என் காதுலுக்கு ஒரு பதில் கூறுங்கள்

2008லிருந்து 2013 வரை நான் ஒரு பெண்ணை காதலித்து வந்தேன் . எனக்கு ஒரு தங்கை இருக்கிறாள் . அவள் திருமணம் முடிந்ததும் இதை பற்றி என் பெற்றோரிடம் பேசலாம் என்று முடிவு செய்திருந்தேன் . இதற்கிடையில் என் தங்கையும் ஒருவரை காதலிப்பதாக தெரியவந்தது . என் பெற்றோருக்கு அது பெரிய அதிர்ச்சியாய் இருந்தது . முதலில் ஒப்புக்கொள்ளவில்லை பிறகு வேண்டாவெறுப்பாக ஒத்துக்கொண்டார்கள் . அவர்கள் ஒத்துக்கொள்ள எடுத்துக்கொண்ட அந்த இரண்டு வருடகாலம் அவர்கள் பட்ட வலியை என்னால் பார்க்க முடியவில்லை . எனவே என் காதலை தியாகம் செய்வது என்று நான் முடிவு செய்தேன் . ஆனால் சந்தர்ப்ப சூழல் காரணமாக என் காதல் இரு வீட்டாருக்கும் தெரியவந்தது . பெண் வீட்டில் சம்மதம் தெரிவித்தனர் . ஆனால் என் வீட்டில் தலைகீழாய் நடந்தது . என் அம்மா பிள்ளைகளை வெறுத்து தற்கொலை முயற்சி செய்து விட்டார் . ஒரு வழியாக காப்பாற்றிவிட்டோம் . நான் விரும்பிய பெண் ரொம்ப நல்லவள் , மென்மையானவள் , நியாயமானவள் . என் குடும்பத்தை அவள் குடும்பமாக கருதினாள். என்னை உயிருக்கும் மேலாய் நேசித்தாள் . என் பெற்றோரும் என்னை உயிருக்கு மேலாய் நேசித்தனர் . இருவரையும் விட எனக்கு மனமில்லை . தற்கொலை செய்துகொள்ள துணிவில்லை . இறுதியாய் என் மனசாட்சியை கல்லாக்கிக்கொண்டு அந்த பெண்ணை எனக்கு பிடிக்கவில்லை ,அவள் என்னை சித்ரவதை செய்கிறாள் என்று இரு வீட்டாரிடமும் பொய் கூறி , அவளையும் என் காதலையும் உயிரோடு கொன்றுவிட்டேன் . நான் அவளுடன் சேர்ந்து வாழமாட்டேன் என உறுதியாய் கூறிவிட்டேன் . அவளை பார்க்கமாட்டேன் பேசமாட்டேன் என்று என் தாயிடம் சத்தியம் செய்து கொடுத்துவிட்டேன் . அப்பொழுதும் அவள் என்னை காதலித்து துடித்தாள். நாங்கள் பேசி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது . ஆனால் அவள் இன்றுவரை நான் திரும்ப வருவேன் என்ற நம்பிக்கையில் திருமணம் செய்து கொள்ளாமல் காத்திருக்கிறாள் .

நான் தியாகம் செய்வதாக நினைத்து பாவம் செய்துவிட்டேன் . மன்னிக்க முடியாத பெரிய பாவம் . இந்த இரண்டு வருடங்களில் அவளை நினைக்காத நொடிகள் கிடையாது . என் மனசாட்சி கேட்கும் கேள்விகளுக்கு என்னால் பதில் கூற முடியவில்லை .என் பெற்றோரையும் நோகடிக்க மனமில்லை . இன்னும் சில மாதங்களில் என் பெற்றோர் எனக்கு பெண் பார்க்க முடிவுசெய்திருக்கிறார்கள் . இப்பொழுது எனக்கு தோன்றுகிறது நான் அன்றே உயிரை விட்டிருக்க வேண்டும் என்று . இப்பொழுது நான் மனசாட்சியுடன் முடிவு எடுக்க வேண்டுமானால் என்ன முடிவு எடுக்க வேண்டும் ?



கேட்டவர் : vinoth srinivasan
நாள் : 2-Mar-15, 12:23 pm
0


மேலே