உருட்டல் சுருட்டல்

அரசியல் தத்துவம்
அரசியல் என்றால்
பகடை உருட்டுதல் அன்று
பணத்தைச் சுருட்டுதல் இன்று !

----கவின் சாரலன்
----இது தற்போதைய நிலமையைப் பிரதிபலிக்கும் எனது கவிதை

'ஐவரை மணந்தவளை பணயமாக வைத்து சூதாடித் தோற்றதும் அரிசியல்தானே? .
பெண்ணை ஒரு பொருளாக நினைத்த தருமர் அரச வம்சத்தைச் சேர்ந்த அறிவாளி! போற்றுவோம்"
---இது பேராசிரியர் மலரின் சடைரிக்கல் பதில்

சூதுப் பகடையை உருட்டினான் சகுனி
மாதுவையும் பொருளாய் வைத்தான் மன்னன்
ஏது என்று என்று கேட்க இல்லை பெரியோரும் அவையில்
தீது வென்றால் தருமனும் தோற்பான் தருமமும் தோற்கும் !

அண்ணாச்சி பாரதி பாஞ்சாலி சபதத்தில் சொல்லுவாரு :

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
தருமமே மீண்டும் மீண்டும் வெல்லும் !

அங்கதம் தொக்கி நிற்கும் அழகிய கருத்து
மிக்க நன்றி கவிப்பிரிய மலர்
-----இது நான் அவருக்கு அளித்த பதில்

உங்களுக்கான கேள்விகள் ----
சூதாடுதல் பண்டைய மன்னர்களின் மரபு பழக்கம் வழக்கம்
ஒரு மன்னன் சூதிற்கு அழைத்து மற்றோரு மன்னன் செல்ல வில்லையானால் போருக்கு அழைத்து எதிர்கொள்ளாத அவமானத்திலும்
பெரிது .என்ன பழக்கமோ வழக்கமோ ?

௧.இது சரியா ?

௨. தருமன் என்ற பெயர் வைத்துக் கொண்டு சூதாடுதல் சரியா ?

௩ . பொன்னை பொருளை மாளிகையை வைத்தாடியவன் தன்
தம்பியாரையும் வைத்து ஆடுகிறான் ?என்ன வினோதம் .சரியா

௪.அந்தோ பரிதாபம் .சூதின் போதையில் தன்னையும் வைத்து ஆடுகிறான்
தருமன். என்ன சொல்கிறீர்கள் ?

௫. அஞ்சு பாஞ்சாலி . பொன்னைப் பொருளை தம்பியாரை தன்னை
வைத்து ஆடினான் . போகட்டும்
கட்டிய மனைவியை பெண்ணைப் பொருளாக வைத்துச் சூதாடியது
என்ன நியாயம் ? சரியா ? தருமன் செய்தது தருமமா ?

------கவின் சாரலன்



கேட்டவர் : கவின் சாரலன்
நாள் : 18-May-17, 9:01 am
0


மேலே