எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

                    தமிழ் – சிறந்த கதை 

கிளியின் கீச் கீச்
குயிலின் குக்கூ
புலியின் உறுமல்..ஊய்
காகங்களின் கா..கா
கா..காவில் ஒன்று கூடியது
கண்டான் ஆதி மனிதன்.  

ஆதி மனிதக் கூட்டம்
ஆறில் ஒன்று
சைகையின் போதாமை
புரிந்த போது
ஒலிக் குறிப்புகளில்
சொற்கள் செய்தார்கள்.

அம்மணம் , இலை தழை
ஆடைக்கு வந்தன.

சொற்களின் பிசுறுகள் 
செதுக்கப் பட்டன. 
வளைவுகள் நிமிர்த்தப்பட்டன. 

காலந்தோறும்
தட்டி தட்டிச்
சரிசெய்யப்பட்டது.
செதுக்கிச் செதுக்கிச்
செம்மையானது.  

உற்சாகமும் ஓய்வும்
படைப்பாற்றலும்
மொழியை அழகாக்கி
அலங்கரிக்க 
இலக்கியம் தோன்றின.

வரைமுறைப் படுத்த
இலக்கணம் கட்டமைக்கப்பட்டது
மானுடக் கொண்டாட்டங்களில்
கலைகள் உருக்கொண்டன.

ஒலிக் கூட்டமைப்பின்
மொழிக் கட்டமைப்பில்
தமிழ்
வசீகரமும் , வனப்பும்
ஒய்யாரமுமாய்
உலா வந்தது.

பிறர் , பிறர்
கண்டு , கேட்டுக்
களித்தார்கள்.

ஒப்பீடுகளின்
தராசுத் தட்டில்
தமிழ் எடையால்
தாழ்ந்தபோது
தலை நிமிர்ந்தது.

வள்ளுவன் , கம்பன்
வரிசையில்
அறிவின் வெளிச்சம்பட்டு
ஒளிச்சுடர் தகத்த காயம்.

காலந்தோறும்
சந்ததி கைகளில்
ஒப்படைக்கப்பட்டது.

சில, சின்னத் தடும்மற்றங்கள்
எதையும் குலைத்து விடவில்லை.

தமிழ்
பிறந்து வளர்ந்து
சிறந்த கதையிது. n|+���2

மேலும்

வள்ளுவன் என்றொரு பிள்ளையைப் பெற்றவள்

வாழ்வில் கலந்து வாழுகிறாள்.
துள்ளி எழுந்தவள் நல்லிளங்கோ மகன்
சொல்லில் எழுந்தவள் ஆளுகிறாள்.
கள்ளையும் மீறிய போதையில் ஊறிய
கமபனில் வளர்ந்தவள் கூடுகிறாள்.
பள்ளியறையையே பார்க்காமல் கன்னியாய்
பிள்ளைகள் கோடி பெற்றெடுத்தாள்.
பாரதி பெற்றவள் தாசருக்கு உற்றவள்
பால் சுரந்து ஊட்டிட ஏங்கியவள்.
யாரெவர் கூறிய மார்பினைக் கீறிய 
ஆர்வ மொழிகளைத் தாங்கியவள். 
ஆறேழு மொழிகளின் தாயிவள் ஆயினும் 
அன்றுபோல் இன்று பால் சுரக்கிறாள்.
சீரிய மதுரையில் தேறிய புலவரால் 
சங்கம் வளர்ந்தவள் , வளர்க்கிறாள். ��t���

மேலும்

                    இனிமை இருக்க காண்போமே! 

முருகு என்ற சொல்லில் தான் 
 அழகென்பதை காண்போமே!
 தமிழென்ற சொல்லில்தான் 
 இனிமை இருக்க காண்போமே!   
தமிழன்னை பூண்ட அணிகலன்கள் 
காதில் பூண்டாள் குண்டலகேசி 
கரங்களில் சேர்த்தாள் வளையாபதி 
 தீதில்லா நீதிகேட்ட சிலப்பதிகார  
 சிலம்புகள் தன்னை அணிந்துள்ளாள் 
இடையில் உள்ளதோ மணிமேகலை 
எழில் காவியமானாள் சீவகசிந்தாமணி 
என்றென்றும் அழியா காவியமானாள்   
அமிழ்தாய் தமிழாய் இருப்பதனால் 
மகிழ்வாய் மனதில் வடித்திடுவோமே! 
பொழுதாய் இனித்திடும் பனித்துளியாய்
 பூந்தமிழ் என்னை முகிழ்த்திடுமே!   
விழுதாய் தருக்களில் உள்ளதுபோல் 
விழுதாய் எம்மொழியாம் தமிழ்தானே 
பழுதே இலாது நம்மில் தங்கிடுமே 
 போற்றி வணங்கி வாழ்த்திடுவோம்!   --- கே. அசோகன்.         

மேலும்

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு எழுத்து நடத்தும் எண்ணம் போட்டி

எண்ணம் பகுதியில் தமிழ் மொழியின் பெருமை பற்றிய கூற்றுகளை பகிரவும். (Share Tamil Language Facts). உங்கள் பகிர்வு எழுத்து, படம் மற்றும் காணொளி என்று எது வேண்டுமானாலும் இருக்கலாம்.

சிறந்த தமிழ் கூற்றிற்கு பரிசு வழங்கப்படும்.
எண்ணம் சமர்பிக்க இறுதி நாள் : 18 / 04 / 2016 

எடுத்துக்காட்டு:
1. உலகத்தில் உள்ள 75 மில்லியன் மக்கள் தமிழ் மொழியை பேசுகிறார்கள்.2. உலகத்தில் தமிழ் பேசக்கூடிய மக்களில் ஒருகால் அளவு மக்களுக்கு தமிழ் படிக்கவோ, எழுதவோ தெரியாது.3. உலகத்தில் மொத்தம் 6809 மொழிகள் உள்ளன. இதில் பேசும் மற்றும் எழுதும் மொழிகள் 700. அதில் 100 மொழிகள் தங்கள் சொந்த  அகரவரிசை கொண்டது. 6 மொழிகள் செம்மொழி ஆகும். அவை ஹீப்ரூ, ஓல்ட் கிரேக், சமஸ்க்ரிதம், சீனா மொழி மற்றும் தமிழ். அனால் ஹீப்ரூ, சீனா மொழி மற்றும் தமிழ் மட்டும் தான் இன்றும் மக்களால் பேசப்படுகின்றது. ஆகையால் தமிழன் என்பதில் நாம் பெருமை கொள்வோம்.

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.



மேலும்

எந்த பக்கத்தில் முயற்சித்தீர்கள்? சேர்க்கும் போதா அல்லது திருத்தும் போதா? 18-Apr-2016 2:11 pm
தமிழ் மொழி ஆறு கோடி மக்களின் தாய்மொழி அறு சுவையை மிஞ்சுகின்ற வாய்மொழி அகரத்தில் தொடங்கும் சிகரமொழி தகரத்தை தங்கமாக்கும் லகரமொழி அகத்தியன் கண்ட அமுதமொழி தமிழன் அகத்தினுள் கொண்ட குமுதமொழி ழ விற்கு பக்கத்தில் க வரிசை கொண்ட தனிமொழி க வை மெய்யாய்க் கனியவைக்கும் கனிமொழி சொற்சாலத்தால் மயங்கவைக்கும் மதுமொழி கல்தொன்றும் முன்தோன்றிய முதுமொழி வள்ளுவன் வார்த்தெடுத்த குரள்மொழி வல்லினத்தை வளர்த்தெடுக்கும் குரல்மொழி ஔவையார் பார்த்தெடுத்த வளர்மொழி அங்கவை கோர்த்தெடுத்த மலர்மொழி மதுரைச் சங்கத்தில் குடியிருக்கும் வான்மொழி மலரின் அங்கத்தில் குவிந்திருக்கும் தேன்மொழி உலகத்து மொழிகளின் செம்மொழி இம்மொழிக்கு ஈடு இணை எம்மொழி ? தமிழுக்காக தலைவணங்கும் என் சிரம் தமிழ் வளர என் உடல் ஆகட்டும் உரம் .. 18-Apr-2016 12:35 pm
எண்ணம் பகுதியில் எண்ணம் சமர்பிக்க முடியவில்லை..பதிந்தால் எண்ணம் சமர்ப்பிக்கப்படவில்லை. இது உங்கள் எண்ணம் அல்ல என்று வருகிறது ஏன்? 17-Apr-2016 4:59 pm
தொன்மை வாய்ந்த தமிழ் மொழி துவண்டு விழாத தனி மொழி தனித்துவமான எழுத்துகளை தன்னகத்தே கொண்ட மொழி 1 நான் இறக்கும்வரை அன்னையாக வாழும் என் அன்னைத்தமிழ் இறந்த பின்னும் பிள்ளையாகி தவழ்ந்துவரும் பிள்ளைத்தமிழ் 2 வாழும் தமிழ், உயர்ந்து வளர்வதும் தமிழ் வீழும் என்று சொல்லாதீர் வெறும் கனவு காணாதீர் 3 தமிழ் மொழி குறித்து கூற்றுகளை சமர்பித்து விட்டேன். படம் வரைய வேண்டுமா என்பதை தெரியப்படுத்தவும் 16-Apr-2016 1:06 pm

மேலே