எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நறுக்குனு நாலு கேள்வி..

ஒரு அப்பனுக்கு மகனாய்
பெண்மையை 
கொடுமை செய்துவிட்டு போ
ஒரு பெண்ணுக்கு அப்பனாகும்
சமயத்தில் என்ன செய்வாய்?

ஒரு பணக்காரனாய் விவசாயிகளை
தூக்கில் தொங்கவிட்டு வேடிக்கை பார்
விவசாயி எவனும் இல்லா தேசத்தில்
சோற்றுக்கு என்ன செய்து உயிர் வாழ்வாய்?

பொய் எல்லாம் சொல்லி ஓட்டு வாங்கி
நாட்டை சீரழித்து வாழ்ந்துவிட்டு போ
உன் மகன் அரசியலில் இல்லாத போது
நாடு போடும் வரியை கட்ட என்ன செய்வாய்?

மதத்தை சொல்லி உயிர்களை
பிணக்குவியலாய் மாற்றிவிட்டுப் போ
மடிந்து நீ போகும் போது
உன் மதக கடவுளே நீ தவறு செய்தாய்
என்று சொல்லி நரகத்துக்கனுபினால்
நீ எந்த மதம் என்று சொல்லி ஏமாற்றுவாய்?

மேலும்

அருமை...... 03-Mar-2018 3:00 pm

மேலே