும் எந்த விதமான கருத்து வேறுபாடு இன்றி ஒரு பிரச்சனை தலை தூக்கியது திடீர் என்று கதாநாயகனுடன் வாழ விருப்பம் இல்லை என்று கதாநாயகி கதாநாயனிடத்தில் முறையிட கதாநாயகன் ஏன் என்று பதில் முறையிட என்னால் என் முன்னால் காதலனை மறக்க முடியவில்லை என்று கூற கதாநாயகனோ! மலைத்து போயி நிற்க! கதையில் ஒரு சோக நிலை. காதாநயகன் ஏன் என்னிடத்தில் திருமணத்திற்கு முன்னே! இது பற்றி எதுவும் சொல்லவில்லை என்று பல கேள்விகளுக்கு கதாநாயகியிடத்தில்
பதில் இல்லை. கதாநாயகனோ! என் பிள்ளையை பெற்று கொடுத்து விட்டு நீ உன் வாழ்கை உன் விருப்பபடி அமைத்துக்கொள் என்றான். ஆனாலும் கதாநாயகிக்கு பிள்ளையை பெற்று எடுக்க விரும்பம் இல்லை இந்த பிரச்சனைகள் எதுவும் கதாநாயகன் வீட்டாருக்கு தெரியாது மாதங்கள் கடந்தது திருமணம் செய்து எட்டாவது மாதம் பிரச்சனை முத்தி இரு வீட்டாருக்கும் தெரியவர இருவரும் மனம் ஒத்து நீதி மன்றத்தில் பிரிந்தனர். அப்ப அந்த குழந்தையின் நிலை காதாநாயகி என்று நினைத்த
வில்லியின் கோர தாண்டவத்தால் அந்த குழந்தை இந்த உலகை சந்திக்க வில்லை ஆம் அந்த குழந்தை வயிற்றிலே! கொள்ளப்பட்டது.கதாநாயகன் ஆகிய ஓவியன் நிலை அறிந்து மனநிலை மறந்து தன்னை தானே அழித்துக்கெண்டு இருந்தான்.ஓவியனை தன் நண்பர்கள் அனைவரும் ஆறுதல் கூறி மீண்டும் தன் ஓவிய கலையில்
கவணம் செலுத்தி வந்தான்
ஒரு சில ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஓவியனின் வருகை குடுப்பதாருக்கு சந்தோசம் கலந்த அச்சம் ஆனால் வீட்டார் எதிர்பாத்தது போல் பிரச்சனைகள் எதுவும் இல்லை ஓவியன் ஒரு முடிவுடன் வந்த்துள்ளான்.அவன் தன்னுடைய கடந்த வாழ்கை பற்றி எதுவும் யோசிக்கவில்லை அந்த முன்னால் கதாநாயகயின் வயிற்றில் வளந்த குழந்தை உயிருடன் பிறந்து இருந்தால் எந்த தேதியில் பிறந்திருக்கும் என்று கணக்கிட்டு அதே தேதியில் பிறந்த ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து கொண்டான். அந்த குழந்தையிடம் தன் ஓவியத்தில் அறிமுக படுத்தி அந்த ஓவிய தாய் வெளிநாட்டில் பணிபுரிவதாக கூறி தானும் தன் மகளும் இன்பமும் எதிர்பாப்புடனும் வாழ்கின்றனர். மகளுக்கு எதிர்பார்பு தாய்யை கண்டுவிட ஓவியனுக்கு மகள் கிடைத்த மகிழ்ச்சியில். ஓவியனின் வாழ்கை ஓவியத்தை வைத்தே! தொடர்கிறது. ஆண்டுகள் கடந்தன குழந்தை தாயை காண ஆவலுடன்.இந்த நேரத்தில் ஓவியனுக்கு ஒரு விருது வழங்கும் விழா! குழந்தை இடத்தில் ஒரு கேள்வி அம்மா விழாவிற்கு வருவாங்கலா! ஓவியன் பதில் சொல்லமுடியாது. இருந்தாலும் ஒரு பொய்யை சொல்லி அழைத்து சென்றான். விழாவில் பாராட்டு மழை ஓவியனுக்கு. விழாவில் தலைமை ஓவியர் ஓவியனின் மகள் இடத்தில் ஒரு கேள்வி உங்க அப்பா வரைந்த ஓவியத்தில் உனக்கு பிடித்த ஓவியம் எது? உடனே அந்த குழந்தை தன் அம்மா என்று ஓவியன் வரைந்துகாட்டிய ஓவியத்தை காட்டியது. பின் என் அம்மா இங்கேதான் இருக்காங்க ஆனா என்ன வந்துபாக்க மாட்டிகிறாங்க! ஐயா தயவு செய்து நீங்களே! எங்க அம்மாவ கூப்புடுங்க ஐயா என்றது. தலைமை ஓவியன் அந்த ஓவியத்தை மக்கள் பக்கம் திருப்பினார் ஓவியர்
கூட்டத்தினர் மத்தியில் அதே சாயலில் ஒரு பெண் திகைத்து போனால் அப்பெண் அச்சு அசல் அவள் உருவம் குழந்தை கண்களில் அவள் பட உடனே அம்மா என்று அழைத்தவாறு அவளிடம் ஓட அந்த பெண் ஒரு மாற்றுதிரனாளி அவளால் பேச முடியாது காது மட்டுமே கேட்கும் அன் நிலையில்
அவள் முக பாவங்களை வரைந்த ஓவியன்கண்களால் சம்மதம் கேட்கிறான் உனக்கு இந்த குழந்தைக்கு தாயக முடியுமா என்று அதற்கு அவள் ஏற்றுகொண்ட விதமாக குழந்தையை வாரியல்லி தழுவினால். எங்கோ துளைத்த ஓவியனின் வாழ்கை இங்கே இணைந்து புது வாழ்வு பெறுகிறது.

நாள் : 25-May-17, 8:14 pm

மேலே