பொன்னியின் செல்வன்

(Tamil Nool / Book Vimarsanam)

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன் விமர்சனம். Tamil Books Review
பொன்னியின் செல்வன் ராஜ ராஜன் சோழன் பற்றிய கதை.

இக்கதையின் நாயகன் சாகச வீரன் வந்தியத்தேவன். பலதரப்பட்ட தடைகளைத் தாண்டி ஆதித்த கரிகாலன் தன் தந்தை சுந்தர சோழருக்கு கொடுத்தனுப்பிய ஓலையை வந்தியத்தேவன் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாய் இருக்கும் சுந்தர சோழரை சந்தித்து கொடுக்கிறான். அச்சமயம் புலவர்கள் பலர் வந்து சுந்தர சோழர் மற்றும் சோழ மன்னர்களின் பெருமையை பாடல்களாக பாடுகின்றனர்.

இதை வெறும் கதை என்று மட்டும் சொல்லாமல், அந்த காலகட்டத்தின் ஒரு வரலாறு பதிவாகவே இதனை படைக்கின்றார் கல்கி. அங்கு நடக்கும் வெவ்வேறு கலாசார நிகழ்வுகளையும் பதிவு செய்கின்றார்.

பொன்னியின் செல்வரின் சகோதிரியும் வல்லத்து நாட்டு வந்தியதேவனின் மனதை கொள்ளை கொள்ளும் குந்தவை நாச்சியாரின் தெளிவு, நேர்த்தி, புத்திகூர்மை நம்மை வியக்க செய்கிறது. படகு பெண் பூங்குழலியின் தைரியம், வீரம் மற்றுமொரு வியப்பு.

ஒரு சரித்திர கதையை சாதரணமாக சொல்கிற பொன்னியின் செல்வன் ஒரு வரலாற்றுப்பெட்டகம் என்று தான் சொல்ல வேண்டும்!


நூல் ஆசிரியர்சேர்த்தவர் : Eluthu 27-Mar-14, 6:43 pm
4.3 (26/6)
Close (X)


பொன்னியின் செல்வன் தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.comமேலே