எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நிமிர்ந்து நில்லம்மா

கண்ணு பொன்னு கலங்காதே
காலம் மாறும்மா; நீ
வெற்றி நோக்கி நடந்தாலே
எல்லாம் மாறும்மா.. நீ சொன்னாச் சொல்லுக்கு சூரியன்நிக்கும்
சொல்லிப்பாரும்மா
உன் கவிழ்ந்தத் தலையில் உலகம்சாயும்
நிமிர்ந்து நில்லம்மா.. (கண்ணு பொன்னு கலங்காதே..) விதவைன்னு சொன்னது யாரு
வரதட்சணை கேட்டது யாரு
மலடின்னு பழிச்சதாரு
மருமக(ள்)ன்னு கொன்னது யாரு
அடப் பெண்சிசுன்னுவிஷம் வைத்ததாரு?
எல்லாம் பெண்ணே நீயும்தானே
மாத்தி யோசிம்மா;
இந்தக் காலம் உனக்கு’ உனக்காக
திருப்பிப் போடும்மா.. (கண்ணு பொன்னு கலங்காதே..) விண்வெளியெட்டி தொட்டுட்ட
ஸ்டெதாஸ்கோப் மாட்டிட்ட
அரசியலில் அறிவியலில்
முன்னேநடக்கத் துவங்கிட்ட
நீதிமன்றம் காவல்நிலையம் – உன்னைச்
சேர்க்குது; நீ எழுந்துநடக்க நினைத்தாலே
சலாம் போடுது;
உனக்கு சலாம் போடுது.. (கண்ணு பொன்னு கலங்காதே..) கலாச்சாரச் சர்க்கரை – தேவைறிந்துப்
போட்டுக்கோ
சாதிமதம் ஏற்றத் தாழ்வை – அடியோட
நீக்கிக்கோ, நீயும்நானும் ஒண்ணுதான்னு
தோழமையில் காட்டிக்கோ –
தொங்குந்தாலி நெஞ்சிமேல உறவைச் சேர்க்கட்டும்
உன்னைக் கண்ணுக்குள்ள கண்ணா வச்சு
காலம் தாங்கட்டும்…
உன்னைக் காலம் தாங்கட்டும்… (கண்ணு பொன்னு கலங்காதே..)

மேலும்

கடவுள் என்னும் முதலாளி பாடல் வரிகள்

கடவுள் என்னும் முதலாளி
கண்டெடுத்த தொழிலாளி
விவசாயி .... விவசாயி ....
கடவுள் என்னும் முதலாளி
கண்டெடுத்த தொழிலாளி
விவசாயி .... விவசாயி ...

முன்னேற்ற பாதையிலே மனச வைத்து
முழு மூச்சா அதற்காக தினம் உழைத்து
முன்னேற்ற பாதையிலே மனச வைத்து
முழு மூச்சா அதற்காக தினம் உழைத்து
மண்ணிலே முத்தெடுத்து பிறர் வாழ
மண்ணிலே முத்தெடுத்து பிறர் வாழ
வழங்கும் குணம் உடையோன் விவசாயி
விவசாயி ... விவசாயி ....

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்
ஒழுங்காய் பாடு படு வயல் காட்டில்
ஒழுங்காய் பாடு படு வயல் காட்டில்
உயரும் உன் மதிப்பு அயல் நாட்டில்
விவசாயி .... விவசாயி ....

கருப்பென்றும் சிவப்பென்றும் வேற்றுமையாய்
கருதாமல் எல்லோரும் ஒற்றுமையாய்
கருப்பென்றும் சிவப்பென்றும் வேற்றுமையாய்
கருதாமல் எல்லோரும் ஒற்றுமையாய்
பொறுப்புள்ள பெரியோர்கள் சொன்னபடி
பொறுப்புள்ள பெரியோர்கள் சொன்னபடி
உழைத்தால் பெறுகாதோ சாகுபடி
விவசாயி .... விவசாயி ....

இருந்திடலாம் நாட்டில் பல வண்ணக்கொடி
எத்தனையோ கட்சிகளின் எண்ணப்படி
இருந்திடலாம் நாட்டில் பல வண்ணக்கொடி
எத்தனையோ கட்சிகளின் எண்ணப்படி
பறக்க வேண்டும் எங்கும் ஒரே சின்னக் கொடி
அது பஞ்சம் இல்லை என்னும் அன்னக்கொடி
பஞ்சம் இல்லை என்னும் அன்னக்கொடி
விவசாயி .... விவசாயி ....

மேலும்

அச்சம் என்பது மடமையடா பாடல் வரிகள்

அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா
தாயகம் காப்பது கடமையடா 

அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா
தாயகம் காப்பது கடமையடா

கனகவிஜயரின் முடித்தலை நெறித்து
கல்லினை வைத்தான் சேர மன்னன்
இமய வரம்பினில் மீன்கொடி ஏற்றி
இசை பட வாழ்ந்தான் பாண்டியனே 

அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா
தாயகம் காப்பது கடமையடா

கருவினில் மலரும் மழலையின் உடலில்
தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை
களங்கம் பிறந்தால் பெற்றவள் மானம்
காத்திட எழுவான் அவள் பிள்ளை 

அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா
தாயகம் காப்பது கடமையடா

வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்கின்றார்

அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா
தாயகம் காப்பது கடமையடா

மேலும்

அவளும் நானும் பாரதிதாசன் அவர்களின் கவிதை பாடல் வடிவில் - ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின்  ரம்யமான இசையில்.


அவளும் நானும்
அமுதும் தமிழும்
அவளும் நானும்
அலையும் கடலும்
அவளும் நானும்
தவமும் அருளும்
அவளும் நானும்
வேரும் மரமும்
ஆளும் நிழலும்
அசைவும் நடிப்பும்
அணியும் பணிவும்
அவளும் நானும்
அவையும் துணிவும்
உழைப்பும் தழைப்பும்
அவளும் நானும்
அளித்தாலும் புகழும்
மீனும் புனலும்
விண்ணும் விரிவும்
வெற்பும் தோற்றமும்
வேலும் கூறும்
ஆறும் கரையும்
அம்பும் வில்லும்
பாட்டும் உறையும்
நானும் அவளும்
நானும் அவளும்
உயிரும் உடம்பும்
நரம்பும் யாழும்
பூவும் மனமும்
நானும் அவளும்
உயிரும் உடம்பும்
நரம்பும் யாழும்
பூவும் மனமும்
அவளும் நானும்
தேனும் இனிப்பும்
அவளும் நானும்
சிரிப்பும் மகிழ்வும்
அவளும் நானும்
திங்களும் குளிரும்
அவளும் நானும்
கதிரும் ஒளியும்
அவளும் நானும்
அமுதும் தமிழும்
அவளும் நானும்
அலையும் கடலும்
அவளும் நானும்
அமுதும் தமிழும்
அவளும் நானும்
அமுதும் தமிழும்  

மேலும்


பிரபலமான எண்ணங்கள்

மேலே