எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இளஸ் மனஸ் --------------------------- அன்பு ஜெனிபருக்கு... உங்கள் அன்பு...

இளஸ் மனஸ்
---------------------------


அன்பு ஜெனிபருக்கு... உங்கள் அன்பு சகோதரி தேவி எழுதுவது... எங்கள் பிள்ளைகளுக்கு என்ன பிரச்னை இருந்தாலும், முதலில், உங்களிடம் தான் கேட்க தோன்றுகிறது. மருத்துவர்களிடம் செல்ல வேண்டும் என்று கூட தோன்றவில்லை; அவ்வளவு நம்பிக்கையை இப்பகுதி ஏற்படுத்தியுள்ளது. சரி, விஷயத்திற்கு வருகிறேன்...
'டீன்-ஏஜ்' பருவத்தில் என் மகனும், மகளும் இருக்கின்றனர். சத்தான உணவை கொடுத்து, அவர்களது ஆரோக்கியத்தை பாதுகாக்க விரும்பு கிறேன் சகோதரி. இந்த காலத்து, 'டீன்-ஏஜ்' பிள்ளைகள், பீசா, பர்கர், சாப்ட் டிரிங்க்ஸ் குடிப்பதில் தான் ஆர்வமாக உள்ளனர்.
பிள்ளைகள் நிறைய நேரம் படிப்பதால், சத்துள்ள உணவை கொடுத்து, அவர்களது ஆரோக்கியத்தை மேம்படுத்த விரும்புகிறேன். நீங்கள் சொன்னீர்கள் என்றால், நிச்சயமாக கேட்பர். எனவே, என் பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்கு என்னென்ன உணவு பொருட்களை கொடுக்க வேண்டும் என்று சொல்லுங்க ஜெனி.
அருமையான கேள்வி சகோதரி. இது இன்றைய, 'மதர்ஸ்' அனைவருக்கும் தெரிய வேண்டியது. நாம் எல்லாரும், நம்முடைய குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கணும் என்பதை விரும்புகிறோம். ஆனால், நம் குழந்தைகள், ஆரோக்கியமான உணவை சாப்பிடாமல், உதறி தள்ளும்போது, அவர்களுக்கு அதன் நன்மைகளை எடுத்து சொல்வதில்லை.
காரணம், பெண்கள் வேலை வேலை என இறக்கை கட்டி பறப்பதால், குழந்தைகளுக்கு, ஆரோக்கிய உணவை செய்து கொடுக்க முடிவதில்லை. எது எளிதாக செய்யக் கூடியதோ, அதை செய்து கொடுத்து அனுப்பிவிடுகிறோம்.
உங்களை போன்ற பெற்றோர், பிள்ளைகளின் உணவில் கவனம் செலுத்தினால், அவர்களது ஆரோக்கியத்தை பேணி, பராமரிக்க முடியும். குழந்தையின் ஆரோக்கியம், உடலை சார்ந்தது மட்டுமல்ல; அவர்களது சரீர, மனநிலை, புத்திசாலித்தனம் மற்றும் உணர்ச்சி கட்டுப்பாடுகள் இவற்றையும் பொருத்ததுதான். வெறும் உடல் ஆரோக்கியத்தை மட்டும் பார்க்கும் நாம், மேலே கூறியுள்ள மன ஆரோக்கியங்களை பார்ப்பதில்லை.
குழந்தைகளை பெற்று கொள்வது பெரிதல்ல; அவர்களை, நல்ல முறையில் வளர்த்து ஆளாக்குவது மிக மிக பொறுப்பான காரியம். இதை, நாம் சரியாக செய்து விட்டால், சமுதாயத்திற்கு நம் குழந்தைகள் மிகவும் பயனுள்ள பிரஜைகளாக இருப்பர். அத்துடன், மருத்துவமனை செலவுகள் மிச்சமாகும்.
முக்கியமாக, உங்கள் குழந்தைகள், 'டீன் -ஏஜ்' பருவத்தை அடைந்தவுடன், அவர்களது உணவு பொருட்களின் மீது, நீங்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டும். கொழுப்பு சத்து அதிகம் உள்ள உணவு, பிள்ளைகளை, முரட்டுத்தனம், பிடிவாதம், அகங்காரம் உடையவர்களாக்கும்.
'டீன் - ஏஜ்' பிள்ளைகளின் டயட்!
கொலஸ்ட்ரால் இல்லாத, குறைவான கொலஸ்ட்ரால் உள்ள உணவாக கொடுக்க வேண்டும். நிறைய காய்கறிகள் மற்றும் பழங்கள் கொடுக்க வேண்டும். பீன்ஸ், மாம்பழம், வெண்ணெய் பழம், ஓட்மீல், தயிர், 'பீ நட் பட்டர்' மற்றும் கொழுப்பு நீக்கிய பால் போன்றவற்றை கொடுக்கலாம்.
தோல் பளபளக்க...
பழங்கள்: கிவி, லெமென், பப்பாளி, ஆப்பிள், வெண்ணெய் பழம், வாழைப்பழம், ப்ளம்ஸ், அன்னாசி, மாதுளை மற்றும் ஸ்ட்ராபெரி.
காய்றிகள்: பீட்ரூட், எலுமிச்சை, நெல்லிக்காய், கீரைகள் மற்றும் பூசணி விதைள்.
முகம் பளபளக்க:
கேரட், தக்காளி, மஞ்சள் குடை மிளகாய், கீரைகள், ஓட்ஸ், பாதாம், மஞ்சள், முட்டை, பப்பாளி பழம் மற்றும் தேங்காய் எண்ணெய்.
இவற்றை கொடுத்து, பிள்ளைகளின் முக அழகை பராமரியுங்கள்.
'டீன்-ஏஜ்' பருவத்தினரின் உணவில், பெற்றோர் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும். குழந்தை பருவத்தில், பப்பு மம்மு, சூப், ஜூஸ் கொடுத்து கவனிக்கும் நாம்,'டீன்-ஏஜ்' பருவத்தில் அதற்கு மேலான அக்கறையை காட்ட வேண்டும்.
காரணம், அந்த வயதில் தான் சில உணவு பொருட்கள் பிள்ளைகளின் செக்ஸ் ஹார்மோன்ஸ்சை அதிகம் சுரந்து, எதிர்பாலினத்தினர் மீது அபரிமிதமான நடத்தையில் ஈடுபடும்படி செய்யும். எனவே, இந்த செக்ஸ் உணர்வுகளை கட்டுப்பாட்டில் வைக்கும் உணவு பொருட்களை கொடுப்பது மிக மிக அவசியம்.
புதினா, முட்டை கோஸ், பீட்ரூட், கேரட், கார்ன் ப்ளேக்ஸ், புரோகோளி, வால்நட், சிகப்பு முட்டை கோஸ், டார்க் சாக்லேட்ஸ் அதிமதுரம், தக்காளி, பயிறு வகைகள் இவற்றை அதிகம் கொடுப்பது நல்லது.
இவை, பிள்ளைகளின் செக்ஸ் ஹார்மோன்ஸ் மற்றும் மன அழுத்தத்தை தூண்டும் ஹார்மோன்களை கட்டுப்படுத்தும். இவற்றை, 'ரெகுலரா'க பழக்கினால், உங்களது ஆண் பிள்ளைகள் சாந்தமான, அமைதியான, ஆரோக்கியமான பிள்ளைகளாக வளர்வர். பெண் பிள்ளைகளுக்கு மாதவிடாய் பிரச்னைகள் இன்றி, நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பர். போதுமா சகோதரி...
இத்தனை அருமையான ஆலோசனைகளை வழங்கியவர் புரோ: எஸ்.எம்.ராஜேந்திரன்
எம்.டி., எப்.ஆர்.சி.பி., டயபட்டாலஜிட் அண்ட் கவுன்சிலிங்.
- தேங்க்யு டாக்டர்.
டாக்டர் கொஞ்சம் கேரட் ஜூஸ் சாப்பிடுவோமா...
- ஜூஸ் உடன்,
ஜெனிபர் பிரேம்.

* இன்றைய சிறுவர் மலர் .

நாள் : 28-Jul-17, 11:20 am

மேலே