எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சிந்தனை செய்மனமே..24 A way of life and...

சிந்தனை செய்மனமே..24




A way of life
and way of highways..!




 




வாழ்க்கைப் பிரயாணமும்
(life) நெடுஞ்சாலைப் பிரயாணமும் (Highways)..




மனதைத் தவிர மற்ற
எல்லாவற்றையும் கட்டிப்போட்டுவிடலாம். எந்த ஒரு செயலையும் நேர்மறை எண்ணத்தோடு பார்த்தாலோ
அல்லது செய்தாலோ அது நன்மையில் மட்டுமே முடியும் என்பது நிச்சயமான உண்மைதான்.



உதாரணமாக, நாம் ஒரு
இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு காரில் பிரயாணம் செல்கையில், பயணம் செய்கின்ற பாதைகள்
நெடுஞ்சாலையாக (National High Ways) இருந்தால் எளிதில் எட்ட வேண்டிய இலக்கை அடைந்து
விடுகிறோம். போகின்ற தூரம் முழுவதும் இதேபோல இருந்தால் நன்றாக இருக்குமே என மனம் நினைப்பது
உண்டு.



இதையேதான், வாழ்க்கைப் பிரயாணத்தின்
போதும் எதிர்பார்க்கிறோம். பிறரது கோபம், பொறாமை, தடைகள் இவைகளைக் கடந்து, வெற்றி என்கிற
இலக்கை அடைந்தபிறகு, கடந்து வந்த கரடு முரடான  பாதைகளை நினைத்துப் பார்த்தால், அது நெடுஞ்சாலை
(High Ways) போலவே தோன்றும்.



நெடுஞ்சாலையில் கஷ்டமில்லாமல்
கார் ஓட்டுவது போலவே வாழ்க்கைப் பிரயாணமும் (way of life) மேடு பள்ளமில்லாமல் சென்றால்
நன்றாக இருக்குமே என எண்ணுவதும் மனித இயல்புதான்.

நாள் : 21-Jul-17, 5:57 pm

மேலே