வள்ளுவர் கோட்டம் யாருக்கு சொந்தம்?

வள்ளுவர் கோட்டம் சரிவர பராமரிக்கப்படால் பாழடைந்து வருவதாகச் செய்தி வெளியாகி உள்ளது. வள்ளுவருக்கு கலைநயத்துடன் கட்டப்பட்டது அந்த நினைவுச் சின்னம் இருப்பது சரியில்லையா? அல்லது கண்ணகி சிலை யாரோ ஒரு அரசியல் தலைவருக்குப் பிடிக்காமல் அதை எடுத்துச் சென்று அருங்காட்சியகத்தில் சில ஆண்டுகள் வைத்திருந்தார்களாம். 'தி இந்து" வில் வெளியான செய்தியை மேலே பார்த்தீர்கள். தமிழ்ப் பற்றும், தமிழுணர்வும், தமிழ் இன உணர்வும் உள்ள தமிழன் என்ற வகையில் எனது ஆதங்கத்தைத் தெரிவித்து எழுத்து உறுப்பினர்களின் கருத்தை அறிய விரும்புகிறேன்.

1. வள்ளுவர் கோட்டம் யாருக்குச் சொந்தம்.
2. அரசுப் பணத்தில் கட்டப்பட்டது என்றால் அதை பராமரிக்கும் பொறுப்பு யாருடையது.
3. திருவள்ளுவர் திமுகவைச் சேர்ந்தவர் என்று எண்ணி வள்ளுவர் கோட்டத்தை பராமரிக்க அரசு விரும்பவில்லையா?
அன்பு நண்பர்களே உங்கள் கருத்துக்களைப் பதிவிடுமபடி அன்புடன் வேண்டுகிறேன்



கேட்டவர் : மலர்91
நாள் : 23-Feb-17, 12:21 am
0


மேலே