எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மறதிக்கு விலை மூன்று மசால்தோசை

திருச்சி பஸ் ஸ்டாண்டில் இறங்கி என் சிநேகிதனை தேடிக்கொண்டிருந்தேன். கூடே வந்த மனைவிக்கோ கொஞ்சம் கூட பொறுமையில்லை. இந்த பொம்பளைகளே இப்படித்தான். எதிர்க்கும் பொறுமையாக இருப்பதில்லை. எப்போதாவது பொறுமையை அவர்கள் கடை பிடிப்பது பாத்திரக்கடை, துணிக்கடை, மற்றும் நகைக்கடைகளில் மட்டும் தான்.

"சற்று பொறுமையாக இரு சரோ, அவன் சீக்கிரம் வந்து விடுவான். நான் தான் வாட்ஸாப்ப் மெசேஜ் அனுப்பியிருந்தேனே”. கதிரேசன் மனைவியை சமாதானம் பண்ண முயற்சித்தான். 

கதிரேசனுக்கு வயசு நாற்பத்தைந்து தாண்டி விட்டது. முதுமைப்பருவதிலும் நவீன கருவிகளை பயன்படுத்தவும் கற்று கொள்வதற்கும் அவனுக்கு ஆர்வம் அதிகம். உடல்நலத்திற்க்காக தினமும் இரண்டு மூன்று கிலோமீட்டர் தூரம் நடப்பதும் உண்டு. சரோ என்று செல்லமாக அழைக்கப்படும் சரோஜத்திற்க்கு வீட்டுவேலைகளை கவனிக்கதர்க்கே நேரம் சரியாயிருக்கும்.

அவர்களுடைய ஒரே வாரிசான மகன் வெளிநாட்டில் நல்ல வேலையில் இருக்கிறான். கூடவே அவன் மனைவியும் அங்கேயே பணி புரிகிறாள். அதனால் கதிரேசனும் மனைவியும் தனியாகத்தான் காலம் கழிக்க வேண்டியிருந்தது.

 தனிமையிலே இருவரும் இருக்க லேசாக கதிரேசனுக்கு மறதி ஆரம்பமாயிற்று. தன் ஆரோக்கியத்தில் மிகக்கவனமாக இருந்த கதிரேசனுக்கு இது பெரும் அதிர்ச்சியை தூண்டியது. கதிரேசன் தாய் தந்தை இருவரும் உயிரோட இல்லை. ஆனால் அவர் இருவரும் இறக்கும் வரையிலும் மனதிற்க்கு எந்த பிரச்சனையும் இருந்ததில்லை. 

பாவம் சரோஜம் தான் மிகவும் சிரமப்பெட்டாள். பால் வாங்க போனவர் தயிர் வாங்கி வந்திடுவார். வங்கியில் பணம் எடுக்க சொன்னால் கையிலிருக்கும் காசை டெபாசிட் செய்து விட்டு வருவார். ஒரு முறை காபி குடித்த பின்னும் திரும்பவும் காபி கொடுக்கவில்லை என்று சண்டை பிடிப்பார்.

ஆனால் நவீன கருவிகள் பயன்படுத்த மட்டும் கதிரேசனுக்கு ஆர்வம் குறையவில்லை. தன்னோடு படித்த பலரும் சேர்ந்து வாட்ஸாப்பில் குழு உருவாக்கியதில் அவரும் சேர்க்கப்பட்டார். ஒரு முறை பார்த்த வீடியோவை மீண்டும் புதிதாக பார்க்கிறது போல் சரோஜத்திற்கு காண்பிப்பார்.

நாளுக்குநாள் விஸ்வரூபம் எடுத்து கொண்டிருந்த மறதியை பொறுக்க முடியாமல் சரோ தன் ஆதங்கத்தை பக்கத்துவீட்டு மாமியிடம் பகிர்ந்து கொண்டாள். கதிரேசனின் ஜாதகம் ஆய்வுக்குள்ளாக்கப்பட்ட்து. இரண்டு மணி நேரம் நீண்ட சோதனையில் ஜாதகப்படி கதிரேசனுக்கு மறதி முற்றி மனநோய் ஏற்பட வாய்பிருக்கிறதாக ஜோதிடர் கூறியது எப்படி அவளால் ஏற்று கொள்ள முடியும்? முதலில் பரிகாரம் ஏதும் காணாத ஜோதிடர்க்கு , 5000 ரூபாயும், ஒரு உடைத்த தேங்காயும் ஒரு சீப்பு ரஸ்தாளிப்பழமும்  பட்டு அங்கவஸ்திரமும்  தட்சிணை வைத்ததும் பரிகாரம் தெளிந்து விட்டது.

திருச்சி பக்கமிருக்கும் ப்ரஹ்மபுரீஸ்வரர் ஆலயத்திற்கு சென்று ஜாதகம் வைத்து பூஜை செய்தால் பிரம்மன் இறக்கம் காட்டி ஜாதகத்தேயே மாற்றி விடுவாராம். நல்ல யோசனையாகத்தான்  தெரிந்தது சரோஜத்திற்கு. பிரம்மனையும் பார்த்துவிட்டு திருச்சியையும் ஒரு முறை சுற்றி பார்த்து விடலாம். 

மிக பெரிய போராட்டங்களுக்கு பின் கதிரேசனின் நாத்திகம் சரோவின் ஆலோசனைக்கு அடி பணிந்தது. கதிரேசன் பிறந்ததும் வளர்ந்ததும் திருவனந்தபுரத்தில் தான். ஒரு சின்ன அச்சகத்திலே பணி புரிந்தார். மகன் வெளிநாட்டில் சம்பாதிக்க துவங்கியதும் அந்த வேலையை விட சொன்னான். கதிரேசனும் மறுக்கவில்லை. மாதாமாதம் அவன் கதிரேசனின் வங்கி அக்கவுண்டில் தவறாமல் பணம் டெபாசிட் செய்து விடுவான்.

அதனால் பணத்திற்கு பிரச்சனை ஏதும் இல்லை. இருந்தாலும் கதிரேசன் சிக்கனத்தையும் விடவில்லை. இந்த வயதிலும் வரவும் செலவும் தினமும் டைரியில் குறித்து வைப்பார். மகன் எப்போதாவது மனம் மாறி காசை அனுப்புவது நிறுத்தி விட்டாலோ? ஒரு அச்சம் இருக்க தான் செய்கிறது.

இந்நாள் வரை திருவனந்தபுரம் விட்டு எங்கும் சென்றதில்லை. வாழ்க்கையின் மிகப்பெரிய காலம் கதிரேசன்  அச்சகத்திலும் சரோஜம் சமையலறையிலும் தான் கழித்தார்கள். 

திருச்சி என்று கேட்டதும்  சரோஜத்தின் மனதில் நிறைய எதிர்பார்ப்புகள் வந்து விட்டது. எப்பிடியாவது அவளை கூட்டி சென்று வர வேண்டும்  என்று கதிரேசனுக்கும் தோன்றியது.

தெரியாத இடத்திலே எங்கே போய் தங்குவது? கோவிலுக்கு வழியும் தெரியாது. தன திறமையை காட்ட இது தான் நல்ல சந்தர்ப்பம். வாட்சப்பிலே திருச்சியில் யாராவது நண்பர் இருக்கிறார்களா என்று தேட துவங்கினர். ஒரு வழியாக கிடைத்தது ஒரு நம்பர். பள்ளியிலே தன்னுடன் பயின்ற குமார் இருக்கிறான். குமார் திருச்சி என்று பெயர் காட்டியது. அனேகமாக அவன்  தான். திருச்சிக்கு வருகிறோம் என்று மெசேஜ் அனுப்பி விட்டார். பதில் உடனே வந்தது. பயனத்தின் முழுவிவரங்களும் அனுப்ப சொன்னான். கதிரேசனும் எல்லாம் மெசேஜ் மூலமே பகிர்ந்து கொண்டார். பஸ் ஸ்டாண்டில் சந்திக்கிறேன் என்று பதில் வந்தது.

சரோ: இப்படி திரு திரு என்று முழித்தால் போதுமா? அந்த நம்பரில் சிநேகிதனை அழைத்து பாருங்கள்.

கதிரேசன்சற்று பொறுமையாக இரு. நான் தான் வாட்ஸாப்ப் மெசேஜ் அனுப்பியிருக்கேனே. வராமல் இருக்க மாட்டான்.

சரோ: ஆமாம். பொல்லாத வாட்ஸாப்ப். நேரடியாக பேசுவது தானே மரியாதை?

கதிரேசன் : டெக்னாலஜி பற்றி உனக்கு என்ன தெரியும்? இப்போதெல்லாம் வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்புவது தான் மதிப்பு. செலவும் மிச்சம்.

தெரியாத ஊருக்கு வந்து விட்டு செலவை பற்றி யோசித்தால் எப்படி? ஏதோ பஞ்சத்திலையா இருக்கிறோம்?” சரோ சலித்து கொண்டாள்

சரோவின் ஆலோசனை சரியாக பட்டது. கதிரேசன்  கைபேசியில் அழைப்பு விட்டான். அந்த பக்கம் ஒரு இளைஞனின் குரல். "என்ன இது சிநேகிதனின் குரல் மாதிரி தெரியவில்லையே, ஒரு வேளை அவன் மகனாக இருப்பானோ?"

ஏதும் பேச தேவைப்படவில்லை. அதற்குள்ளே கைபேசியை காதோடு சேர்த்த படியே ஒரு இளைஞன் வந்தான். வந்ததும் வணக்கம் போட்டான். "சாரி, கொஞ்சம் லேட்டாகி விட்டேன். என் வீட்டிற்க்கு இங்கிருந்து சற்று தூரம் இருக்கிறது. நீங்கள் களைப்பாக இருக்கிறது போல் தெரிகிறதே." என்றான்.

கதிரேசனும் அந்த இளைஞன் தன் சிநேகிதன் குமாரின் மகனாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்து கொண்டான். நேரம் நன்றாக இருட்டி விட்டது. ராத்திரி பிரயாணம் வேண்டாமென்று பகலிலே வந்ததால் களைப்பும் அதிகமாகிவிட்டது. பாவம் சரோ. ரொம்பவும் சோர்ந்து விட்டாள். 

பக்கத்திலே நல்ல ஹோட்டல் எதுவும் இருந்தால் சாப்பிட்டு விட்டு போவோம்என்றான் கதிரேசன். நண்பனுக்கு எதுக்கு வீண்சிரமம் கொடுக்க  வேண்டும்? அந்த இளைஞனும் மறுக்கவில்லை . ஹோட்டலில் சென்றதும் மனைவி தன் விருப்பம் தெரிவித்தாள். "மசால்தோசை  சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு" என்றாள். ஒரு  வாலிபன் முன்னாலிருப்பதினாலோ என்னவோ கதிரேசன் எதிர்ப்பொன்றும் சொல்லாமல் ஆர்டர் செய்தான். "தம்பி, உனக்கும் மசால்தோசை சொல்கிறேன்" என்று தன் சிநேகிதனின் மகனோடும் பாசத்தோடு அதிகாரத்தை காட்டினான். திருப்தியாக சாப்பிட்டு முடிந்ததும் சர்வர் பில் கொண்டு கொடுத்தார்.  

நீங்க குடுக்க வேண்டாம் அங்கிள், நானே குடுத்துடுறேன் என்றான் அந்த இளைஞன். கதிரேசனும் விட்டு கொடுக்கவில்லை. வேணாம் தம்பி, நானே கொடுக்கிறேன், உனக்கெதுக்கு சிரமம்?” முந்தி காசை சர்வரிடம் கொடுத்து விட்டான்

வெளியே வந்து கொண்டிருக்கையில் பாசத்தோடு அவனிடம் விசாரித்தான்."அப்பா சௌக்கியமா இருக்காரா? உன்னுடனே  தானே இருக்கிறான்? அவனை பார்த்து எத்தனை வருடங்கள் ஆயிற்று?"

அது கேட்ட இளைஞனின் முகம் சற்று மங்கியது. "என் அப்பா சின்ன வயதிலே தவறிட்டாரே. அம்மாவும் நானும் தங்கையும் தானே உங்கள் பக்கத்து வீட்டில் வாடகைக்கு குடியிருந்தோம்.

படித்து முடித்து இங்கே வேலை கிடைத்தது. தங்கையின் கல்யாணமும் முடிந்தது. அம்மா  இன்னும் என் கூடே தான் இருக்காள்". 

கேட்டதும் கதிரேசனுக்கு மிகவும் அதிர்ச்சியானது. நண்பன் நம்பர் என்று தான் தவறாக எண்ணி விட்டேனே. கொஞ்சம் நேரம் யோசித்தான். . நண்பன் குமார் மகனோட வெளிநாடு செல்வதாக சொன்னது மெல்ல நினைவுக்கு வந்தது.

கதிரேசன் முகபாவனை பார்த்த சரோஜம் விஷயம் புரிந்து கொண்டாள். "என்ன இப்படி கேட்டிட்டீங்க? நம்ம பக்கத்து வீட்டில் குடியிருந்த கிரிஜா அக்காவை தானே நாம் பார்க்க வந்தோம். உங்கள் சிநேகிதனே நாளைக்கு காலையில் சந்திக்கலாம் என்று சொன்னீர்களே?" என்றாள். 

கதிரேசனும் சமாளித்து கொண்டான்.

ஆமாம், நான் எதோ யோசனையில் கேட்டு விட்டேன். என்னை மன்னித்து விடு. 

போகும் வழியெல்லாம் யோசித்து யோசித்து பார்த்தான். யார் அந்த கிரிஜா அக்கா? ஞாபகம்  வரவில்லை. சரோவிடம் இப்பொழுது கேட்கவும் முடியாது. எப்பிடியோ சமாளித்து கொண்டு விட்டார்.

மறுநாள் காலையில் அந்த இளைஞன் ப்ரஹ்மபுரீஸ்வரர் ஆலயத்திற்கு அவர்களை அழைத்து சென்றான். கூடவே இருந்து உதவினான். சரோவின் ஆசைப்படி திருச்சியையும் சுற்றி பார்க்க அவன் மிகவும் உதவியாக இருந்தான். தன் மறதியை பற்றி அவனுக்கு தெரிந்து விடுமோ என்ற பாயத்தினாலோ ஏனோ கதிரேசன் அவனுடன் அதிகம் பேசிக்கொள்ளவில்லை

பூஜைகளெல்லாம் முடித்து விட்டு திருவனந்தபுரத்திற்கு யாத்திரை ஆரம்பித்தார். பேருந்தில் ஏற்றி விட்டு இளைஞன் வெளியே நின்ற போது மெதுவாக அவன் பெயரை கேட்டார். 

சிரித்த முகத்தோடு அவன் சொன்னான் "குமார், அங்கிள் , நீங்கள் தான் என் நம்பர் பதிவு பண்ணியிருக்கீங்களே. உங்களுக்கு என்னை நினைவிருக்காது என்று தெரிந்து  தான் நான் உங்களை வரவேற்க வந்தேன். நீங்கள் மெசேஜ் அனுப்பியதும் அம்மாவிடம் காண்பித்தேன். ரொம்ப வருஷம்  முன்னாடி, ஏதோ கடிதத்தை பற்றி விசாரிக்க தான்  அம்மா ஒரு முறை என் கைபேசியிலிருந்து உங்களை அழைத்திருக்கிறார். நீங்கள் வருகிறீர்கள் என்றதும் அம்மாவிற்கு தெரிந்தது, வேற எவரையோ தேடித்தான் உங்கள் வரவு என்று. நீங்கள் நினைத்த நபர் நாங்கள் இல்லை என்று சொல்லி விட வேண்டாம் என்றார். ஒருவருக்கு உதவி செய்ய அவர்கள் நெருக்கமானவர்களாக இருக்க தேவையில்லையே. உதவிகளிலிருந்து கூட உறவுகள் பிறக்கலாமல்லவாகட்டாயமாக மறுபடியும் வாருங்கள்"

பேருந்து கிளம்பி விட்டது. சரோவிடம் சற்று சங்தேகத்துடன் கதிரேசன் கேட்டான் "உனக்கு அவர்களை தெரிந்திருந்ததா ?" சிரிப்புடன் சரோ பதில் சொன்னாள். அந்த பையன் அம்மாவை பற்றி சொல்லும் வரை எனக்கும் தெரியவில்லை தான். அவன் சொன்னதும் நினைவுக்கு வந்தது. என் பழைய சிநேகிதி தான் அவர். உங்களை போல வாட்ஸாப்ப் எல்லாம் இல்லையென்றாலும் அவர் நட்பாக தான் இருப்பார்கள் என்று அனுமானித்தேன். நான் நினைத்த படியே அவரும் நன்றாக பழகினார்கள். எதோ பூஜை முடிச்சாச்சு. இப்போவாவது உங்கள் மறதிக்கு ஒரு முடிவு கிடைத்தால் சரி”.

டைரியில் செலவுக்கணக்கில் சிறிதாக குறித்து வைத்து கொண்டான் "மூன்று மசால்தோசை  - 192 ரூபாய் (கிரிஜாவின் மகன் குமாரோடு சேர்ந்து சாப்பிட்டது). கதிரேசனுக்கு மறதியிலிருந்து விடுதலை கிடைத்ததா என்று தெரியவில்லை. ஆனால் குமார் என்னும் அந்த இளைஞனை ஒரு போதும் தன் வாழக்கையில் மறக்கவே  இல்லை.

மேலும்

*ஒரு நாள் கூத்து*

புதிதாக திறக்கப்பட்ட நட்சத்திர உணவகம் அது. தினமும் நான்  கல்லூரிக்கு செல்லும் வழியில் பேருந்தின் ஜன்னல் வழியே எட்டிபார்த்தப்படி செல்வேன். மாருதி கார்களும், மாளிகையில் வாழும் மனிதர்களும் வந்து போகும் உணவகம் அது. கனவிலும் கூட என்னால் சென்று வர முடியாத அந்த உணவகத்திற்கு நான் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது அன்று.

விடுமுறை நாள் என்பதனால் நானும் என் நன்பர்களும் விஸ்வாசம் படம் பார்த்து விட்டு பசியோடு பாவமான தோற்றத்தில் அந்த பைபாஸ் சாலை ஓரத்தில்.... நேரம் கடக்க கடக்க கால்கள் சுடச்சுட அந்த வேகாத வெயிலிலும் ஒருவரை ஒருவர் தாங்கிப் பிடித்துக் கொண்டு, வேகமாக ஓடியபடி சாலையின் இருபுறமும் ஓர்  சிறிய உணவகம் ஏதேனும்  தென்படுகிறதா? என உற்று நோக்கி கொண்டே கால்கள் பறந்தன. சுதந்திரமாக இந்த நாட்டில் வாழ வேண்டுமானால் பறவையாக பிறந்திருக்க வேண்டும் என்று அடிக்கடி நான் எண்ணியது உண்டு. ஆனால், அன்று நான் அந்த வெயிலில்  ஓடும்போது தான் பறவையின் பசி வலியையும் கூட உணர்ந்தேன்.

அனல் காற்றில் ஓடிக்கொண்டிருக்கும் போது நடுவில் ஒரு நறுமணம் வீச தொடங்கிற்று. திரும்பினால் கம்பீர தோற்றத்துடன் அந்த புதிய நட்சத்திர உணவகம். நான் அங்கிருந்த வாட்ச்மேனிடம் மற்ற உணவகத்திற்க்கும் இதற்கும் என்ன வேறுபாடு இருக்கிறது? எதற்காக இங்கு மட்டும் மக்களின் கூட்டம் அதிகம் காணப்படுகிறது என கேட்க, அவனும் ஆட்காட்டி விரலை வலதுபுறமாக மேல்நோக்கி நீட்டினான். அதை தொடர்ந்து, பாரம்பரிய  உணவு இங்கு கிடைக்க பெறுவதாக அங்கு மாட்டப்பட்டிருந்த  வாசகபலகையில் எழுதப்பட்டிருந்தது. அதாவது அன்றைய காலத்தில் உணவு முறைகள் இயற்கையின் வழியில் பின்பற்றபட்டதாம். அதை இப்போது பேஷனாக இவர்கள் பின்பற்றுகிறார்களாம். பசியின் தாக்கம் அதிகம் இருந்தபடியால்  என்னையும் உள்ளே  அழைத்து சென்று விட்டார்கள். "நான் எப்படி இங்கு வந்தேன்.....என்னால் நம்ப முடியவில்லையே...." என மனத்திற்குள் புலம்பிக் கொண்டே மேலும் கீழுமாய் அங்கு வரையப்பட்டிற்கும் ஓவியக்கலைகளையும், கட்டிடக்கலைகளையும் கண்டு வியந்தேன். திடீரென்று என் முன்னால் வந்து ஒருவர் "சார்....வாட் டூ யூ வான்ட்?" என்னுடன் வந்தவர்கள் எங்கே....? என தேடி கொண்டே.... நீண்ட வரிசையாக காக்கி வண்ணத்தில் பல மேஜை நாற்காலிகள் அவற்றை எண்ணிக்கொண்டே...ஒன்று....இரண்டு....மூன்று....நான்கு....கடைசி இருக்கையில்  அவர்கள் எனக்கொரு இடத்தையும் பிடித்து வைத்துக் கொண்டு "இங்கு வா...அமரும்..." என கூறியபடி.

எனக்கு கீழே ஒரு அட்டை வடிவிலான ஒரு புத்தகம்.... உணவு வரும்வரை நேரத்தை கழிப்பதற்கு வைத்துள்ளார்கள்  என்றெண்ணி சிரித்தேன். என்னருகில் இருந்த நண்பர்கள் எல்லாம் தங்களுக்கு கொடுக்கப்பட்ட புத்தகத்தை எடுத்து  மலமலவென ஒப்பித்து கொண்டிருந்தனர். சற்று விநாடியில் ஐ.டி.  கம்பேனியில் வேலை பார்ப்பவர் போல் டை, ஷு-வெல்லாம் அணிந்து "சார்....கேன் யூ கிவ் மீ தி ஆர்டர் ப்ளீஸ்??" அதன்பிறகு ஒருவர் முன்னால் ஒருவராக அடித்து கொண்டு தங்களுக்கு வேண்டியதை எல்லாம் கூறினர். நான் என்ன சாப்பிட வேண்டும் என்பதையும் அவர்களே தீர்மாணித்தனர். எனக்கு "நான் ரொட்டியும், பன்னீ பட்ட மசாலா" என்ற ஒன்றினை ஆர்டர் செய்தனர். இரண்டையும் சேர்த்தால் அதன் விலை ஜீ.எஸ்.டீ. வரி உட்பட முந்நூற்றையும் தாண்டுமாம். எனது தந்தையின் ஒரு வார வருமானம் அது. 'ரொட்டி தானே.....என்னவாகி விட போகிறது...' எங்கள் வீட்டு நாய் முத்துவிற்கு போடுவது போல் அதிகபட்சம் இருபது ரூபாய் தான் ஆகும் என்றிருந்தேன். ஆனால் அதன் விலையை பார்த்த பின்பு அங்கிருந்து கிளம்பி விட வேண்டும் என்று எனது கால்கள் துள்ளின. டேபிளை க்ளீன் செய்ய வந்த அக்கா "நீங்கள் எல்லாம் எந்த ஊரு..?" ஊட்டி, நாமக்கல், சேலம், பொள்ளாச்சி என ஒருவராக சொல்லிக்கொண்டு வருகையில் நானும் 'அட நம்ம ஊரு தான் அக்கா!!' சிரித்து கொண்டே 'எங்க இராசா...?' நானும் சிரித்த படி "மேலவீதி" அவர்களும் "பக்கத்து தெரு தான், போ! " ஆசையில் "ஆனால் நான் உங்களை பார்த்ததே இல்லையே, அக்கா?" அவர்கள் முகம் சுருண்ட படி "வேல சரியா இருக்கும், தம்பி".

சாப்பாட்டு நேரத்தில்  தினமும் ஒரு கம்பேனி அழைப்பு வருவதுண்டு. அன்று அப்போது அது வந்தது. வழக்கம் போல் நான் அதை மறுத்து, கட் செய்து விட்டேன். என்னுடன் பேசி கொண்டிருந்த அக்கா "தம்பி....ஏதேனும் முக்கியமானவர்களாக இருக்க போகிறார்கள்" நான், "இப்போது.....நீங்கள் தான் எனக்கு முக்கியம்". எல்லோரும் சிரித்தனர். நானும் "இ...ஈ...ஈ...."

சரி தம்பி... நீ விசய் பேஃனா ??.....அக்கா...உனக்கு நூறு ஆய்ஸு கா !!....இல்ல, உன் போன் பின்னாடி விசய் நடிச்ச கத்தி பட போட்டோ  போடுருக்கியே அதான் கேட்டேன். அட  ஆமாக்க....எனக்கு விஜய் பிடிக்கும்னு இவங்க லாம் வாங்கி தந்தாங்க.... " யாருக்கு தான் விசய பிடிக்காது சொல்லு....." இதோ இவங்களுக்கு லாம் பிடிக்காதே... இன்னக்கி கூட விஸ்வாசம் படத்துக்கு என்ன கூட்டிட்டு போயிட்டாங்க....ஒரே தலவலி கா...உன்ட பேசுனதுல தான் வலி  போனுச்சே.....பின்ன எப்படி பா உனக்கு இவங்க லாம் விசய் படத்த வாங்கி தந்தாங்க?....அவங்களுக்கு என்ன பிடிக்கும்ல அதான்.... 'நட்பு கா!!' எனக்கும் உன்ன ரொம்ப பிடிச்சிருக்கு டா  தம்பி....நன்றி, அக்கா.

பசியில் கத்திக் கொண்டிருந்த வயிரு குளிர்ந்த பிறகே,  நாங்கள் ஆர்டர் செய்தவைகள் ஆவிபறக்க வந்தன. அறக்க பறக்க அனைவரும் சாப்பிட, நான் மட்டும் அறையும் குறையுமாக அங்கு  சாப்பிட்டு கொண்டிருந்தேன்.  வயிறு நிரம்பியதோ? இல்லையோ? ஆனால் அன்று என் மனம் நிறைந்தது. அங்கிருந்து கிளம்பி விட வேண்டும் என்றிருந்த என்னை,  மன விருந்து அளித்து பசியை போக்கினார்கள் அந்த பெண்மனி. என்னை போலவே அவர்கள் முகத்திலும் ஓர்  ஆனந்தத்தை கண்டேன். இத்தனை நாளாக உள்ளேயே அடைந்து கிடந்து உணவகத்திற்கு வந்து செல்லும் வெளிநாட்டவர்கள், செல்வந்தர்கள் யாரிடமும் மனம் விட்டு பேச முடியாமல் சிக்கி தவித்து கொண்டிருந்த சிரிப்பு  சில்லரையாய் இன்று வெடித்து சிதறிற்று அல்லவா. அந்த உணவகத்திற்கு செல்லும் போது வாசலில்...எனக்குள் ஒருவன், "டேய்! நானும் பணக்காரனே!!" அவர்களை சந்தித்தபின் அந்த உணவகத்தில் இருந்து வெளியேறும் போது அதே வாசலில் அவனே..."இன்று,  நானும் அதிஷ்டக் காரனே!!" வாட்ச்மேன் சிரித்து கொண்டே தலையாட்ட நானும் தலையசைத்துக் கொண்டே அன்று வீடு திரும்பினேன்.
            நன்றி,
                          -முத்து.

மேலும்

நடைபாதை நகரம்( நரகம்)


கார்பன் கரி படிந்த முகமும்
கிழிந்த சட்டையும் அவனை அடையாள படுத்தியது
அவன் இந்த நகர வாழ்க்கையின்
நடைபாதை மனிதன் என்பதை..

காட்சி பொருளாக்கப்பட்ட உணவு கடைகளை
வெரித்து  பார்த்த படி அவனின்
அருந்த செருப்புகள் நகர மறுத்தன...

தினமும் பசியுடன் தோற்றும்
இன்றும் அவன் கேட்க தொடங்கி விட்டான்

ஐயா...
இந்த புத்தகம் பத்து ரூபாய் வாங்கிக்கொள்ளுங்கள் என்று. 

மேலும்

அலாவுதீனும் அற்புத விளக்கும்

வணக்கம் நண்பர்களே,
                                   நான் இப்பொழுது அலாவுதீனும் அற்புத விளக்கும் கதை பற்றி எழுதப் போகிறேன்.

அலாவுதீனும் அற்புத விளக்கும் கதை எனக்கு மிகவும் பிடித்துள்ளது. ஏன் என்றால் அதில் பூதம் எல்லாவற்றுக்கும் உதவி செய்யும். அது போல மனிதனும் உதவி செய்யவேண்டும். மந்திரவாதிதான் அலாவுதீன் சித்தப்பா என்று ஏமாற்றி, குடும்பத்துடன் பழகி ஒரு நாள் அவனை ஏமாற்றி ஒரு குகைக்குள் அழைத்துச் சென்றான். அலாவுதீன் விளக்கை எடுத்து வந்த உடன் பிறகு மந்திரவாதி ஏமாற்றி விட்டான். மந்திரவாதி அலாவுதீனின் மனைவியை கடத்தி வந்து ஆப்ரிக்காவில் அடைத்து வைத்துவிட்டான். பிறகு பூதத்தின் உதவி உடன் ஆப்ரிக்காவிற்கு வந்து ஒரு திட்டம்போட்டு மந்திர வாதியை கொலை செய்து விட்டு தப்பித்துவிட்டான். இறுதியில் அலாவுதீனும் அவன் மனைவியும் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள்.

மேலும்

மூன்று முகத்தில் ஒரு காதல்         

                                இது ஒரு தொடர் கதை. தொடர்ந்து படித்தால் தான் கதை முழுமையும் தெரியும். ஒருவனின் வாழ்க்கையில் ஒரு காதல் முன்று விதமாக வருகிறது. அந்த காதல் எப்படி சேருமோ சேராதோ என்பது தான் கதையின் காதலின் அழகு. முதல் விதமாக கனவில் காதல் தேவதையாக வந்தாள். அதுவும் தொடக்கத்தில் தான் உள்ளது. இரண்டாவது விதமானது இன்னும் தெரியவில்லை. படித்தால் தான் தெரியும். அன்று சனிக்கிழமை மணி 8.30 என்றளவில் கலக்கபோவதுயாரு என்ற காமிடி ஹோ பார்த்துவிட்டு ஒரு நல்ல ஆங்கிலம் படம் பார்த்துவிட்டு தூங்கும்போது மணி 11.30 இருக்கும். என் வீடு பார்த்தாலே பயமாக இருக்கும். வெளிச்சம் இல்லாமல் யாரும் இருந்தாலும் அச்சமடைய வைக்கும் என் வீடு. என் அம்மா அவர்களே நான் இல்லாமல் இருக்கமாட்டார். இரவில் வெளிச்சம் இல்லாமல் நீங்கள் கூட இருக்கமாடீர்கள். பயத்துக்கு பயத்தை காட்டும் வீடு அது தான் என் வீடு. என் காதல் கனவு கன்னி வருவாள் என்ற மகிழ்ச்சியுடன் நல்ல படமும் பார்த்துவிட்டு 11.30 மணிக்கு உரங்கினேன். அன்று அந்த நேரத்தில் என் வீட்டில் வேளியே நாய்கள் ஓநாய் போல ஒலியை ஏழுப்பி அதை அந்த மணியளவில் நான் கேட்க ஏதோ, எனக்குள் ஒரு எண்ணங்கள் உருவாகுகின்றது. அதையும் தாண்டி உரக்கத்தில் இரங்கினேன். ஒரு பத்து நிமிடத்தில் கழித்து உரங்கினேன். எனக்குள் ஒரு மாதிரியான உணர்வுகளுடன் உரங்க சென்றதால் அப்போது ஒரு நொடியில் ஆயிரம் மயிள்கள் கடந்து ஒரு ஊருக்கு சென்றேன். அந்த ஊர் பெயர் தெரியவில்லை. ஒரு பலகையில் எழிதி இருந்ததது அது பாதி அழிந்து காணப்பட்டது. என்ன பன்றது நேற்று கனவில் பறந்துக்கொண்டு இருந்தேன். இன்று நடக்க போகிறேன். என் முதல் கனவில் எப்படி பார்த்தேனே அதே போல நடக்கிறது. நேற்று என்ன நேரமோ அதே நேரம் தான் அதே சூழல் தான் அதே மரம் என் கண்களுக்கு காண்பிக்கப்பட்டது. இதில் என்ன திருத்தம் என்றால் நேற்று ஒரு எவ்வளவு அதாவது அளவுற்கு அதிகமான சுற்றுச்சூழலின் அழகை கண்டேன் என்றால் அதுபோல இப்போது இந்த நொடியில் நின்று கொண்டு இருந்த இடத்தில் அதற்கு எதிர்மறையாக இருந்ததது. நேற்று அதை பார்த்துவிட்டு இதை பார்ப்பதற்கு மனம் இடம் கொடுக்கவில்லை.         
                            கனவில் கனவு தேவதை வருவாள் என்று பார்த்தால் என் கனவே நல்ல இருக்கும். என் கண் எப்படி நன்றாக தெரியுமோ அதுபோல கண்ணில் எண்ணெய் ஊற்றினால் கண் கலங்கி மயக்கி தெரியும் நிலையில் காணப்படும். அது போல இன்று என் கனவு கலக்கிவிட்டது போல என்று எண்ணி நடக்க ஆரம்பித்தேன். மாலைப்பொழுது தான் ஆனால் சற்று அச்சத்தை தரக்கூடிய சூழ்நிலையில் சிறிது காற்று குளிர்ச்சியாக வீசியது. மாலைபொழுதில் ஒரு மண் சாலையில் ஒரு ஊருக்கு வெளியே நின்று கொண்டு இருந்தேன். சரி நடந்து கொண்டு இருந்தேன். நீண்ட தொடர் சாலை கால் வலிக்க ஆரம்பித்ததது. கண் தொலையில் ஒரு பெரிய மரம் ஒன்று காணப்பட்டது. அந்த மரத்தில் தொலைவில் இருந்த நான் நடந்து சாலைகளை கடந்து மரத்துக்கு குறுகில் சென்றேன். அந்த மரத்தை பார்த்தால் எப்படி இருந்ததது தெரியுமா? பசுமையாகவும் இல்லை காய்ந்தும் இல்லை இவற்றிக்கு இடையில் காணப்பட்டது. இந்த மரத்தில் ஒரு பூக்கள். குருவிகள் கூட இல்லவே இல்லை. சிறிதும் சத்தமில்லை. இப்போது காற்று வீசவில்லை அமைதியான சூழ்நிலையில் தனியாக நின்று கொண்டு இருந்தேன். சுற்றிலும் ஒருவரும் கண்களுக்கு தெரியவில்லை. என்னடா இது எந்த இடம் என்றும் தெரியவில்லை என்ற சூழல் வந்த இடத்திற்கு சென்று விடலாம் என்று திரும்பி நடக்க ஆரம்பிக்கலாம் என்று கால்களை வைக்கும்போது சிறிது காற்று எனக்குள் அதுவும் என்மீது வீசி என்னை திரும்பி பார்க்க வைத்ததது. அங்கு கண்களுக்கு கருப்பான ஒரு ஒருவம் தெரிந்ததது. அந்த ஒருவத்தை கூர்ந்து கவனித்தாலும் கண்கள் தெரியவில்லை. என்ன பன்றது ஏன்னென்றால் என் வயது அப்படி என்னடா உன் வயது என்று கேட்கிங்க.சரி கூர்கிறேன் 20 தான். இந்த வயதில் நல்ல பூக்களுடன் கூடிய பெண்களை கண்டால் அந்த பெண் ஆயிரம் கி.மீ தொலைவில் சென்றால் கூட கண்கள் தெரியும். இது யாரு என்று கூட தெரியவில்லை. அதான் தெரியவில்லை அருகில் செல்ல ஆரம்பித்து நடந்து இப்போது பார்த்தால் அந்த ஒருவம். ஒருவம் என்ன ஒருவம் தெரியுமா கூருங்கள் பார்க்கலாம். இது பெண்ணா இல்லை ஆணா இல்ல வேர ஒன்றா என்று எண்ணி பாருங்கள். சரி நானே கூறுகிறேன். என்ன அது ஒரு பெண்தான். கண்களுக்கு அந்த பெண் தெரியவில்லை நானும் கூர்ந்து நன்றாக பார்த்தேன்.            
                            அப்போது கூட பின்புறம் தான் தெரிந்ததது. பின்புறம் சென்றதால் தான் நேற்று கண்ட கனவு கன்னி தன் அழகு சாதனப்பொருட்களை களைத்துவிட்டால் என்று தெரியவில்லை. அவளை பார்ப்பதற்கு எப்படி இருந்தால் தெரியுமா? என்னடா தம்பி அழகாக இருந்தால் தான் அழகை பற்றி கூறுவாயா! இல்லை இல்லை இவளும் பற்றி கூறுகிறேன். இவளின் தலைமூடி கருமையாகவும் மற்றும் ஒரு பூக்கள் கூட வைக்கவில்லை. அவள் தலையின் நிறத்தை கவனித்து பார்த்துவிட்டேன் என்ன நிறம் அது என்று தெரியவில்லை. நானும் பலமுறை ஊற்று பார்த்துவிட்டேன். ஒன்றும் கூட கண்டு பிடிக்க முடியவில்லை. இந்த நிறத்தில் ஒரு பெண் தலை முடியை வாரமல் அதுவும் நீண்ட கூந்தலுடன் காணப்பட்டது. அவளின் முடியின் நீளம் எவ்வளவு தெரியுமா?அய்யோ அவளின் இடைக்கு கீழாக இருந்ததது. மல்லிப்பூ வாசமும் கிடையாது. ஆனால் காற்றில் வாசம் வருகிறது. அந்த சூழலில் பார்ப்பதற்கு பயத்தை உண்டாக்கும். அவளின் உடை என்ன அணிந்து இருந்தால் தெரியுமா என்ன வகை உடை என்று தெரியவில்லை. அந்த உடை பாவடை சட்டை போலவும் இல்லை தாவணி போலவும் இல்லை இரண்டும் கலந்து காணப்பட்டது. இரண்டும் கலந்து காணப்பட்ட உடையின் நிறத்தின் வண்ணம் மண்ணில் விழுந்து எழுந்து வந்ததது போல ஒரு வெள்ளை நிறத்தில் இருந்தாள்.                                          அவளின் கைகளில் ஒரு வளையல்கள் கூட இல்லை. அவளின் விரல்களில் நகம் அதிகமாக வளந்து இருந்ததது. இப்படி ஒரு பெண்ணை பார்த்தால் பயப்படத் தோன்றும் ஏன்னென்றால் பல திரைபடங்களில் இது போல தான் பெண்களை பார்த்துருக்கிறேன். நீங்கள் அந்த பெண்ணை பார்க்கபோகுகினோ இல்லையோ நான் அவளை பார்ப்பேன்.எனக்கு அச்சம் எல்லாம் இல்லை. சிறிது பயம் மட்டும்தான் உள்ளது. அது உங்களுக்கு தெரியாது. அது எனக்கு மட்டும் தான் தெரியும். ஏன்ன நான் தானே அச்சமடைகிறேன் அதுதான் விசியம். சிறிது தொலைவில் நடந்து அவளை முகத்தை பார்க்க எனக்கு ஆர்வம் அதிகம். அவளையும் பார்க்கவில்லை இவளையும் பார்க்கமல் போகமாட்டேன் என்று குறிக்கோளுடன் நடக்க ஆரம்பித்தேன். நானும் எவ்வளவு வேகமாக நடந்தாலும் அவளை நெருங்க முடியவில்லை ஆனால் அவள் பொறுமையாக தான் நடக்கிறாள். இப்படி போனால் அவளை பார்க்கபோகமல் போகும் வாய்ப்பு உண்டு என்ற காரணத்தால் ஓட ஆரம்பித்தேன். அவள் பார்க்கக்கூடாது என்று கடவுளை எண்ணி ஓடினேன். நெருங்கிவிட்டேன் அவளை தொட நினைத்தேன் அப்போது நான் இருந்த இடத்தில் சிறிது காற்று கூட இல்லை இப்போது மழை வருவதற்கு முன் வீசும் காற்று அளவுக்கு அதிகமாக வீசியது. அதிகமான காற்று வீசியதால் என் கண்மீது தூசி விழுந்து நான் கண்ணை கசக்கிவிட்டு பார்த்தால் அவள் காணவில்லை. ஏங்கே என்று தேடினேன். ஆனால் கண்டுபிக்க முடியவில்லை. பின்பு சிறிது தூரம் நடந்தேன் தொலைவில் யாருக்கும் தொடர்பில்லாமல் ஒரு ஓட்டு வீடு தெரிந்ததது. அந்த வீட்டின் அருகில் ஒரு பெரிய விழுதுகளுடன் கூடிய ஆலைமரம் ஒன்று இருந்ததது. வீசிய காற்று நின்றுவிட்டது. அந்த வீட்டையும் அந்த மரத்தையும் பார்த்தால் அங்குதான் இருப்பால் என்று எண்ணி என் எண்ணங்களை ஒரு மூளையில் வைத்துவிட்டு அதன் அருகில் சென்றேன். என் கண்ணுக்கு தெருவதால் பின்புறமாக இருக்கிறது ஏன் என்று தெரியவில்லை. சரி அந்த வீட்டிற்கு முன்புறத்தில் நோக்கி நடக்க முயன்றபோது என் கண்னுக்கு தெரிந்ததது அவள் ஒருவம் அதுவும் பின்புறமாக தான் இருந்தாள். அவளை தொட முயன்றாலே காற்று வீச ஆரம்பிக்கிறது. அதையும் தாண்டி அவளை தொட்டுவிட்டேன்.இபோது அவள் என்ன செய்து இருப்பாள் என்று நினைகிறங்க! திரும்பி பார்ப்பாள் எண்ணிதான் நானும் கை வைத்தேன் அவள்மீது ஆனால் திரும்பவே இல்லை.                  
                               பார்ப்பதற்கு பதிலாக சிரித்தாள். சிரித்து இருந்தாள், சிரித்து கொண்டு இருப்பாள், சிரித்து கொண்டே இருப்பாள் போல இதை கண்ட எதற்கும் அச்சமடையமாட்டேன். இப்போது அவளை பார்க்கமாலே அவளின் சிரிப்பில் பயந்துவிட்டு திரும்பி ஓட ஆரம்பிக்கும்போது கால் தவறி கீழ விழுந்துவிட்டேன். எழுந்து பார்த்தால் அதிக அளவில் தூரலுடன் கூடிய காற்று வீச ஆரம்பித்ததது. எழுந்து நின்றால் என் கால் தானாக ஒதர ஆரம்பிக்கிறது. பின்னாடி பார்த்தால் பிசாசு போல சிரிக்கும் பெண் முன்னாடி ஓட ஆரம்பித்தேன். அந்த மரத்தை நேக்கி பார்த்துக்கொண்டே ஓடும்போது ஒரு ஒருவம் கூட தெரியவில்லை. அருகில் செல்லும்போது ஏதோ வெள்ளையான ஒருவம் கயிற்றை பிடித்து தொங்கி கொண்டுருந்ததது. இன்னும் அருகில் சென்று பார்த்தால் அது கழுத்தில் தூக்கு போட்டுக்கொண்டு என்னை பார்த்து அதிக அளவில் சிரித்துக்கொண்டே இருந்ததது. என்ன செய்வது என்று தெரியாமல் நின்று சிறிது நேரம் யோசித்தேன். முடிவு எடுத்தேன் ஓடுவதற்கு அதுவும் கண்ணை முடிக்கொண்டு திரும்பி பார்க்காமல் ஓடினேன். ஓடிக்கொண்டே இருக்கிறேன். இப்படி ஓட மாட்டேனே எப்படி ஓடுகிறேன் என்று கண்ணை திறந்து பார்த்தால் உரக்கத்தில் இருந்த நான் எழுந்து ஒரு சுற்றில் முட்டிக்கொண்டு ஓடிக்கொண்டுயிருக்கிறேன். அதை யாரும் பார்க்கவில்லை அப்படியும் ஒரு கனவு இப்படியும் ஒரு கனவா!,......கடவுளே             இரண்டாவது விதமும் கனவிலா,...             இதுவும் காதல் தான் ஆனால் என்ன அச்சத்தில் தொடங்குகிறது. ஆரம்பித்தில் தெரியாது காதலா என்று போக போக தெரியும்.   

மேலும்

தலை தெரிக்க ஓடினேன்

  

                     ஒரு ஊர் என்றால் அதற்கு பெயர் ஒன்று இருக்கும் அல்லவா. தெரியாதவர்கள் அந்த ஊருக்கு சென்றால் எப்படி கண்டுப்பிடிப்பது கூறுங்கள். ஊருக்கு வெளியே பெயர் பலகை வைத்து இருப்பார்கள் அதை வைத்து கண்டுபிடிக்கலாம். அதே போல நானும் ஒரு ஊருக்கு சென்றேன். அந்த ஊரின் பெயர் எனக்கு தெரியவில்லை. பலகையில் பார்க்கலாம் என்று பார்த்தால் அந்த பலகை பாதி அழிந்தும் அழியாமலும் பெயர் தெரிந்தும் தெரியாமலும் பாதியுடன் காணப்பட்டது.       
                                 இதையும் தாண்டி ஊருக்கு போகலாம் என்று நடந்தேன். நடப்பாதையானது மண்சாலை அதுவும் தொடர்சாலை தொலைதூரத்தில் வரைக்கும் செல்கிறது அந்த பாதை. அந்த பாதையில் ஒரே ஒரு மரம் மட்டும் தான் தெரிந்தது. மற்ற மரங்கள் காணவில்லை. அந்த மரம் பெரியளவில் இலைகள் காய்ந்தும் போகவில்லை ,பசுமையாகவும் இல்லை.         அந்த மாலைநேரத்தில் சிறிது காற்று கூட வீசவில்லை. மரத்தில் இலைகள், கிளைகள் தவிர வேர ஏதுமில்லை.சிறிது சத்தமில்லை. நான் தனியாக நின்றேன். அப்போது சூழ்நிலை பாடல் தெரியுமா!        ’’’’தனிகாட்டில் தனிமை வந்தததே’’’’’என்ற யுவன் சக்கர் ராஜா பாடல் தான்.      
                                   மாலைநேரத்தில் தனிமையில் நடக்கிறேன். யாரா இருந்தாலும் அச்சம் இருக்கும். மரம் ஒன்று கூறினேன் அல்லவா. அந்த மரத்தை நோக்கி நடந்தேன். அப்போது தான் எனக்கு ஒரு ஒருவம் தெரிந்தது. அது என் கண்களுக்கு திருஒருவம் போல காண்பிக்கப்பட்டது. ஆனால் என்ன ஒருவம் தெரியவில்லை. காரணம் என் வயது அப்படி. என்ன வயதா! 20 தான். இந்த வயதில் அவ்வளவு கண் தெரியாது.எதாவது ஒரு பெண்ணை பார்த்தால் போதும் கண்களை கடன் வாங்கி கூட பார்ப்போம்.          கூர்ந்து கவனித்தபோது அது பெண் ஒருவம். எனக்கு மனம் ஆருதல் படுத்தி நடந்தேன். அந்த பெண்ணிடம் இது எந்த ஊர் என்று கேட்கலாம் என்று நெருங்கி செல்ல முயற்சித்தேன். மரத்தை தாண்டி சென்றேன். இப்போது நன்றாக தெரிந்தது அவள் ஒருவம். எப்படி இருந்தாள் தெரியுமா,.....           கூந்தல்,...அப்படி ஒரு கூந்தலை இந்த காலத்து பெண்கள் வைத்து இருந்தால் அவ்வளவு தான் அவர்களை கையால் பிடிக்க முடியாது. சின்ன கூந்தல் வத்து இருப்பவர்களே வெளியே செல்ல வேண்டும் என்றால் நேரமாகிறது. இவள் வெளியே செல்வதற்கு முன் நாளே கேளம்ப வேண்டும். அவ்வளவு நீளமான கூந்தலை உடையவள். தலை வாரவில்லை. முடி கலைந்து இருந்தது. 4 நாட்களாக வரவில்லை போல.     அவள் உடை சட்டை பாவடையும், தாவணி மாதியும்   இல்லை. இவற்றை கலந்து அணிந்து இருந்தால், அதன்                  
                                 நிறம் வெள்ளை துணியை மண்ணில் கீழே விழுந்து எழுந்தால் ஏற்படும் நிறத்தில் காணப்பட்டது. கைகளில் வளையல்கள் கிடையாது. அழகு சாதனப்பொருட்கள் பயன்படுத்தியது இல்லை. இப்படி ஒரு சாதாரணப் பெண்ணை பார்க்கனும் ஆர்வம் அதிகம்.      
                                   ஆர்வத்தை ஓரமாக போட்டுவிட்டு அவளை நோக்கி வேகமாக நடந்தேன். நெருங்கிவிட்டேன். அவள்மீது கை வைத்து திரும்பி பார்க்கலாம் என்று முயற்சித்தேன். அப்போது காற்று வீசாத இடத்தில் எங்கு இருந்தது தெரியவில்லை. மழை வருவதற்கு முன் வரும் காற்று வீசும் அல்லவா அப்படி வீசியது. என் கண்ணில் தூசி விழுந்தது. அதை துடைத்துவிட்டு பார்த்தால் காணவில்லை. சுற்றிலும் பார்த்தேன் காணவில்லை. சரி அப்படியை தொடர்ந்து நடந்தேன். என் கண்களுக்கு தொலைவில் ஒரு வீடு தெரிந்து அதன் அருகில் செல்ல நடந்தேன். வீட்டின் பக்கத்தில் மரம் ஒண்று இருந்தது. அருகில் சென்றபோது அவள் அங்கு பார்த்தேன்.                            
                                             எனக்கு அவளை பார்க்கவேண்டும் என்று பக்கத்தில் சென்றேன். அவள்மீது கைவைத்துவிட்டேன். யாராவது பின்புறம் கை வைத்தாள் என்ன செய்யவெண்டும் திரும்பி பார்க்கனும் தானே. ஆனால் அவள் திரும்பவிலலை.          அதற்கு அவள் என்ன செய்தாள் தெரியுமா!                               சிரித்தாள்,..................       
  அச்சம் என்றால் என்னனு எனக்கு தெரியாது. அவள் சிரித்தத்தை பயந்துவிட்டேன்.                   சிரிக்கிறாள்,..........       
 சிரித்துக்கொண்டு இருக்கிறாள்,...........       
 சிரித்துக்கொண்டே இருக்கிறாள் போல,........       
 நீ திரும்பவே வேணாம் என்று நான் திரும்பி ஓட ஆரம்பித்தேன். ஆனால் ஓடவில்லை. காரணம் கீழே விழுந்துவிட்டேன். விழுந்து ஓட ஆரம்பித்தேன். காற்று ஒரு புறம் பலமாக வீசியது.      
ஓடினேன்,.....
ஓடினேன்,.....
ஓடினேன்,.........  
           தொலைவில் அந்த மரம் தெர்ந்தது. வழி தவறாமல் தான் வருகிறேன் என்று ஓடிக்கொண்டு பார்த்தாள்! அந்த மரத்தில் ஏதே ஒருவம் நின்றுக்கொண்டு இருந்தது. அதை கூர்ந்து பார்த்தால் அது நிற்கவில்லை தொங்கி கொண்டுருந்தது.             
            ஒரு பெண் வெள்ளை நிறத்துணியுடன் தூக்கு தொங்கிறது. பயத்தில் கால்கள் ஓடாமல் நடுங்கியது. என்ன செய்வது என்று யோசித்தேன்.        கண்களை மூடி கடவுளை நினைத்து தலைதெரிக்க ஓடினேன்.    
    ’’’’”தெரிக்க விடலாமா’’’’’’’’’    
     மரத்தை கடந்து முதலில் வந்த இடத்திற்கே வந்தேன். மீண்டும் அந்த சிரிப்பு என்னை செருப்பாள் அடிப்பது போல சிரித்துக்கொண்டே வந்ததால் மீண்டும் தெரிக்கவிடலாம் என்று ஓடும்போது கல் தடுக்கி கீழே விழுந்து எழுந்தாள் வீட்டில் இருக்கிறேன். கனவு கண்டு கட்டிலில் இருந்து கீழே என் பாட்டியின் மீது விழுந்தேன். பாட்டி மீது விழுந்ததால் தொடக்கட்டையில் அடி வாங்கினேன்.
 நான் சிரித்துக்கொண்டே,..      
 ’’’’’மகிழ்ச்சி’’’’’’
என்று கூறிவிட்டு,ஓடிவிட்டேன்,............               

மேலும்

தவணை காதல்    

   

                 அன்று எனக்கு வண்டி வாங்க வேண்டும் என்று டூ வீள் நிறுவனத்திற்கு சென்றேன். கையில் ஒரளவுக்கு பணம் வைத்து இருந்தேன். அந்த நிறுவனத்தில் சென்று வாகனத்தை பார்த்துக்கொண்டு எது நல்ல வண்டியை அதை வாங்கனும் என்பதில் அனைத்து வண்டியும் பார்த்தேன். எனக்கு பிடித்த வண்டியை பார்த்துவிட்டேன். அதையும் வாங்க வேண்டும் என்ற ஆசையில் பணத்தை எடுத்து எண்ண ஆரம்பித்தேன். ஆனால் பணம் சிறிது குறைவாக இருந்தது.அப்போது அங்கு இருந்தவர் தவணை பற்றி கூறினார். மாதம் மாதமாக கட்டலாம் என்று கூறினார். எனக்கு சரியாக புரியவில்லை. அதை விலக்க ஒரு பெயரை கூரி அழைத்தனர். அந்த பெயரே அப்படி இருக்கே அவள் எப்படி இருப்பாள்.          
                அவள் பெயர் காவ்யா. அவள் கதவை திறந்து வரும்போது பார்க்கனுமே. முதல் முதலில் பார்க்கிறென் அல்லவா. எல்லாம் பொறுமையாக நடக்கிறது. அவளை பார்ப்பதும் தான். அவள் வரவும் காற்று வீசவும் அதில் அவள் முடி பறக்கவும் அதை நான் பார்த்து மயங்கவும் அவள் நோக்கி வந்தாள். நான் அவளே பார்த்தேன். எவ்வளவு நாட்களாக இவள் எங்கே இருந்தாள். இப்போது தான் என் கண்களுக்கு காண்பிப்பாயாம்கடவுளே. அது என்ன பெண்களை பார்க்கும்போது தானா காற்று வீசும் இன்னும் வேர என்ன சொல்லபோர கூறு கேட்டு தொலைக்கிறேன் என்று கூற வேண்டாம். அது ஒரு ஹ்டோர் ரூம் அதனால் தான் அங்கு பேன் வைத்து இருந்தாங்க அதில் வந்த காற்றில் தான் முடி பறந்தது. அவள் அழகு பற்றி கூறவேண்டும் என்று தான் ஆசை ஆனால் வேணாம். நான் பார்த்துக்கொண்டு இருந்த வேலையை விட்டு அந்த இடத்தில் குறைந்த சம்பளத்தில் சேர்ந்தேன். எல்லாமேஅவளுக்காக! அவளுக்கு என ஒரு ரூம் இருக்கும் அதில் கண்ணாடி டேபுள் இருக்கும். எனது தவணையாக கட்ட வேண்டியது குறைவு தான் அதை பற்றி கூறிவிட்டால் அதை நானும் காது கொடுத்து கேட்கவில்லை. அவளை தான் பார்த்துக்கொண்டு இருந்தேன். அவளுக்கு தெரியும் அது வேளைக்கு சேர்ந்தேம். அவளை தினமும் ரசிப்பேன். அப்படியாவது காதலை கூறவோம் என்று யோசித்து வைத்தேன். ஐடியா வந்தது.அதன்படியே செய்தேன்.      
          ””ஐ ல்வ் யு”” என்ற ஆங்கில வார்த்தைகள் மொத்தமாக 8 உள்ளது. 8 நாட்களாக வேலைக்கு செல்வோம். கடையில் நாளில் காதலை கூறுவோம் என்று இருந்தேன். முதல் நாளில் ஐ என்ற எழுத்தை அழியாத பென் ஒன்றில் அவளின் டேபுளில் எழுதிவிட்டு வந்துவிட்டேன். அது கண்ணாடி டேபுள் அவளுக்கு மட்டும் தான் அது. யாரு எழுதி இருப்பங்க என்று யோசித்து கொண்டு இருந்தாள். ஏழு நாட்களில் நான் ஒவ்வொரு எழுத்துக்களா எழுதிவிட்டேன்.அவளுக்கு தெரியாமலே! அந்த ஏழு நாட்களுக்கு நான் வேலை செய்வது இல்லை என் வேலையை அவளை பார்ப்பது தானே! நானும் பார்ப்பேன் அவளும் பார்ப்பாள். எட்டாவது நாளன்று யு என்ற எழுத்து எழுதும்போது நான் மாட்டிக்கொண்டேன். அவள் என்னிடம் நீ தானா என்று கேட்டாள். ஆமாம் என்று கூறினேன். அவளுக்கு ஆர்வம் அதிகமாக இருந்தது. இது யார் எழுதி இருப்பங்க என்று. நான் தான் தெரியும் ஆனால் தெரிந்தது போல நடிப்பது.            
                    அவளிடம் காதலை கூறினேன். அவள் பதிலுக்கு என்ன கூறினாள் தெரியுமா!             கேட்டவுடனே அந்த வேலையை விட்டு வந்துவிட்டேன். அவள் கூறியது இதுதான். எனக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது என்றால் அப்புறம் எதற்கு நான் பார்க்கும்போது என்னை பார்த்தாய் என்று கேட்டால் அதற்கு என் பார்வையை அப்படிதான் என்றால்,.....             
           என்ன கொடுமை இது,......          
             பல்பு நன்றாக எரிந்தது. அதை காட்டிக்கொள்ளாமல் திரும்பி பார்க்காமல் வந்துவிட்டேன்.              

மேலும்

மேலும்...

மேலே