எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

செய்ந்நன்றி அறிதல்

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.


கலைஞர் மு.கருணாநிதி உரை:
வாராது வந்த மாமணி ( என்பதுபோல், செய்யாமற் செய்த உதவி) என்று புகழத்தக்க அரிய உதவி வழங்கப்பட்டால், அதற்கு இந்த வானமும் பூமியும் கூட ஈடாக மாட்டா.

மு.வரதராசனார் உரை:
தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.

சாலமன் பாப்பையா உரை:
ஒருவருக்கு ஒரு நன்மையும் நாம் செய்யாத போதும், அவர் நமக்கு உதவினால், அதற்குக் கைம்மாறாக மண்ணுலகையும் விண்ணுலகயும் கொடுத்தாலும் சமம் ஆகாது.

பரிமேலழகர் உரை:
[அஃதாவது, தனக்குப் பிறர் செய்த நன்மையை மறவாமை. இனியவை கூறி இல்லறம் வழுவாதார்க்கு உய்திஇல் குற்றம் செய்ந்நன்றி கோறலேயாகலின் , அதனைப் பாதுகாத்துக் கடிதற் பொருட்டு, இஃது இனியவை கூறலின்பின் வைக்கப்பட்டது. )

செய்யாமல் செய்த உதவிக்கு - தனக்கு முன் ஓர் உதவி செய்யாதிருக்க ஒருவன் பிறனுக்குச் செய்த உதவிக்கு; வையகமும், வானகமும் ஆற்றல் அரிது - மண்ணுலகும் விண்ணுலகும் கைம்மாறாகக் கொடுத்தாலும் ஒத்தல் அரிது. (கைம்மாறுகள் எல்லாம் காரணமுடையவாகலின், காரணம் இல்லாத உதவிக்கு ஆற்றாவாயின. 'செய்யாமைச் செய்த உதவி' என்று பாடம் ஓதி 'மறித்து உதவமாட்டாமையுள்ள இடத்துச் செய்த உதவி' என்று உரைப்பாரும் உளர்.).

மணக்குடவர் உரை:
முன்னோருதவி செய்யாதார்க்கு ஒருவன் செய்த வுதவிக்கு உலகமுஞ் சுவர்க்கமும் நிறையாற்றுத லரிது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
தனக்கு, முன்பு ஓர் உதவியும் செய்யாதிருக்க ஒருவன் பிறர்க்குச் செய்த உதவிக்கு இவ்வுலகத்தினையும் வானுலகத்தினையும் கைம்மாறாகக் கொடுத்தாலும் ஈடாகா.

மேலும்

திருக்குறள் கூறும் நட்பு

செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு
[நட்பு செய்வது போன்ற அறிய செயல் வேறில்லை; அதுபோல பாதுகாப்பிற்கு உகந்த செயலும் வேறில்லை ]

அழிவினவை நீக்கி ஆறித் தவின்கன்
அல்லல் உழைப்பதாம் நட்பு
[நண்பனை தீய வழியில் சென்று கெட்டுவிடாமல் தடுத்து, அவனை நல்வழிநடக்கச் செய்து அவனுக்கு தீங்கு வருங்காலத்தில் அந்த தீங்கின் துன்பத்தை பகிர்ந்துகொள்வதே நட்பு]

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு
[அணிந்திருக்கும் உடை எப்படி உடலைவிட்டு நழுவும்போது கைகள் உடனடியாகச் சென்று சரி செய்கின்றதோ அதைப்போல நண்பனுக்கு வருகின்ற துன்பத்தை போக்க துடித்து செயல்படுவதே நட்பின் இலக்கணமாகும்]
என்று நட்பின் மேன்மையைப்பற்றி கூறுகிறார். அடுத்ததாக நட்பென்பது எதற்காக என்று வலியுறுத்துகிறார்.

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென் றிடித்தர் பொருட்டு
[நட்பென்பது சிரித்து மகிழ்வதற்காக அல்ல; நண்பர்கள் நலவழித் தவறிசெல்லும்போது இடித்துரைத்து திருத்துவதற்காகும்], அடுத்தது உண்மையான நட்பென்பது எவ்வாறு இருக்கவேண்டும் அதை எப்படி ஆராய்ந்து அறிவது என்பதற்கு நமக்கு பல யோசனைகளை வழங்குகிறார் அவற்றில் சில:

ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான் சாம் துயரம்தரும்.
[ திரும்பத் திரும்ப ஆராய்ந்து பார்க்காமல் ஏற்ப்படுத்திகொள்கின்ற நட்பு கடைசியில் ஒருவரின் மரணத்திற்கு காரணமாகின்ற அளவிற்கு துயரத்தை உண்டாக்கிவிடும்] தீய நட்பு என்பது எப்படி இருக்கும் என்று நமக்கு படம் பிடித்து காட்டுகிறார்:

கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்
[தீமை வந்தாலும் அதிலும் ஓர் நன்மை உண்டு, அந்த தீமைதான் நண்பர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று அளந்து காட்டுகிறது]

பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலிற் குன்றல் இனிது
[நல்ல பண்பு இல்லாதவர்களின் அன்பு வெள்ளத்தில் நம்மை மூழ்கடிப்பது போல தோன்றினாலும் அவர்களது நட்பை, மேலும் வளர்த்துக் கொள்ளாமல் குறைத்துக்கொள்வதே மேன்மை]

உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர்
[பயனை எண்ணிப்பார்த்து அதற்காகவே நட்பு கொள்பவரும், விலைமாதரும், கள்வரும் ஆகிய இம்மூவரும் ஒரே மாதிரியானர்வகளே]

முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
வஞ்சரை அஞ்சப்படும்
[சிரித்துப் பேசி நம்மை சீரழிக்க நினைக்கும் வஞ்சகரின் நட்புக்கு அஞ்சி ஒதுங்கிடவேண்டும்]

இவ்வாரெல்லாம் நட்பினை பற்றி நமக்கு விளக்கமளித்துவிட்டு கடைசியாக அப்படியே தவறி அறியாமல் தவறான நண்பரை தேர்வு செய்துவிட்டோம் என்றால் நமக்கு அதிலிருந்து விடுபடவும் வழிகளை காட்டுகிறார்.

பகைநட்பாங் காலம் வருங்கால் முகநட்
டகநட் பொரீ விடல்
[பகைவருடன் பழகிடும் காலம் வருமேயானால் அகத்தளவில் இல்லாமல் முகத்தளவில் நட்புச் செய்து பின்னர் அதையும் விட்டுவிட வேண்டும்]

மிகச்செய்து தாமெள்ளுவாரை நகச்செய்து
நட்பினுட் சாப்புல்லற் பாற்று
[வெளித் தோற்றத்திற்கு நகை முகம் காட்டி மகிழ்ந்து உள்ளுக்குள் பகையுணர்வுடன் இகழ்பவரின் நட்பை நலிவடைய செய்திட நாமும் அதே முறையை கடைபிடிக்க வேண்டும்]

மேலும்

நட்பு திருக்குறள்

செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.

நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு.

நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு.

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்செனறு இடித்தற் பொருட்டு.

புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்.

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.

அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு.

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.

நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.

இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு.

மேலும்

பண்பு உடைமை

எண் பதத்தால், எய்தல் எளிது என்ப, யார்மாட்டும்,
பண்பு உடைமை என்னும் வழக்கு.

அன்பு உடைமை, ஆன்ற குடிப்பிறத்தல், இவ் இரண்டும்
பண்பு உடைமை என்னும் வழக்கு.

உறுப்பு ஒத்தல் மக்கள் ஒப்பு அன்றால்; வெறுத்தக்க
பண்பு ஒத்தல், ஒப்பது ஆம் ஒப்பு.

நயனொடு நன்றி புரிந்த பயன் உடையார்
பண்பு பாராட்டும், உலகு.

நகையுள்ளும் இன்னாது, இகழ்ச்சி; பகையுள்ளும்
பண்பு உள, பாடு அறிவார் மாட்டு.

பண்பு உடையார்ப் பட்டு, உண்டு உலகம்; அது இன்றேல்,
மண் புக்கு மாய்வதுமன்.

அரம் போலும் கூர்மையரேனும், மரம் போல்வர்,
மக்கள் பண்பு இல்லாதவர்.

நண்பு ஆற்றார் ஆகி, நயம் இல செய்வார்க்கும்,
பண்பு ஆற்றாராதல் கடை.

நகல் வல்லர் அல்லார்க்கு மா இரு ஞாலம்,
பகலும், பாற் பட்டன்று, இருள்.

பண்பு இலான் பெற்ற பெருஞ் செல்வம்-நன் பால்
கலம் தீமையால் திரிந்தற்று.

மேலும்

மழை திருக்குறள்

" நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு " 

விளக்கம் : (முனைவர் ச .மெய்யப்பன் )                        எவ்வகையில் உயர்ந்தவரும் நீர் இல்லாமல் இவ்வுலகில் வாழ முடியாது . அதுபோலத் தண்ணீரின் இடையறாத ஓட்டமும் மழை பெய்யவில்லை என்றால் இல்லையாகும்.

நீரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் குறள் இது . தண்ணீர் ," திரவத் தங்கம் " என்று அழைக்கப்படுகிறது . தண்ணீர் இல்லாமல் நம் வாழ்க்கையை கற்பனை கூட செய்ய முடியாது . உலகத்தில் உள்ள நீரில் 3 % மட்டுமே நல்ல தண்ணீர் . இதை மட்டுமே நாம் குடிக்கப் பயன்படுத்த முடியும் . இதிலும் 2 % சதவீத தண்ணீர் பனிக்கட்டியாக உள்ளது . வெறும் 1 % தண்ணீர் மட்டுமே பூமி முழுவதும் நாம் வாழும் பகுதியில் கிடைக்கிறது . மழை பெய்வதன் மூலம் மட்டுமே நாம் அதிகளவு நல்ல தண்ணீரைப் பெறுகிறோம் . மழை பெய்வதற்கு முக்கிய காரணமாக இருப்பது அடர்ந்த வனப்பகுதிகள் தான் . உலகமயமாததாலும் , பொருளாதாரமயமாததாலும் எல்லா நாடுகளிலும் வனப்பகுதியின் அளவு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது .

மேலும்


பிரபலமான எண்ணங்கள்

மேலே