எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை ...இப்படியே ஆரம்பிக்கிறேன் ......

எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை ...இப்படியே ஆரம்பிக்கிறேன் ...
ஆம் நமக்கு நம் ஆரம்பம் தேவையில்லை வரலாறும் தேவையில்லை ...தமிழ் கூட தேவை இல்லை ...
தேவை எல்லாம் யாரேனும் கேட்டால் தமிழன் / தமிழச்சி என்ற வெறும் வாய் வார்த்தை விளம்பரமே ...

தனி மரம் தோப்பாகாது என்பார்கள் ...
அதே போல் ஒவ்வொரு மரமும் சேர்ந்தது தான் தோப்பு ...

ஒரு இனம் எப்படி அழிவுப் பாதைக்கு செல்லும் என்பதை நம்மை வைத்து அறிந்து கொள்ளலாம் ...
நாம் நம் தமிழுக்காக ஒன்றுமே செய்யவில்லை ...
செய்தவன் எல்லாம் பல நூற்றாண்டை கடந்து விட்டான் ...
இன்று நமக்குள் எங்கே இருக்கிறது தமிழ் என்றால் டமில் என்பதில் இருக்கிறது ...
இது தான் இன்றைய அதிகப் பட்ச தமிழனின் உண்மையான நிலை  ...


நாம் நம் வரலாறை கூட காக்க மறந்து விட்டோம் ...
அதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன் ...
என்னருகில் இருந்தே ...

ஆம் உங்கள் எல்லோருக்கும் தெரிந்த செஞ்சிக்கோட்டை ...
தமிழனின் அடையாளம் , நாகரிகம் ...
யார் கட்டியது ?
தெரியாது ...

நீங்கள் சத்தமாக சொல்வீர் ஒரு சிலர் ...
தே சிங் ராஜா ...
இல்லவே இல்லை ...
படித்து தெரிந்து கொள்ளுங்கள் ...

உலகின் முதல் நாகரிகம்
நம்முடைய நாகரிகம் அதை பற்றுங்கள் ...
அந்நிய நாகரிகம் எல்லாம் நாகரிகம் அல்ல அநாகரிகம் ...

அதே போல் நீ ஒரு தமிழன் ...
இந்தியன் இல்லவே இல்லை ...
திராவிடன் அறவே இல்லை ...

எமக்கு
தேசியக் கொடியை குத்திக் கொள்ள குண்டூசி வேண்டாம் ...
கடப்பாரை தாருங்கள் ...நெஞ்சில் அறைந்து கொள்கிறேன் ...
கொடிகாத்த குமரனும் ஒரு தமிழன் ...
தேசிய இறையாண்மைக்கு எந்த ஒரு குந்தகமும் விளைவித்ததில்லை ...
காரணம் தமிழன் ...

சில ஆண்டு இந்தியன் அல்ல ...
இடையில் யாரோ இட்ட திராவிடன் அல்ல ...
யாரோ சொருகிய இந்துவும் அல்ல ...
எப்பொழுதும் தமிழன் .....

தமிழ் காப்போம் என்பது தாயை காப்போம் என்பதற்கு சமம் .....
உம்மால் எல்லாவற்றையும் மாற்ற முடியும் ஆனால் நீ முயற்சிப்பதில்லை ...முதலில் அதை பற்றி சிந்திப்பதே இல்லை ...
மீண்டும் நம் மண்ணில் வசந்தம் வீச தமிழன் வாசல் திறக்க வேண்டும் ...
தமிழ் நம் அடையாளம் ...
அடையாளம் இல்லை என்றால் அநாதை தான் யாவரும் ...

எந்த(இந்தி) திணிப்பிற்கும் இடம் கொடேல் ...
இன்னொருவன் நம் அடையாளத்தையும் மொழியையும் வரலாறையும் அபகரிக்க இடம் கொடேல் ...
அத்தியாவசியத்தை விட்டு விட்டு அனாவசியத்தை பற்றி பேசுபவன் தமிழன் அல்ல ...அரசியல்வாதிகள் .....
ராஜ தந்திரம் எதுவென்று உமக்கு தெரியுமா ...
இம்மூன்று நபர்கள் நேர்மையில்லா அரசியல்வாதிகள் ...இந்தியன் (இந்தியை திணித்து , இந்து வெறி பிடித்து இந்திய இறையாண்மையை குலைப்பவன் , இந்தியா என்பதின் சித்தாந்தமே வேற்றுமையில் ஒற்றுமை தானே ... இந்தியா ஒன்றும் ஒரு மொழி , ஒரு மதம் வாழும் நாடு அல்ல ... இந்தியாவிற்கு பன்முகங்கள் ... இந்தியாவின் முகங்களை அழித்து விடாதீர்கள் ...ஒவ்வொவொரு மாநிலமும் சேர்ந்தால் தான் இந்தியா என்பதே ...) , திராவிடன் என்ற பதம் கொண்ட நஞ்சு ...அப்படி சொல்லும் மனிதர்கள் காவிரியில் இருந்தோ கேரளாவில் இருந்தோ  தெலுங்கர்களிடம் இருந்தோ நீரை கொண்டு வர முடியாது ... அவர்கள் அரசியல் செய்ய மாத்திரம் பயன்படுத்தும் வார்த்தையே இந்த திராவிடம் என்ற சொல் .
நம் மூதாதையர்கள் அறிவாளிகள் ...
நம் அருகிலேயே அனைத்தையும் தந்தார்கள் ...எதையும் காப்பாற்றிக்கொள்ள நாம் நினைக்கவே இல்லை ...
மஞ்சள் அதன் காப்புரிமை ...வேப்ப மரம் அதன் காப்புரிமை எல்லாம் எங்கே என்று பாருங்கள் ...
அதெல்லாம் ஏன் என்று யோசியுங்கள் ...
யோசிக்கும் தலைமுறையே சிறந்த தலைமுறை ...
எதற்கும் கேள்வி கேட்டு போராடி தீர்வு பெறும் தலைமுறை தான் தமிழினத்திற்கு வேண்டும் ...
தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்பவன் வேண்டும் ...தமிழுக்கு மட்டுமல்ல எந்த மொழிக்காரனாக இருந்தாலும் ...
எந்த மொழியும் அழிந்து விடக்கூடாது .....

தமிழ் / சமஸ்கிருதம் நிறைய பேர் ஒப்பிடுகிறார்கள் ...
தமிழோடு எம்மொழியை ஒப்பிட்டாலும் தெரியும் ...
தமிழை எம்மொழியோடும் ஒப்பிட முடியாது ....

நானும் ஒரு ஒப்பீடு  சொல்கிறேன் .....

ஒரு மொழி நிறைய மொழிகளுக்கு தாயாக வேண்டும் .....தன் சேய்களை சுதந்திரமாக வாழ விட வேண்டும் ...
அப்பொழுதும் எப்பொழுதும் அவள் அழிந்து விடக்கூடாது ....

நான் தமிழன் ...
எம்முள் இருந்து தோன்றியவன் மலையாளி , தெலுங்கன் , கன்னடன் ... எங்களுக்கு இப்படி சொல்வதே பிடித்திருக்கிறது ...
எம்முள் எப்பொழுதும் ஒற்றுமை இருக்கும் அது திராவிடன் என்ற வார்த்தையால் கிடையவே  கிடையாது ...மனிதன் என்ற வார்த்தையால் ...
தமிழின் பிள்ளைகள் என்ற உணர்வால் ...

இவை எல்லாம் சரியாக தமிழுக்கு பொருந்தும் ...
ஆனால் சமஸ்கிருதத்திற்கோ ?
சேய் தாயை அழித்து விட்டது ...அதன் பின் ஹிந்தி இன்னும் நிறைய மொழிகளை அழிக்கிறது ...

ஒரு மொழி வளர்தல் என்பது திணிப்பில் இல்லை ...அந்த இனத்தின் பேச்சில் இருக்கிறது ...
ஆனால் எனக்கு தெரிந்து இந்திக்கென்று ஒரு இனமே கிடையாது ...
இங்கே நம்மை ஹிந்தி படி என்று திணித்து  அங்கே எல்லோரும் தோற்கிறார்கள் ...
இது தான் அவர்களின் மொழி வெறி ...

பற்று என்பது என்னவெனில் ...
அந்நியனை தொந்தரவு செய்யாமல் அதன் மீது பற்று கொள்வது ...
அதுவே வெறி என்பது நீ இதை தான் செய்ய வேண்டும் என்று மிரட்டுவது ...

தமிழ்நாட்டிற்கு வருகிறேன் ...
இங்கே ஆயிரம் பிரச்சினைகள் உள்ளது ...
பசுமை போய் வறுமை தாண்டவ மாடினாலும் ...
மீத்தேன் இவை எல்லாம் இந்தியாவிற்கு தேவை ...
அதற்காக நாம் சாப்பிட்டா  என்ன செத்தால் இந்தியாவிற்கு என்ன ?
மீத்தேனை எடுக்க நிறைய வழிகள் இருக்கிறது ஆனால் நீரை சோற்றை மண்ணில் இருந்து தான் எடுக்க முடியும் ...
அது ஒன்றும் செயற்கையா ,மென்பொருளோ கிடையாது .....

கீழடியில மொத்தமா மண்ணை கொட்டினங்களே ஏன் ...?
அங்கே எந்த சாமியும் கிடையாது ...
அங்கே இருந்தது தமிழ் ...அதனால மண் போட்டு மூடிட்டாங்க ...
இன்னும் ஒன்ன நொண்டி பாக்கல அது குமரி .....

என்னோட தலைமுறையை ஒரு இடத்துல மது வேணும் , மது வேணாம்னு போராட வைக்கிற ...இது ராஜ தந்திரம் ...
இப்படி எல்லாம் கொள்ளை அடித்து வருவாய் ஈட்டுவது நேர்மையான அரசியல் அல்ல ?
இரவோடு இரவாக ஒரே நாளில் மதுவை தமிழ்நாட்டிலும் புதுவையிலும் இல்லாமல் ஆக்கி விட்டு ஆட்சி நல்லபடியாக செய்வதே சிறந்த அரசியல் ...

பணம் வாழ்க்கை இல்லை ...


தமிழ் வாழ தமிழன் வாழ வேண்டும் ...
தமிழன் வாழ தமிழ் வாழ வேண்டும் ...

நாள் : 8-Jul-17, 2:24 pm

மேலே