எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நடிகனை கடவுளாக ... அரசியல்வாதியை கடவுளாக பார்ப்பவர்கள் .......

நடிகனை கடவுளாக ...
அரசியல்வாதியை கடவுளாக பார்ப்பவர்கள் ....
சாமியாரை நம்புபவர்கள் ....
ஏழைக்கு உணவிடவில்லை வீணாக பால் அபிஷேகம் ...
கடவுள் கேட்டதா?
நீ ரசிக்கலாம் அதீத பற்று தான் ஆபத்து ,...
நடிகன் நடிப்பில் அரசியல் செய்கிறான் ....
அரசியல்வாதி அரசியலில் நடிக்கிறான் ....
இயற்கையை அழித்து விட்டு மழை வேண்டினால்  எப்படி ?
கடவுள் கேட்டதா உன்னிடம் காணிக்கை செலுத்து என்று ?
கடவுள் கேட்பதெல்லாம் உண்மை மட்டுமே ....
இயற்கையை அழிக்காதீர் ...இயற்கை தான் நம் வாழ்வு ,நம் கடவுள்....

மனதை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள் ....
நிம்மதி கிடைக்கும் ...

எளிமையான காமராசரே பஞ்சத்தை போக்க
சீமை கருவேல மரங்களை பற்றி அறியாமல் தூவ சொல்லிவிட்டார் ...

எல்லாவற்றையும் தீர ஆராய்ந்து சிந்தித்து முடிவெடுங்கள் ...
நல்லது செய்ய நேரம் காலம் தேவை இல்லை ...வழி தேவை இல்லை ...விளம்பரம் தேவை இல்லை ....
நீ பெரிய இடத்தில் இருக்க வேண்டும் என்றும் அவசியம் இல்லை ...நீ இருக்கும் இடத்திலேயே உன்னை சுற்றி இருப்பவருக்கு உதவலாம் ...
நன்றியை எதிர்பார்க்காதே ,...நன்றியை சொல் ...

எது வாழ்க்கை என்பதை அறிந்து வாழுங்கள் ...பணத்தை கொள்ளை அடிக்காதீர்கள் ....
பணம் மட்டும் வாழ்க்கை இல்லை ....
கல்வி வள்ளல்கள் - ஹா ஹா - மகா திருடன்

நாள் : 26-May-17, 6:45 am

மேலே