காதலர் தினம் தேவையா?

மேலை நாட்டவரின் கலாச்சாரம் சீரழிவின் சிகரம். உண்மைக் காதல் இலைமறை காயாய் இருந்து கனியும் காலத்தில் மணக்கோலத்தில் இணைவது. பொது இடங்களிலும் அநாகரிகமாக வரம்புமீறி நடப்பவர்கள் காதலர்கள் அல்ல. அவர்கள் கம்பி எண்ண வேண்டியவர்கள். திரைநெறியாளர் காட்டும் காதல் பணம் சம்பாதிக்க. அதை உண்மை என்று நம்பி செயலில் இறங்குவோரே சீரழிந்து போகிறார்கள்.
ஊடகங்கள் திரும்பப் திரும்ப காதலையும் அரைகுறை ஆடையுடன் அவர்கள் பொது இடங்களில் கூட நடத்தும் காமக்களியாட்டம், குத்தாட்டம் போன்றவற்றைப் பார்த்து ரசித்துப் பரவசம் அடையும் இளம் திலகங்களில் பலர் வீணாய் வாழ்க்கையை அழித்துக் கொள்ளும் நிலையைத் தேடிக் கொள்கிறார்கள். மேலை நாட்டவரின் பைத்தியகாரத்தனமான காதலர் தினத்தை இங்கு இருக்கும் “காதலர்” கொண்டாடி மிச்சம் மீதி இருக்கும் குழந்தகளையும் கெடுத்து நாசம் செய்ய வேண்டுமா?



கேட்டவர் : மலர்91
நாள் : 13-Feb-14, 7:42 am
0


மேலே