எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இரயில்!!


இணைபிரியா காதலர்கள் தண்டவாளங்கள்!
அவற்றின் முதுகில் ஏறிக்கொண்டும்
பச்சை வயல்களைக் கிழித்துக்கொண்டும்
செல்கின்றது இரயில்.

இடியையும் புயலையும்
சுடும் வெயிலையும்
குளிர் பணியையும் கண்டு
அஞ்சாத இரயில், ஏனோ
தண்டவாள ஜோடியின் சிறுபிளவால்
தடம் புரளுகிறது.

கஞ்சிக்கு காசில்லாதவனுள் பெட்டிக்கும்
நடுத்தர நாயகனுள்ள படுக்கை பெட்டிக்கும்
அவர்கள் தேர்ந்தெடுத்த வெள்ளை வேட்டிகளுள்ள குளிர்சாதன பெட்டிக்கும்
இணைப்பிருந்தாலும் இணைப்பில்லை.

சுட்டிப்பிள்ளை கைக்குழந்தை
அம்மா அப்பா தாத்தா பாட்டி
இப்படி பல குடும்பங்களின்
வீடாகிறது இரயில்
பயணம் முடியும் வரை.


பாவம் இரயிலுக்கு என்ன தெரியும்?
இவ்வெதையும் கவனியாமல்
அத்தனை நீலநிற பெட்டிகளயும்
இழுத்துக்கொண்டே செல்கிறது....

மேலும்

இன்ப சுற்றுலாப் பெட்டிகள் கொண்ட இரயில் பயணமும் உண்டு மலரும் ரயில் பயணங்கள் 15-Sep-2017 5:30 am
ஏழை பணக்காரபயணம் செய்யும் எந்திர ஊர்தி ---புகைவண்டிப் பயணம் இயற்கைக் காட்சிகள் குடும்பமாக குதூகலிக்கும் இனிய இன்பாக் சுற்றுலாப் பயணம் ஏழைக்கு முன்பதிவு செய்யாத பெட்டி மாற்றுத்திறனாளிகளுக்கு ,பெண்களுக்கு, தனிதனிப் பெட்டிகள் பணக்காரர்களுக்கு முன்பதிவு செய்த ஸ்லீப்பர் தூங்கும் வசதி கொண்ட பெட்டிகள் குளிர்சாதனப் பெட்டிப் பயண வசதியும் உண்டு அறுசுவை உணவு தயாரிக்கும் சமையல் அறைப் பெட்டியும் உண்டு சாமான்கள் பல இடங்களுக்கும் அனுப்ப பார்ஸல் வண்டியும் உண்டே ஓட்டுநர் நடத்துனர் பயணிக்கும் புகைவண்டிப் பெட்டிகளும் உண்டே ! தங்கள் பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள் 15-Sep-2017 5:28 am

மேலே