எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

முல்லா கதை. முல்லா நஸ்ருத்தீன் மிகவும் சோகமாகக் காணப்பட்டார்....

                    முல்லா கதை.   



முல்லா நஸ்ருத்தீன் மிகவும் சோகமாகக் காணப்பட்டார். நண்பர் ஒருவர் காரணம் விசாரித்து ஆறுதல் சொன்னார். “ ஆம், உன் மனைவி மாண்டு விட்டாள்தான். ஆனால் நீ இன்னமும் இளமையாகத் தான் இருக்கிறாய். இன்னொரு கல்யாணம் செய்து கொள்ளலாமே. பல பேர் என்னிடம் தங்களுக்குத் திருமண வயதில் பெண் உள்ளதாகவும், முல்லாவைத் திருமணம் செய்துக் கொள்ள சம்மதிக்க வைக்குமாறும் சொல்லியிருக்கிறார்கள் ”   முல்லா பதிலளித்தார். “ மீண்டும் திருமணம் செய்து கொள்ளலாம் தான். ஆனால் நாலு காரணங்களால் நான் கல்யாணம் செய்து கொள்ள முடியாத நிலையில் உள்ளேன்.”   நண்பர் சொன்னார். ” ஒரு பிரம்மசாரி கூட தனக்கு ஏன் திருமணமாகவில்லை என்பதற்கு ஒன்றிரண்டு காரணம்தான் சொல்ல முடியும். நான்கு காரணம் சொல்ல முடியாது. அப்படியிருக்க, உனக்கு அப்படி என்ன நான்கு காரணங்கள் தடையாக உள்ளன?   ”மூன்று மகள். ஒரு மகன் ” முல்லாவின் பதில் பளிச்சென்று வந்தது. ஏற்கனவே உள்ள நான்கு குழந்தைகள்தான் மறுமணத்திற்குத் தடையாக உள்ளதை முல்லா நயமாகச் சுட்டிக்காட்டுகிறார். 
 ஆதாரம்  ஓஷோவின் – அஷ்டாவக்ர மகாகீதை – பக்கம் – 15. 
 தகவல் ; ந.க. துறைவன்.          

பதிவு : துறைவன்
நாள் : 10-Aug-17, 9:00 am

மேலே