எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நேற்று இரவு மணி பதினொன்று இருக்கும். முப்பத்தி ஐந்து வயதுடைய ஒரு பெண் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்தார்.

இங்கு பஸ் வருமா என கேட்டார்.
மணி பத்திற்குமேல் பஸ் வராது என்றேன்.  செய்வதறியாது திகைத்தார். நான் சொன்னேன் வாருங்கள் என்னுடன் நான் பஸ் வரக்கூடிய பஸ் ஸ்டாப்பில் இறக்கிவிடுகிறேன் என்று.

போகும் வழியில் சொன்னார் இருபது வயதுடைய அவரின் மகன் குடிக்கு அடிமையாகி தினமும் வீட்டில் தகராறு செய்துகொண்டு இருக்கிறார். ஆதலால் இங்குள்ள மது திருத்தகத்தில் சேர்த்திருக்கிறேன்.  வெளியூரிலிருந்து வந்து தினமும் அவனிடம் பேசி செல்வேன். இன்று நேரமாகிவிட்டது, இந்த குடியால் என் குடும்பமே சீரழிந்து விட்டது என்று கவலையுடன் சொன்னார்.
அனைவரின் குடும்பத்திலும் இந்த குடி பேரிடியாக இருக்கிறது என எண்ணிக்கொண்டேன்.
இறக்கிவிட்டு வந்துவிட்டேன். ஆனாலும் என் நினைவுகள் அவர் பஸ் ஏறிவிட்டாரா? வீடு போய்சேர்ந்து விட்டாரா? என்றவாரே இருந்தது.

மது இல்லாத நாடு இருந்தால் எவ்வளவு சந்தோசமாக இருப்பர் நம் நாடு பெண்கள் சிறுவர்களெல்லாம் இன்று அடிமையாகிவிட்டனரே.

மேலும்


மேலே