எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நான் விரும்பும் குறளில் ஒன்று ======================= நன்றி மறப்பது...

நான் விரும்பும் குறளில் ஒன்று
=======================

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.

~ திருவள்ளுவர்

நமக்கு பிறர் செய்த உதவியை எப்பொழுதும் மறந்திடல் கூடாது ...
நாம் பிறருக்கு செய்ததை சொல்லிக்காண்பிப்பதோ , முதுகுக்கு பின்னால் பேசுவதோ கூடவே கூடாது ...ஒருவரின் முதுகுக்கு பின்னால் தட்டிக்கொடுப்பது மாத்திரமே செய்ய வேண்டும் ...

நான் என் உயிரின் கடமையை செய்தேன் ...வேறொன்றும் இல்லை ...எதையும் எதிர்பார்த்து செய்தால் நான் நானில்லை ...

வழி தெரியா ஊரில் சரியான நிறுத்தத்தில் இறங்கிவிடும் நடத்துனர் அவர்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் ...

கடவுள் எங்கே இருக்கிறார் தெரியுமா ?
-------------------------------------------------------
உனக்குள் இருக்கிறார் ...( இங்கே நல்லவர் , கெட்டவர் இல்லை ...உன் எண்ணம் தான் மனிதனா , மிருகமா என்று தீர்மானிக்கிறது ,,...மனிதமே கடவுள் ...)
உலகத்தில் எங்கும் நிறைந்திருக்கிறார் ...
ஒவ்வொரு மனிதமும் இறைவன் தான் ...
இயற்கையில் , இசையில் , என் தாய் , தமிழாக ,உணர்வாக , சக உயிராக ,  புல்லுக்குள் பசுமையாக , மண்ணுக்கு உரமாக , வானத்து மழையாக , குட்டி மழலையாக ,
கருணையில் மனிதமாக ...

இயற்கை , இசை , என் தமிழ் ,தாய்  ...இப்பிரபஞ்சம் ...
அனைவருக்கும் எப்பொழுதும் நான் உண்மையாக இருப்பேன் ...

கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன் ...

மனிதம் + இயற்கை + இசை + முத்தமிழ் + தாய் + குடும்பம் + நட்பு + சமூகம் + பிரபஞ்சம் + உண்மை +நேர்மை + ஒழுக்கம் = இறைவன்
இறைவனை மனதார தூய்மையோடு அடைந்தால் மன நிம்மதியே  ...

நாள் : 8-Aug-17, 2:58 pm

மேலே