எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஹோலி பண்டிகை




கண்ணனுக்கு பிடித்தமான
வண்ணம் பல உண்டாம்
அத்துணை வண்ணமும்
ஓரிடத்தில் கூடுமாமொருநாள்!

விருந்தாவனத்தில் பிறந்தவனுக்கு
விழாயெடுப்பதில் பஞ்சமில்லை
கொஞ்சுவதற் கென்றேயொருவிழாவாம்
ஹோலி யென்றபெயராம்!

வேம்புமஞ்சள் வில்வகுங்குமென
வகையாய்சேர்த்து பொடிசெய்து
பல வர்ணக்கலர் கொடுத்து
பலர்கூடுமிடத்தினிலே பக்குவமாய்

வண்ணப் பொடிதூவி..நல்
எண்ணம்பல இன்றயெழவைத்து
நெருப்புக்குள் புகுந்துவிழாவாகி
நிலையாகப் புகழுற்றாய்!

பாரதத்தின் பழம்பெருமை
பறைசாற்றும் விழாதான்
தூள்களைத் தூக்கியெறிந்து
துயரங்களைமறக்க வைக்கும்..

விழாதான்! 

ஹோலியெனும்  திருவிழாவாம்!      

மேலும்

நன்றி திரு வே.ஆ அவர்களே, "ஊளி விழவு" என்று சங்க இலக்கியத்திலே குறிப்பிடப்படும் விழா! "ஹோளகம்" என்று ஸ்ரீவைஷ்ணவ ஆச்சார்யர்கள் சொல்லியுள்ளவிழாவென்றும், கரூரிலே ஊளி/உள்ளி விழா.காவிரியின் அகன்ற மணற்கரையில்கொங்கர்கள் ஆடினர் என்பது சங்க இலக்கியம் எனவும் எனது நண்பர் தமிழ் ஆராய்ச்சியாளர் திரு நா.கணேசன் அவர்கள் தெரிவித்திருக்கிறார். ஹோலி பண்டிகை அன்று கூகுள் நிறுவனம் தன்னுடைய முகப்புப் பக்கத்தை ஹோலி வண்ணத்தால் அலங்கரிக்கப் பட்டு இருந்தது, ஹோலிக்கு உலக அளவில் பெருமையைத் தேடித்தந்துள்ளது. 15-Mar-2017 1:31 pm
போற்றுதற்குரிய கவிதை கற்பனை நயம் அழகு வண்ணஓவியம் . பாராட்டுக்கள் ---------------------- ஹோலி பண்டிகையை காதலர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தும் தினமாகவும் கொண்டாடுகிறார்கள். தங்கள் மனதுக்குப் பிடித்தவர்களை வரவழைத்து, அவர்கள் முகங்களில் சாயங்களை பூசி, தங்களின் அன்பை வெளிப்படுத்துகின்றனர். மொத்தத்தில், அனைத்து தரப்பு மக்களும் புன்னகையுடனும் சகோதரத்துவத்துடனும் தங்கள் அன்பை வெளிப்படுத்தி மகிழும் தினமாக இந்த ஹோலி பண்டிகை அமைகிறது.வடமாநிலங்களில் மிக சிறப்பாக கொண்டாடுவதைப் போல், தென்னிந்தியாவில் அனைத்து தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்து நாமும் ஹோலி பண்டிகையை கொண்டாடி மகிழ்வோம் . என் கனவு நிறைவேறுமா? 14-Mar-2017 3:35 pm
நன்றி கவிஞர் கவின் சாரலன் அவர்களே 13-Mar-2017 7:54 pm
வில்வம் என்பது சிவபெருமானுக்கு உரியது. உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிது. இதன் இலை மற்றும் குங்குமம், வேம்பு, மஞ்சள் இவையெல்லாம் இயற்கையாக சேர்த்து செய்கின்ற தூளை ஒரு வாரம் முன்பே தயார் செய்து ஹோலிப் பண்டிகை கொண்டாடுவர் வடநாட்டில்... இப்போது ரசாயனம் கலந்த தூளைத்தான் பார்க்க முடிகிறது.. 13-Mar-2017 7:49 pm

மேலே