எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

திண்டிவனம்
~~~~~~!!!
திண்டிவனம் மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள்...

எல்லோரும் அறிவார்கள் திண்டிவனத்தை ...கபாலி படத்தில் ரஜினி அவர்கள் சொல்வார்கள் ...காதல் படத்தில் உனக்கென இருப்பேன் பாட்டிற்கு முன் திண்டிவனம் போ அப்டியே விடிஞ்சிடும் என்று சொல்வார் நண்பர் ...ஆமாம் திண்டிவனம் சென்னைக்கு அருகில் உள்ளது ...திண்டிவனத்தில் இருந்து சென்னைக்கு இரண்டரை மணிநேரத்தில் சென்று விடலாம் , பாண்டிச்சேரிக்கு நாற்பத்தைந்து நிமிடத்தில் சென்று விடலாம் ...
அழகிய தமிழ் மகன் படத்தில் சொல்வார்களே திண்டிவனத்தில் உள்ள விட்டு பாண்டிச்சேரிக்கு வண்டிய விட்டுட்டானுங்க அய்யா ...

* மிடில் கிளாஸ் மாதவன்
* வாஞ்சிநாதன் மேம்பாலம் கோர்ட் - திண்டிவனம்
* திண்டிவனம் ஸ்டேஷன் ல என்று ஒரு பாடல் நடுவில் வரும்

இன்னும் நிறைய நிறைய ,.....
வெறும் படம் மட்டும் அல்ல ....

சங்க இலக்கியங்களில் முக்கியமான ஊர் ...
* சிறுபாணாற்றுப்படை - திண்டிவனம் (ஓய்மானாடு , கிடங்கில் - இங்கே கிடங்கல் இருக்கிறது )
* பல்லவர் பகுதியில் வரும் ,,சோழர் கட்டிய கோவில்கள் , பாண்டியர் கட்டிய கோவில்கள் ...
* வரலாற்று சிறப்பு மிக்க செஞ்சி மிக அருகில் .....


விழுப்புரத்திற்கு ஒரு மணிநேரத்தில் சென்று விடலாம் ...
திருப்பதிக்கு சாதாரண ரயிலில் எட்டு மணிநேரத்தில் சென்று விடலாம் ..
செஞ்சிக்கு நாற்பத்தைந்து நிமிடத்தில் சென்று விடலாம் .

விழுப்புரம்
*********
எங்கேயும் எப்போதும் படத்தில் பார்த்திருப்பீர்கள் ...
முண்டியம்பாக்கம் மருத்துவமனையை ....

காதலும் கடந்து போகும் படத்தில் நாயகியை விழுப்புரம் என்று சொல்வார்கள் ...

அப்புறம் விழுப்புரம்  ஜெயம் இடத்திலும் இந்த வசனம் வரும் .

உலக பிரசித்தி பெற்ற  கூவாகம்  கூத்தாண்டவர் கோவில் - விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்ப்பேட்டை வட்டம் ..

* தெனாவட்டு படத்தில் கூவாகம் கூத்தாண்டவர்  கோவில் குறிப்பிட்டார்கள்,

பாண்டிச்சேரி
**********
மிகவும் அழகான அமைதியான ஊர்...
இங்கே எண்ணற்ற படங்கள் எடுத்திருக்கிறார்கள் ....
குறிப்பாக ...

உற்சாகம்
இரும்பு குதிரை
நானும் ரவுடி தான் .....


மேலும்

திண்டிவனம்
~~~~~~~~~~
இந்த வீடியோ சென்னை , கடலூர் வெள்ளம் 2015 அப்பொழுது எடுக்கப்பட்டது ...

தமிழ்நாட்டின் போக்குவரத்தில் மிகவும் தவிர்க்க முடியாத நகரம் தான் திண்டிவனம் ...
ஆனால் இதுவரை ஒரு முறையான முழுமையான பேருந்து நிலையம் கிடையாது ...
திண்டிவனம் ரவுண்டானா(சென்னை ,காஞ்சிபுரம் ,விழுப்புரம்,பாண்டிச்சேரி ,திருச்சி ,கும்பகோணம் ,செஞ்சி , திருவண்ணாமலை , மருவத்தூர் , மேல்மலையனுர் ,வந்தவாசி ,மயிலம் , சேலம் ,கடலூர், பண்ருட்டி ,கள்ளக்குறிச்சி...... ராமேஸ்வரம் , கன்னியாகுமரி,தூத்துக்குடி ,ஈரோடு ,மதுரை, சிவகங்கை ,தஞ்சாவூர்....இப்படி தமிழ் நாட்டின் எந்த இடத்திற்கும் பேருந்து கிடைக்கும் திண்டிவனத்தில் )  , பழைய பேருந்து நிலையம் , திண்டிவனம் செஞ்சி ரோடு நிறுத்தம்(பஜார் வழி ...திண்டிவனம் மார்க்கெட் வழியில்) , மேம்பாலத்திற்கு மேல் என்று மக்கள் கால்  வலிக்க நிற்கிறார்கள்  ....

என்னால் முடிகிறது தாத்தா ,பாட்டி , கர்ப்பிணி ... உடல் நிலை சரியில்லாதவர்கள் இவர்கள் எல்லாம் ...
தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் கால் வலிக்க வலிக்க நிற்கிறார்கள் ...
திண்டிவனம் பேருந்து நிலையம் மிகவும் அவசியமானது திண்டிவனத்திற்கு  மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் மக்களுக்கும் ....
இங்கிருந்து எத்தனை எத்தனை அரசியல்வாதிகள் ...வளர்ந்திருக்கிறார்கள்...தமிழ்நாட்டு அரசியலில் மிகவும் முக்கியமானவர்கள்..எல்லோருக்குமே தெரியும் ...ஆனால் பல வருடங்களாக இந்த நிலை தான் நீடிக்கிறது ...
#WeWantTindivanamBusStand 

மேலும்

புளியங் காடு= திந்திருணி(திந்திரி) வனம் = திண்டி வனம்(வடமொழியில் திந்திருணி என்றால் புளி) (வனம் -சமஸ்கிருத பரவல் )
* குறிப்பு : தமிழில் திண்டி என்றால் யானை. ஆனால் இது அந்த பொருளில் கிடையாது. காரணம் இங்கு யானைகள் அதிகம் கிடையாது . முற்காலத்தில் திண்டிவனம் புளியமரக்காடாக இருந்தது. வட மொழியில் “திந்திருணி‘ என்பது புளியமரத்தை குறிக்கும். திந்திருணி வனம் என்பது மருவியே திண்டிவனம் ஆனது.

* திண்டிவனம் சிவன் கோவிலின் பெயர் திந்திருணீஸ்வரர் ஆலயம்.

மேலும்


மேலே