எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தோள் சுமக்கும் கோணிப்பை. பெரியார் பார்க்கில் நண்பர்களோடு ஒரு...

                    தோள் சுமக்கும் கோணிப்பை.



பெரியார் பார்க்கில் நண்பர்களோடு ஒரு சந்திப்பு. மதியம் சாப்பிட்டு முடித்த பின் சிறிய உரையாடல். ஓய்வு. அதற்குப் பிறகு புறப்படுவதற்கு ஆயத்தம். அமர்ந்திருந்த இடத்தில் என்ன என்ன வைத்திருந்தோம் என ஒர் பார்வை. தண்ணீர் பாட்டிலில் இருந்தத் தண்ணீரைக் குடித்தேன். அக்காலித் தண்ணீர் பாட்டிலைப் புல்தரையி்ல் எறிவதா? குப்பையில் எறிவதா? என்று யோசித்தேன். சட்டென வேகமாகப் புல்தரையில் வீசினேன். எங்கிருந்தோ வேகமாக வந்த பேப்பர் பொறுக்கும் பையன் அதனை எடுத்து தனது கோணிப் பையில் போட்டுக் கொண்டான். மேலும் ஏதேனும் கிடைக்குமா என்று சுற்றுமுற்றும் பார்த்து விட்டு வேறிடம் பார்த்து நடந்தான். மனம் கொஞ்சம் அவனுக்காக அனுதாபப்பட்டது. இத்தனைச் சிறிய வயதில் எத்தனைப் பொறுப்பான அக்கரையுடன் கூடிய உழைப்பு. இவனைப் போன்று இன்னும் எத்தனை ஆயிரமாயிரம் சிறுவர்கள் இத்தொழிலில் ஈடுபட்டு வயிறு வளர்த்து வருகிறார்கள். அவன் முகம் என் மண்டையில் இரவெல்லாம் நிழலாடியது. 
ந.க.துறைவன்      

பதிவு : துறைவன்
நாள் : 1-Jun-17, 9:41 am

மேலே