எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தளத்திலுள்ளஅனைத்து நட்புக்களுக்கும் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் வாழ்க்கையில் நிலை...

தளத்திலுள்ளnbspஅனைத்து நட்புக்களுக்கும்

தளத்திலுள்ள அனைத்து நட்புக்களுக்கும் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் வாழ்க்கையில் நிலை பெற பிராத்தித்தவனாக சில யதார்த்தங்களை உங்களோடு பகிர்ந்து கொண்டு சில நிமிடங்கள்  உரையாடப் போகிறேன். அரசியல் மற்றும் உலகப் பிரச்சனைகளை பற்றி இல்லை எல்லாம் எமது தளத்தைப் பற்றி தான். தளத்தில் நான் இணைந்து சுமார் இரண்டரை வருடங்களாகிறது இதற்குள் இனிமையையும் பல கசப்புக்களையும் அனுபவமாக பெற்று இன்று வரை இதற்குள் பயணித்துக் கொண்டிருக்கிறேன். இன்றைய நடைமுறையில் தளத்தில் பல புதிய எழுத்தாளர்களின் வருகைகள் அதிகரித்து இருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. மிகவும் ஆனந்தமான விடயமாகவும் இருக்கின்றது. பல தரமான படைப்புக்கள் பலரால் பார்க்கப்படாவிட்டாலும் சிலரால் கூட பார்வையிடாமல் இருப்பது மனதை வலிக்கச் செய்கிறது. அதற்காக நாம் யாரையும் குறை சொல்ல முடியாது அவர்களின் தனித்துவம் வேலைப் பளு என்று ஒரு நாளிலுள்ள நிமிடங்கள் பலருக்கு அதற்கே போதுமானதாகவும் இருப்பதில்லை. புதிதாக எழுதும் நண்பர்களும் எழுத்துக்களால் முகமறியாமல் பழகி  அன்றிருந்து இன்று வரை எழுதும் நண்பர்களும் ஆழமான புரிந்துணர்வை எமக்குள் உருவாக்கிக் கொண்டால் இன்னும் தளத்தின் தரம் தமிழால் உயர்வடையும் என்று கருதுகிறேன்.அது  மட்டுமின்றி தரமான படைப்புக்களை கலையின் உலகத்தில்  அனாதையாக கண்ணீர் சிந்தி அழக் கூடிய துர்பாக்கியமும் இல்லாமல் போகக் கூடிய வகுத்தல்களை நாம் உருவாக்கிக் கொண்டால் தமிழின் சுவாசம் கவிதைகளின் பூங்காவை இங்கு உருவாக்கும் என்றும் நம்புகிறேன்.


பலர் படைப்புக்களை மட்டுமே பதிவிடுவதில் மும்முரமாக இருக்கின்றனர் மிகவும் ஆனந்தமான சேதி ஆனாலும் அவர்களின் படைப்புக்களை பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கின்றது அது மட்டுமின்றி கருத்துக்களும் அங்கு வறுமையாக மாறுகின்றது. இன்னும் சிலர் அதிகளவு படைப்புக்களை பதிவிட்ட போதிலும் மற்றைய நண்பர்களின் படைப்புக்களுக்கு கருத்துக்களை வழங்கக் கூடியவர்களாகவும் இருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த நன்றிகளை இவ்விடத்தில் சொல்லிக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன். முன்பு போல் எல்லோருடைய படைப்புக்களையும் என்னால் பார்வையிட முடிவதில்லை என்ற சோகத்தையும் இவ்விடத்தில் பகிர்ந்து கொள்கின்றேன். எல்லோரும் எல்லோரையும் ஆதரியுங்கள் அதன் மூலம் எம்முடைய வாழ்க்கையும் எழுத்துக்களும் செழுமையடையும் என்பது தான் யதார்த்தம். புதியவர்களை பழையவர்களும் பழையவர்களை புதியவர்களும்  புரிந்து கொண்டு செயற்படும்  பொழுது நிச்சயம் ஒரு ஆரோக்கியமான சூழ்நிலை இங்கு நிலவும் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

முன்பு பல நண்பர்கள் கூட்டாக இணைந்து செயற்பட்டனர் ஆனால் அவர்கள் இன்றும் அதே நேசத்தில் தான் செயற்படுகின்றனர் ஆனால் எமது தளத்தில் இல்லை முகநூலில் குழுமங்கள் அமைத்து என்பது மிகவும் இழப்பான உண்மை. அது போல் இன்றுள்ள நண்பர்களுக்குள் பிளவுகள் வந்து விடக்  கூடாது என்பது தான் என்னுடைய பணிவான வேண்டுகோள். நாட்களில் தொடங்கி வாரத்தில் எழுந்து மாதத்தில் வளர்ந்து வருடங்கள்  ஓடி விடுகிறது அது போல் தான் வாழ்க்கையிலுள்ள ஒவ்வொரு நியதிகளை பயணிக்கிறது என்பதை தெளிவாக நாம் புரிந்து கொள்ள முடியும்.முதல் படைப்புக்கே இங்கு நூறு பார்வை கிடைத்தவர்களும் இல்லை பல படைப்புக்களுக்கு செழிமையான கருத்துக்கள் கிடைக்காதவர்களும் இங்கு இல்லை என்பதை நான் உறுதியாக இவ்விடத்தில் சொல்லிக் கொள்கிறேன்.

ஒரு நாளைக்கு  குறைந்தது ஐந்து தொடக்கம் பத்து படைப்புக்களை நாம் படிக்கும் போது ஒரு சிறந்த படைப்பை நாமே இங்கு தேடி அதனை அனுபவமாய் ஏற்று சுயமான எழுத்தை செதுக்கிக் கொள்ளலாம் என்பதை யார் மறுப்பார். நேரங்கள் எல்லாம் வரமானவை அவைகளை கலைக்கு கொடுக்கும் போது மனதுக்கு கிடைக்கும் ஆறுதலை கோடிகள் கொடுத்தாலும் வாங்கிக் கொள்ள முடியாது. வெறுமெனே படைப்புக்களை மட்டும் பதிவிட்டு விட்டு போகாமல் சில படைப்புக்களை தேடி படிக்கும் போது ஆரோக்கியமான படைப்புக்கள் மனமுடையக் கூடிய அவல நிலை இங்கு ஒரு போதும் வராது.

தளத்தின் உரிமையாளர்களும்  பல புதுமைகளை நாளும் செய்கின்றனர் மிகவும் ஆனந்தமாக இருக்கின்றது இருந்தும் இன்னும் சில பழைய நடைமுறைகளை செயற்படுத்தினால் உறுதியான ஓர் பின்புலம் உருவாகும் என்பதையும் சொல்லிக் கொள்கிறேன் அது மட்டுமின்றி சில நண்பர்கள் போட்டிகள் நடத்துகின்றனர் ஆனால் அதனது தரம் எவ்விடத்தில் இருக்கிறது என்பதை நாம் சிந்தித்துக் கொள்ள வேண்டும் அதற்காக நான் யாரையும் குறை சொல்ல வில்லை. ஆரோக்கியமான போட்டிகளை நடாத்துங்கள் அதற்கு வெறுமென இருபது முப்பது ஐம்பது என்று சன்மானங்கள் 
வழங்கவிட்டாலும் கோடிகளுக்கு இணையில்லாத பாராட்டை வழங்குங்கள் அது போதும் அதை விட்டு விட்டு சில்லறையில்  படைப்புக்களை அசிங்கப்படுத்த வேண்டும். போட்டிகளை பதிவேற்றும் போது அதனை தளத்தின் எழுத்துக் குழு ஒரு முறை பரிசீலனை செய்ய இந்நேரத்தில் சொல்லிக் கொள்கிறேன். ஒரு நண்பனிடம் நான் எழுத்துத் தளத்தில் மட்டும் தான் எழுதுகிறேன் என்று சொன்னேன் அதற்கு அவன் அங்கு போட்டிக்கு பரிசு கொடுப்பது இல்லை சில்லறைகளை தான் வீசுவார்கள் என்று நகைத்தேன் அது ரொம்ம கஷ்டமா இருந்தது அதற்காகத்தான் இவ்வெண்ணம் பதிவிட மனதில் தோன்றியது.

நான் யாரையும் குறை சொல்ல இவ்வெண்ணத்தை பதிவிட வில்லை பலரின் மனதில் உள்ளதை எழுதும் கருவியாகத்தான் என்னை பயன்படுத்திக் கொண்டேன். இவ்வெண்ணம் பற்றிய உங்களது கேள்விகளையும் விமர்சனங்களையும் என்னால் முடிந்தவரை தெளிவு படுத்த முடியும் என்று நம்புகிறேன் என்னால் முடியாவிட்டால் நட்பின் கூட்டணி தெளிவு படுத்தி உறுதியாக்கும் என்பதையும் சொல்லிக் கொள்கிறேன் 


Rate Up 3 Rate Down 0
திருத்து | நீக்கு
Close (X)

நாள் : 9-Jul-17, 12:58 pm
மேலே