எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

CIVIL ENGINEERING.... சிவிலுக்கு மட்டுமே இத்தனை சிறப்பு! நாலு...

CIVIL ENGINEERING....

சிவிலுக்கு மட்டுமே இத்தனை சிறப்பு!
நாலு பேரிடம் பெருமையாக சொல்ல
வேண்டுமே, நாலு பேர் நம்மை மதிக்க
வேண்டுமே என
வெற்று பந்தாவிற்கு ஆசைப்பட
வில்லையெனில், ப்ளஸ் 2 முடித்த
மாணவர்களுக்கு மிக நல்ல தேர்வு சிவில்
இன்ஜினியரிங் ஆகும். நம்முடைய
வாழ்வுடன் நெருங்கிய தொழில் சிவில்
தவிர வேறு எதுவும் இல்லை.
இந்தியாவில், தென்கிழக்கு ஆசிய
நாடுகளில், ஆப்ரிக்காவில்,
வளைகுடா நாடுகளில், மத்திய
கிழக்கு அரபு நாடுகளில், அடுத்த
பத்து வருடங்களுக்கு உயர்தர
வேலை வாய்ப்புகளை அள்ளி வழங்கும்
வருமானம் உள்ள பிரிவுதான் Civil
Engineering..சிவில் என்றாலே வெயில்,
அழுக்கு, தூசிதானே என யோசிக்கும்
உங்களுக்கு சிவிலின்
சிறப்புகளை தொகுத்து சொல்வதுதான்
இக்கட்டுரை. சிவில் இன்ஜினியர்
என்றால் வீடு கட்டுபவர்,
அல்லது கட்டுமானம் போன்ற துறைகளில்
வேலை செய்பவர் என்ற ஒருதலைப்பட்சக்
கணிப்பு உள்ளது. இது தவறு. சிவில்
இன்ஜினியர் பல வேலைகளைப் பார்க்க
முடியும். என்ன மாதிரி? கட்டிடம்
அமைக்கவுள்ள தேவைகளை,
பொருட்களை நிர்ணயம் செய்யும்
அளவாளர் (Quantity Surveyor), நிலம்
அளவு நிர்மாணிப்பவர் (Land Surveyor)
கட்டிடம், இடம் வடிவம் செய்பவர் (Design
Engineer), இடப் பொறியாளர் (Site Engineer), திட்ட
மேலாளர் (Project Manager),பாலம் கட்டும்
பொறியாளர் (Bridges Engineer), சாலைப்
பொறியாளர் (Road Engineer), போக்குவரத்துப்
பொறியாளர் (Transport Engineer), கடல்வாழ்
கட்டிடம் அமைப்பவர் (Marine Construction),
பூகோள நுணுக்க பொறியாளர் (Geo Technical
Engineer), கடலைத்தூற்றி நிலமாக்கும்
பொறியாளர் (Reclamation Engineer),ஒப்பந்த
மேலாளர் (Contract Manager), வாணிப மேலாளர்
(Commercial Manager), உற்பத்தியாளர் (Producer),
ஒப்பந்தக்காரர் (Contractor),
யோசனை டிராயிங், கட்டிட சூபர்விக்ஷன்
செய்பவர் (Consultant), இப்படிச் சொல்லில்
அடங்காத எண்ணற்ற சேவைகளைப்
புரியலாம். “Quantity Surveyor”
படிப்பு பற்றி பார்க்கலாம். தகுதி B.E. Civil
Engineering or DCE (Diploma in Civil with 3 years experience). .
துபாய் போன்ற வளைகுடா நாடுகளில்
இவர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.2
லட்சம், அதிகபட்சம் ரூ.4 லட்சம்
ஒரு மாதத்திற்கு. QS/QC என
அழைக்கப்படும்
பொறியாளர்களுக்கு என்ன வேலை?
திட்டம் சம்பந்தப்பட்ட வடிவங்களைப்
படித்து சரி செய்தல் (Review), கட்டிடம்,
திட்டம் சம்பந்தப்பட்ட
புனரமைப்பு வேலைகளைப் படித்தல்.
கட்டமைப்பு வசதிகளை படித்து,
அது சம்பந்தப்பட்ட சாலைகள், தெருக்கள்,
கழிவுநீர் வசதி, குடிநீர்வசதி, Gas Connection,
போன்றவற்றை ஆய்ந்து, ஒப்பந்தக்காரர்க
ளின் விலை தயாரித்தல், மனித வளம்,
பொருட்களின்
விலைகளை ஒப்பிட்டு திட்டம் தயாரிப்பது,
செய்யத்தக்க செயல்முறைகளைக்
கையாளும் விதம் (Feasibility Studies)
தயாரிப்பது, ஒப்பந்தம் சம்பந்தப்பட்ட
கோப்புகளையும், பத்திரங்களையும்
பார்த்தல், வேலைக்குப் பேசப்பட்ட
ஒப்பந்தத் தொகைகளை,
வேலைகளுக்கு ஏற்ப,
வேலைகளை முடித்ததிற்கு ஏற்றவாறு பணம்
செட்டில் செய்தல், பட்ஜெட் விபரங்களைத்
தயாரித்தல், ஒப்பந்தக்காரர்களின்
முடிவான கணக்குகளை செட்டில்
செய்தல், மதிப்பீடு செய்து, ஒப்புக்
கொள்ளப்பட்ட வேலையின் விலையில்
மாற்றங்கள் இருந்தால், அதற்கான
வழி முறைகளை ஆராய்ந்து சிபாரிசு செய்தல்,
வேலை நடக்கும் இடங்ளுக்கு (Field Visit)
சென்று திட்டங்களையும், அதன்
முன்னேற்றங்களையும், மற்றபடி, ,
Mechanical/Electrical வேலைகளின் பிற
சேவைகளைக் கருத்தில் கொண்டு,
சம்பந்தப்பட்ட கோப்புகளைத்
தயாரித்து யோசனை வழங்குதல்.
மேற்சொன்ன வேலைகளுக்கான தகுதிகள்:
B.E. Civil/Diploma Civil, நாட்டில் உள்ள கட்டிட
வேலைகளின் விபரம், பொருட்களின் தரம்,
விலை, சந்தையில் உள்ள மாற்றங்கள்,
ஒப்பந்தக்காரர்களின் விபரங்கள்
தகுதிகளை அறிதல், மனிதவளம்
செலவுகளைக் கணக்கிடுதல் வேண்டும்.
மற்ற நாடுகளான இலங்கை, ஆஸ்திரேலியா,
கனடா பல்கலைக்கழகங்களில் Bachelor Degree in
Quantity Survey சொல்லித் தருகிறார்கள். B.E.
Civilபடித்து, இதே வேலையை எடுத்துக்
கொள்ளலாம்.Indian Quantity Surveyors Association
(IQSA) என்ற அமைப்பில் மாணவர்கள்
தொடர்பு கொண்டு வேலைவாய்ப்புகளை,
படிப்புகளைத்
தெரிந்து கொள்ளலாம்.WEBSITE-_ (IQSA)
சென்று பார்த்தால் விபரங்கள் மேலும்
அறியலாம். வெளிநாடுகளில் நல்ல
சம்பளம் கிடைக்கிறது. ஆதலால் இத்தகைய
பணிபுரியும் பொறியாளர்கள்,
ஒப்பந்தக்காரர்
களிடமிருந்து “கையூட்டு” பெற
மாட்டார்கள். இயல்பாக இந்தத்
தொழிலுக்கு நுழைபவர்களிடம்
நேர்மையும், உண்மையும் இருக்க
வேண்டும். (Integrity) B.E. Civil/Diploma Civil
பயிலும் மாணவர்கள் செய்ய வேண்டியது:
QS சம்பந்ததப்பட்ட
விபரங்களை கணினி வெப் மூலம்
தெரிந்து கொள்ளவும். Charted Institute of
Building (CIOB), Royal Institution of Charted Surveyors (RICS),
National I

பதிவு : ஜெகன் ரா தி
நாள் : 17-Jul-17, 7:38 pm

பிரபலமான எண்ணங்கள்

மேலே