எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நீர் பாதுகாப்பு

வீடுகளில் நீர் சேமிக்கும் தொழில்நுட்பம்

குறைந்த-நீரோட்டம் ஸவர் ஹெட்ஸ் (குறைவான சக்தி உபயோகிப்பதாலும், குறைவான நீர் சூடாக்கப்படுவதாலும் சில நேரங்களில் எனர்ஜி- எஃபிசியண்ட் ஸவர் ஹெட்ஸ் என்றும் அழைக்கப் படுகிறது).

லோ-ஃபிளஷ் டாயிலட்ஸ் மற்றும் காம்போஸ்டிங் டாயிலட்ஸ் உலகின் வளரும் நாடுகளில் இவை வியக்கதக்க விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன, வழக்கத்திலுள்ள வெஸ்டர்ன் டாயிலட்கள் அதிகப்படியான நீரை உபயோகிக்கின்றன.

உப்பு நீர் ( கடல் நீர்) அல்லது மழை நீரை ஃபிளஸ்சிங் டாயிலட்டுகளில் உபயோகிக்கலாம் .

குறைந்த நீரை உபயோகிக்கும் போது ஃபாகட் எரியேட்ர்ஸ் நீரை சிறு துளிகளாக மாற்றுபவை மூலம் "ஈரமாக்கும் விளைவுகளை"(வெட்டிங் எஃபக்டிவ்நெஸ்) ஏற்படுத்தலாம்.. கூடுதல் பயனாக கைகளை கழுவும் போதும், விசிறி அடிக்கும் போதும் வெளிப்படும் நீரைக் குறைக்கிறது.

தேவையற்ற நீர் மறுபயன் அல்லது மறுசுழற்சி முறை, அளிக்கிறது:

கழிவறையை சுத்தமாக்க அல்லது தோட்டத்தை நனைக்க கிரே வாட்டரை மறுபயன் படுத்தலாம். மற்றும் நீரை தூய்மையாக்கும் கலங்கள் மூலம் தேவையற்ற நீரை மறுசுழற்சி செயவது.

மழை நீர் சேகரிப்பு

அதிக-திறனுள்ள துணி துவைப்பிகள்

காலநிலை சார்ந்த நீர்பாசன கருவிகள்

சொட்டும் ரப்பர்க்குழாய்களுக்கு பதிலாக, ஹோஸ் நாஸில் மூலமாக நீரை மூடி வைப்பது தேவையில்லாத போது.
நீரானது மாறும் இயல்புடையதால் நிலையான இடத்தில் உள்ள தாவரங்களுக்கும், ஸவர்களை குறைப்பதன் மூலமும், பற்களை சுத்தம் செய்யும் போது குழாயை அடைப்பதனாலும்.

வணிகம்

நிறைய நீர்-சேமிக்கும் சாதனங்களை ( லோ-ஃபிளஸ் டாயிலேட்ஸ்) வீடுகளில் மட்டுமல்லாமல் வணிக நிறுவனங்களிலும் உபயோகப் படுத்தி நீரை சேமிக்கலாம். வணிகத்திற்கான மற்ற நீர்-சேமிக்கும் தொழில்நுட்பங்கள் உள்ளடங்கியது

நீரற்ற கழிவறை

நீரற்ற சீருந்து கழுவுதல்

அகசிவப்பு கதிர் அல்லது கால் கொண்டு இயக்கபடும் குழாய்களை வீடு மற்றும் கழிவறைகளில் உபயோகிப்பதன் மூலம் சிறிய அளவில் நீர் வெளியாவதை தடுப்பது

நடைபாதையை சுத்தம் செய்ய ஹோஸ்க்கு பதிலாக பிரஸ்ஸ்ரைஸ்டு வாட்டர்பிரூம்களை உபயோகிப்பது.

எக்ஸ்-ரே பிலிம் பிராஸஸர் ரீ-ஸ்ர்குலேசன் சிஸ்டம்

கூலிங் டவர் கண்டக்டிவிட்டி கண்ட்ரோலர்

மருத்துவமனைகளில் உபயோகப் படுத்தபடும் வாட்டர்-சேவிங் ஸ்டீம் ஸ்டெர்லைஸர்

விவசாயம்

நீராவியாகுதல், வடிந்து செல்லுதலை குறைப்பது அல்லது சரியான வடிகால் அமைப்பு மூலம் பயிர் பாசனத்திற்கு தேவையான நீரை முறையாக பயன்படுத்தலாம். நிலத்தில் பாசனத்திற்கு எவ்வளவு நீர் தேவை என்பதை இவபோரேஸ்ன் பேன் மூலம் அறியலாம். வெள்ள நீர்ப்பாசனம் என்பது மிக பழமையான வகையாகும், ஒரு சில பகுதிகள் மட்டும் அதிக நீரை பெற்றுக் கொண்டு மற்ற பகுதிகளுக்கு குறைந்த அளவு நீரை மட்டும் அனுப்பும். அதிகப் படியான நீர்ப்பாசனம் என்பது செண்டர்-பெவோட் அல்லது லேட்ரல்-மூவிங் தூவிகளை கொண்டு எல்லா இடங்களிலும் சமமாக பரவும் வகையில் தெளிப்பது. சொட்டு நீர்ப்பாசனம் என்பது மிகவும் விலை உயர்ந்த மற்றும் அதிகமாக உபயோகிக்கபடும் முறையாகும், இவற்றின் மூலம் நீர் தாவரங்களின் வேர்களுக்கு வீணாகாமல் செல்கிறது. மாறும் நீர்ப்பாசன முறையானது மிகவும் விலை உயர்ந்தாக இருந்தாலும் பாதுகாப்பு முறைகளில் கவனம் செலுத்தி நிலவிலுள்ள முறையில் பயன்பெற வேண்டும். நீள் பள்ளங்களை உருவாக்கி நீர் வெளியாவதை தடுத்தும், மணல்களை கொண்டு நிரப்பியும், மணல் ஈரம் மற்றும் மழை அறிவிப்பானை கொண்டும் நீர்ப்பாசன முறையை சிறப்பானதாக மாற்றலாம்.

மறுஊட்ட குழிகள் மூலம் மழை நீரையும், வழியும் நீரையும் சேமித்து நிலத்தடி நீருக்கு மறுஊட்டம் அளிக்கலாம். இவைகள் நிலத்தடி கிணறுகளை உருவாக்க பயன்படும் மேலும் மழை நீரினால் ஏற்படும் மண் அரிப்பையும் குறைக்க உதவும்.

பயனளிக்க கூடிய நீர் கழிப்பு என்பது பயன்பாடு அல்லது வீணாக்குவதாகும்.

நீர் பயன்பாடு குறைப்பு என்பது முறையான பாதுகாப்பு வழிகளாலும், பயன்படுத்தும் முறைகளினாலும் முடிவு செய்யப் படுகிறது. அல்லது ,

மேம்படுத்தபட்ட நீர் மேலாண்மை மூலம் நீரின் உச்ச பலனை பெறவும்,பயன்பாட்டைக் குறைக்கவும் முடியும். 2-3 நீர் பயன்பாட்டு அளவு என்பது ஒரு செயலாகும், நடைமுறை மாற்றங்களாலும், கருவி, தொழில்நுட்பம், மேம்படுத்தபட்ட வடிவமைப்பு அல்லது செய்முறை மூலம் நீர் உபயோகம், குறைவு, வீணாக்குவது ஆகியவற்றை குறைக்க முடியும். நீரின் பயன்திறன் நீர் பயன்பாட்டுக்கான கருவியாகும். பயன்திறனான நீர் உபயோகத்தின் விளைவு நீரின் தேவையை குறைக்கும் நீரின் முக்கியத்துவம் மற்றும் விலை-பயன்திறன் மற்ற இயற்கையின் வள ஆதாரங்களுடன் உபயோகிக்கும் முறை மூலம் அளக்கப் படுகிறது.

மேலும்

47 நீர் நிலை வகைகள்

ஒரு சின்ன குழாயில் நீர் பிடிக்கும் காலத்தில் நாம் இருக்கிறோம். ஆனால், நமது இலக்கியங்களில் சொல்லப்பட்டிருக்கும் நீர் நிலைகள் மொத்தம் 47..எங்கே மறைந்து போனது ? மறைந்து போகவில்லை மறைக்கப்பட்டுவிட்டது .. விடக்கூடாது மீண்டும் எடுக்க வேண்டும் நம் வருங்கால சந்ததிகளுக்காக. இன்றே அதற்கான முனைப்பில் ஈடுபடுவோம் .முடிந்தவரை இதை பகிர்வு செய்யுங்கள் அதுவே நாம் செய்யும் முதல் முயற்சி.

01. அகழி - (Moat) கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண்
02. அருவி - (Water fall)மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது
03. ஆழிக்கிணறு -(Well in Sea-shore)கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு
04. ஆறு -(River) - பெருகி ஓடும் நதி
05. இலஞ்சி -(Reservoir for drinking and other purposes)பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம்
06. உறை கிணறு -(Ring Well)மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு
07. ஊருணி -(Drinking water tank)மக்கள் பருகும் நீர் நிலை
08. ஊற்று - (Spring) பூமிக்கடியிலிருந்து நீர் ஊறுவது
09. ஏரி -( Irrigation Tank) வேளாண்மை பாசன நீர் தேக்கம்
10. ஓடை -(Brook)அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் - எப்பொழுதும் வாய்க்கால் வழி ஓடும் நீர்
11. கட்டுந் கிணக்கிணறு(Built-in -well) - சரளை நிலத்தில் வெட்டி, கல், செங்கல் இவைகளால் சுவர்கட்டிய கிணறு
12. கடல் -(Sea) சமுத்திரம்
13. கம்வாய்(கம்மாய்)-(Irrigation Tank) பாண்டிய மண்டலத்தில் ஏரிக்கு வழங்கும் பெயர்
14. கலிங்கு -(Sluice with many Venturis)ஏரி முதலிய பாச்ன நீர் தேக்கம் உடைப்பெடுக்காமல் இருப்பதற்கு முன் எச்சரிக்கையாக கற்களால் உறுதியாக்கப்பட்ட பலகைகளால் அடைத்து திறக்கக்கூடியதாய் உள்ள நீர் செல்லும் அமைப்பு.
15. கால் - (Channel) நீரோடும வழி
16. கால்வாய் -(Suppy channel to a tank )ஏரி, குளம் ஊருணி இவற்றிக்கு நீர் ஊட்டும் வழி
17. குட்டம் - (Large Pond) பெருங் குட்டை
18. குட்டை- (Small Pond) சிறிய குட்டம். மாடு முதலியன் குளிப்பாட்டும் நீர் நிலை
19. குண்டம் -(Small Pool) சிறியதாக அமைந்த குளிக்கும் நீர் நிலை
20. குண்டு - (Pool) குளிப்பதற்கேற்ற ஒரு சிறு குளம்.
21. குமிழி - (Rock cut Well) நிலத்தின் பாறையை குடைந்து அடி ஊற்றை மேலெழுப்பி வரச்செய்த குடை கிணறு
22. குமிழி ஊற்று - (Artesian fountain)-அடி நிலத்து நீர் நிலமட்டத்திற்கு கொப்பளித்து வரும் ஊற்று
23 . குளம் -(Bathing tank) ஊர் அருகே உள்ள மக்கள் குளிக்கப்பயன்படும் நீர் நிலை.
24. கூவம் - (Abnormal well) ஒரு ஒழுங்கில் அமையாத கிணறு
25 . கூவல் - (Hollow) ஆழமற்ற கிணறு போன்ற பள்ளம்
26. வாளி (stream) ஆற்று நீர் தன் ஊற்று நீரால் நிரப்பி மறுகால்வழி அதிக நீர் வெளிச் செல்லுமாறு அமைந்த அல்லது அமைக்கப்பட்ட நீர்நிலை.
27. கேணி--( large well) அகலமும், ஆழமும் உள்ள ஒரு பெருங் கிணறு
28. சிறை -(Reservoir) தேக்கப்பட்ட பெரிய நீர் நிலை
29. சுனை -(Mountain Pool ) மலையிடத்து இயல்பாயமைந்த நீர் நிலை
30. சேங்கை - (Tank with duck weed) பாசிக்கொடி மண்டிய குளம்
31. தடம் -(Beautifully constructed bathing tank)அழகாக் நாற்பபுறமும் கட்டப்பட்ட குளம்
32 . தளிக்குளம் -(tank surrounding a temple) கோயிலின் நாற்புறமும் சூழ்ந்தமைந்த அகழி போன்ற் நீர் நிலை.
33. தாங்கல் - (Irrigation tank) இப்பெயர் தொண்ட மண்டலத்தை ஒட்டிய பகுதியில் ஏரியை குறிக்கும்
34. திருக்குளம் - (Temple tank) கோயிலின் அணித்தே அமைந்த நீராடும் குளம். இது புட்கரணி எனவும் பெயர் பெறும்
35. தெப்பக்குளம் -(Temple tank with inside pathway along parapet wall)ஆளோடியுடன் கூடிய, தெப்பம் சுற்றி வரும் குளம்
36. தொடு கிணறு -(Dig well) ஆற்றில் அவ்வொப்பொழுது மணலைத்தோண்டி நீர் கொள்ளும் இடம்
37. நடை கேணி - (Large well with steps on one side) இறங்கிச் செல்லும் படிக்கட்டமைந்த பெருங் கிணறு
38. நீராவி -(Bigger tank with center Mantapam) மைய மண்டபத்துடன் கூடிய பெருங் குளம். ஆவி என்றும் கூறப்படும்
39. பிள்ளைக்கிணறு -(Well in middle of a tank) குளம் ஏரியின் நடுவே அமைந்த கிணறு.
40. பொங்கு கிணறு -(Well with bubbling spring) ஊற்றுக்கால் கொப்பளித்துக்கொண்டே இருக்கும் கிணறு
41. பொய்கை -(Lake) தாமரை முதலியன மண்டிக்கிடக்கும் இயற்கையாய் அமைந்த நீண்டதொரு நீர் நிலை
42. மடு -(Deep place in a river) ஆற்றிடையுடைய அபாயமான பள்ளம்
43. மடை -(Small sluice with single venturi) ஒரு கண்ணே உள்ள சிறு மதகு
44. மதகு -(Sluice with many venturis) பல கண்ணுள்ள ஏரி நீர் வெளிப்படும் பெரிய மடை அடைப்பும் திறப்பும் உள்ளது
45. மறு கால் -(Surplus water channel) அதிக நீர் கழிக்கப்படும் பெரிய வாய்க்கால்
46. வலயம் -(Round tank) வட்டமாய் அமைந்த குளம்
47. வாய்ககால் -(Small water course) ஏரி முதலிய நீர் நிலைகள்

மேலும்

நீர்நிலைகள்

நீர் நிலைகளை அவற்றின் அளவுக்கு ஏற்பவும் பயன்பாட்டுக்கு ஏற்பவும் பல்வேறு பெயர்களால் தமிழர்கள் அழைத்து வந்துள்ளனர்.

குளம் (குளிப்பதற்காக அமைக்கப்பட்டவை)
ஏரி (ஏர் தொழிலுக்காக {பயிர்ச் செய்கை) அமைக்கப்பட்டவை)
ஊருணி (ஊரார் உண்ணுவதற்காக {சுத்தமான குடிநீர்த் தேவைக்காக)
பொய்கை (மலர் நிறைந்த நீர் நிலை)
மடு
கேணி (ஆலயங்களுக்கு அருகாமையில் அமைந்த நீர் நிலை)
மோட்டை
அள்ளல்
கிணறு
துரவு (தோட்டஞ் செய்வதற்காககத் தோண்டப்பட்டவை)
தடாகம் அல்லது வாவி
ஓடை
அளக்கர் (அளக்க முடியாத நீர் நிலை- கடல்)
அசம்பு (உள்நாட்டில் காணப்படும் கழிமுகம் அல்லாத நீர்கோர்த்த களிமண் நிறைந்த சேற்று நிலம் )
அள்ளல் (சேறு பொருந்திய நீர் பள்ளம்)
அகழி - கோட்டைக்கு வெளியே அகழ்ந்து அமைக்கப்பட்ட நீர் அரண்.(ஆழமான நீர் கொண்ட பாதுகாப்பான இடம்)
அயம் - அருவி கொட்டுமிடத்தில் பொங்கிக்கொண்டிருக்கும் நீர்நிலை.
ஆழிக்கிணறு (தற்போது இது நாழிக்கிணறு என்று அறியப்படுகிறது) - கடலருகே தோண்டி கட்டிய கிணறு. தமிழகத்தின் திருசெந்தூரில் இவ்வாறான நீர் நிலை தற்போதும் உள்ளது.
இலஞ்சி - பலவகையான பயன்பாட்டிற்காக தேக்கப்படும் நீர்.
கயம் - சமவெளியில் ஆறு பாய்ந்து நிரம்பும் நீர்நிலை.
கழி - உப்பங்கழி, கடல்நீர் பாய்ந்து தேங்கிய நீர்நிலை.
சுனை - மலைப்பகுதியில் பாறைகளுக்கிடையே தேங்கும் நீர்நிலை.(சிறிதளவு நீருள்ள பள்ளம்)
மடு - சமநிலத்தில் ஆறு பாயும்போது ஒதுங்கும் அதிமெல்லோட்ட நீர்நிலை.
குட்டை - குடிநீருக்காக இன்றி வளர்ப்பு விலங்குகளைக் குளிப்பாட்டுவதற்காகத் தேக்கப்படும் நீர்.
கூவல் - கிணறுபோன்ற நீர் தேக்கம். ஆனால் ஆழமற்றது.
தருவை - பெரிய ஏரி

மேலும்

போற்றுதற்குரிய தகவல் களஞ்சியம் பாராட்டுக்கள் 06-Sep-2017 2:33 pm

மேலே