எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

       
        விவசாயி நம் உயிர்நாடி

விவசாயி நம் உயிர் நாடி
தினம்தினம் அவனும் போராடி
வீதிக்குச் சென்றான் கூத்தாடி
உயரப் பறக்கும் காற்றாடி – கடன்
அவன் உயிரைக் குடிக்கிறது ஆத்தாடி
பருவம் வந்த பின்னாடி
பயிர்த் தொழில் செய்வான் உழவாடி
வாடும் பயிரைக் கண்டபடி 
உயிரை விட்டான் கடவுளடி
இரும்பு உள்ளம் உள்ளவனடி
துரும்பாய் ஆனான் உழைத்தபடி
போட்டியில் உலகம் ஓடுதடி – அவனை 
பசியில் மட்டும் தேடுதடி
உழுநிலம் எல்லாம் அழிந்தபடி
சாலைகள் எல்லாம் அமையுதடி
வருமானம் எல்லாம் குறைந்ததடி
வறட்சி அவனை வாட்டுதடி
தற்கொலை எல்லாம் பெருகுதடி – இன்று 
தண்ணீரை இரக்கும் நிலை வந்ததடி
விஞ்ஞானம் எல்லாம் வளர்ந்ததடி – ஆனால் 
விவசாயி கவலை தீரவில்லையடி
உயிர் போன பின்னாடி
ஊரே வரும் பெருமைபாடி – என்றும்
விவசாயியே நம் உயிர் நாடி.
                                        வினோத்.செ

மேலும்

இயற்கை விவசாயியின் வாழ்க்கை அனுபவங்கள் ! இயற்கை விவசாயியின் இன்றைய நிலைப் பற்றிய தங்கள் படைப்புக்கு பாராட்டுக்கள் நானும் ஒரு இயற்கை விவசாயம் பண்ணும் நம்மாழ்வார் சீடனே ! 04-Jun-2019 5:24 am

இவ எடுத்த களையில 

நெல்லு வெலஞ்சி
போச்சி....!
அதுக்கு எவனோ
வச்ச விலையில
வறும வந்து போச்சி

மேலும்

வறுமை வந்து போனாலும் பரவாயில்லையே.... வந்தா போய் தொலைய மாட்டேங்குதே....! 07-Feb-2019 4:23 pm
நல்ல முயற்சி; இன்னும் பயிற்சி செய்து நன்றாக எழுதுங்கள். 07-Feb-2019 4:20 pm

விரும்பியது கிடைக்கும்
விருப்பம் போல்
இந்த வாழ்வும் இருக்கும்..

பழகிய வட்டத்துக்குள்
பழகாத அனுபவம்
வந்து சேரும் வரை- இங்கே
உலகத்தை யோசிக்க
மனம் தான் வெறுக்கும்...

போகவிட்டு பார் வாழ்வை..
நீ போகும் பாதை
மட்டும் இல்லை இவ்வுலகம்..

ஓர்னாள் உனக்கும் புரியும்..
புரியும் போதே வறுமை தெறியும்..

மிடுக்காக உடை உடுத்தி
மின்சார குளுரூட்டி
வெப்பம் அப்புறப்படுத்த

மாதச் சம்பளம் வங்கியில்
வந்து விழ

வாழ்வை உன் பார்வையில்
பார்க்கும் உனக்கும்
விவாசாயம் பெரிதெனெ
எடுத்து உரைத்திட
ஓர் நொடி வந்தே தீரும்..

காதல் கசக்கும்..

பொண்டாட்டி விசம் ஆவாள்

அம்மா கடவுள் ஆவாள்..

என்னடா வாழ்க்கை 
ச்சே செத்துடாலாம் தேவலை
அப்பிடினு நினைக்கும் போது
தினமும் செத்து செத்து
உயிர் வாழுகின்ற விவாசாயியை
யோசனை செய்...

நாட்டுக்கு கார்பரேட் கம்பெனியை
மிஞ்சி விவாசாயமும்
அவசியம் என புரிவாய்
என் நகரத்து வாழ் இளைஞனே..

மேலும்

எங்கு சென்றாலும் எந்த மூளைக்கு சென்றாலும் இறுதியில் நம் வீட்டிற்கு தான் வந்தடைய வேண்டும்; அதே போல தான் விவசாயமும் எங்கு சென்று எத்தனை விதமான கருவிகளை கண்டுபிடித்தாலும் ஏர் உழுது விவசாயம் செய்வது தான் நம் பாரம்பரியம் என்பதை மறந்து விடாதே மானிடா...

மேலும்

தினமும் விழிக்கிறோம் அன்றாட கடமைகளை செவ்வனே செய்கிறோம். காய்கறி கடையில் இரண்டு நாள் முந்தைய பழையதை புதிய காய்கறி என்று வாங்கி வந்து குளிர்சாதன பெட்டியில் வைத்து இரண்டு நாள் கழித்து சமைத்து உண்கிறோம். இதுவே உண்மையில் சுவையான உணவென்று ருசித்து உண்கிறோம். 
உண்மையில் உணவின் ருசி எதுவென்று தெரியுமா, நம் கைகளால் மண்ணை கிளறி விதையிட்டு, நீர் விட்டு, வளர்த்து துளிர்த்து வளர்ந்த செடி எந்த ரசாயனமும் இன்றி நம் பராமரிப்பில் விளைந்த காய்கறி அப்போதே பறித்து சமைத்து சூடான சோற்றோடு இட்டு சுடச்சுட உண்ணும் போது தெரியும் உண்மையில் சுவையான உணவு எதுவென்று தெரியும். 
பழையதை வாங்கி தின்றுவிட்டு, நீ தின்றதை விளைவிக்கும் விவசாயிகள் வயிற்றில் அடிக்க உனக்கு தைரியம் இருக்கிறதென்றால், உன் வயிற்றுக்கு உணவிட இனி விவசாயம் செய்ய போவதில்லை என விவசாயி உன் வயிற்றில் அடித்தால் தாங்க மாட்டாய்...

மேலும்


மேலே