வில்வா தமிழ் T-shirt வாசகம் வடிவம் போட்டி
கடந்த மாதம் கோபிநாத் ரவிராஜன் என்பவரால் வில்வா தமிழ் T-shirt வாசகம் வடிவம் போட்டி
நடத்தப்பட்டது. ஆனால் போட்டியின் முடிவுகள் இன்னமும் இங்கே தளத்தினில் பதிவு செய்யப்படவில்லை.
போட்டி நடத்தியவரை அலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு பேசியபோது பரிசு பெற்ற மூவருக்கும் தகவல்
தெரிவிக்கப்பட்டுவிட்டது என்று கூறிவிட்டார். அவர்கள் யார் என்றும் கூற மறுத்துவிட்டார். பரிசினை வென்ற
அந்த மூவர் யார் என்று அறிய விரும்புகிறேன். பரிசுபெற்றவர்கள் யார் என்று அறிந்தவராவது கூறுங்களேன்.