எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.


ஒற்றுமை வாழவைக்கும் !

=======================
தொடங்கிடும் வாழ்க்கை அடங்கிடும் ஒருநாள்இயற்கையின் நியதியை செயற்கை வெல்லாது மாற்றிட முடியாததை மாறுமென நினையாதீர் நிகழ்காலம் நடைமுறை எதிர்காலம் கற்பனையே சிந்திப்பதும் சாதிப்பதும் சிந்தையின் சாதனையே பொய்மை நிலைக்காது வாய்மை விருட்சமாகும் கனவுகள் பலிக்காது முயற்சிகள் வென்றிடும் மடமைக்கு தோல்வியே திறமைக்கு  வெற்றியே சுயநலம் குழிதோண்டும் பொதுநலம் உயர்த்தும் பிரிவினை அழித்துவிடும்ஒற்றுமை வாழவைக்கும் !
பழனி குமார் 10.06.2023

மேலும்

உப்புமா - ஒரு கவிதை


எழுகடல் புகுந்த சிறு குண்டள்ளிப் போட
அது வெடித்து சிதற
வெங்காயங்கள் வெட்டுப்பட்டு 
வதங்க- பின்பும்
மனமிளகா மல்லுக்கு நிற்க
ஆறாமல்
மேலும் பற்பல இடிபடும்
கடின ரவைகள்
எறிந்து பட
மேகக் கண்ணீர் கடல் வடித்த
மணல் சேர்க்க
ஆங்கே
ஒரு ஆக்ரோஷ கலவை
செய்தேனடி
உனக்கே உனக்காக
உப்புமா கிண்டினேனடி
எனக்கே எனக்கான காலையில்!

மோக்‌ஷா 😀

மேலும்

காலத்தின் வழியில் 

நாம் செல்கிறோமா 
காலம் நம்மை 
வழிநடத்துகிறதா 
என்று தெரியவில்லை..


நடப்பது எல்லாம் 
விதியெனக் கூறுவது 
வாடிக்கை பலருக்கு.. 
நடப்பவை எதுவாகினும் 
தன் வழியில் சென்று 
கடந்து செல்கின்றனர் 
கவலையின்றி சிலர்...


இன்று வாழ்கிறோம் 
நாளை அறியோம் !


உள்ளத்தில் உறுதியுடன் 
நெஞ்சில் துணிவுடன் 
எதையும் எதிர்கொண்டு 
எதிலும் வெற்றி காண்போம் !


பழனி குமார் 20.10.2021  

மேலும்

நல்ல உதாரணம் . நன்றி 24-Oct-2021 12:19 pm
இன்று வாழ்கிறோம் நாளை அறியோம் ! -----உண்மை . இதை கொரோனா மிகவும் உறுதி செய்து விட்டது . நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்திவ் வுலகு -----என்பார் வள்ளுவர் --நேற்றிருந்தவன் இன்றில்லை ; இன்றிருப்பவன் நாளை இருப்பானா ? யாரறிவார் ? நம்பிக்கைதான் நாளை. நம்பிக்கைதான் இறைவன். நம்பிக்கைதான் வாழ்க்கை . நம்பிக்கைதான் வாழ்க்கைக் கப்பலின் மாரினேர்ஸ் காம்பஸ் ! 23-Oct-2021 7:06 pm

யதார்த்த நிலை ..
---------------------------------

ஒருவரின் வாழ்க்கை தாலாட்டில் ஆரம்பித்து ஒப்பாரியில் முடிகிறது . முதலாவது கேட்டாலும் புரியாத மழலைப் பருவம் . இரண்டாவது கேட்க முடியாத நிலை . 

இடைப்பட்ட காலத்தில் ஒருவர் கேட்கும் பலவிதமான ஏச்சும், பேச்சும், வாழ்த்தும், சந்திக்கும் நல்லதும் கெட்டதும், ஏற்படும் மகிழ்ச்சியும், சோகமும் மற்றும் அனைத்து நிகழ்ச்சிகளும் நெஞ்சில் தங்கிவிடும். சிலவற்றை நாம் மறந்தாலும் , பலவற்றின் நினைவுகள் நம்மோடு இருந்து மறைந்து விடும்.

வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடுவரை பிள்ளை, கடைசி வரை யாரோ... கவியரசரின் வைர வரிகள் வாழ்க்கையின் உண்மை தத்துவம். அவரைவிட மிக எளிமையாக உணர்வுபூர்வமாக இனி எவரும் வாழ்க்கையை விளக்கிக் கூற முடியாது. 

நாம் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் நம்மைப் பற்றிய பேச்சுக்கள் தான் முக்கியம். தற்போது மனிதர்களை விட , மனிதனால் உருவாக்கப்பட்ட கணினியும் அதைச் சார்ந்துள்ள சாதனங்களும் மட்டுமே நம்மை நினைவுப்படுத்தும் நிலை இன்று. அவை நினைவுகளை சேமித்து வைக்கும் கருவூலங்கள் என்பது மறுக்க முடியாத உண்மை . 

ஆனால் தற்போது உள்ள நிலை... ஆதாரத்தை விட ஆதார் அட்டை தான் ( Aadhar card ) அவசியமாகிறது . மறைவுக்குப் பின் உயிரற்ற உடலை காண வருபவர்கள் கூட குறைந்து விட்டது. இது நிதர்சனமான உண்மை.

ஆகவே காலத்தின் மாற்றத்தை கருத்தில் கொண்டு , வாழ்க்கையின் யதார்த்தத்தை புரிந்து கொண்டு அதற்கேற்ப சிந்தித்து, செயலாற்றுவது நமது கடமை . 

பழனி குமார் 
 18.10.2021  

மேலும்

  எனது வாழ்க்கை !

-------------------------------
பருவத்திற்கேற்ப , வயதிற்கேற்ப ,வளர்ச்சிக்கேற்ப , தனது நிலைக்கேற்ப மனிதன் மாறுகிறான் தோற்றத்தில் ,அறிவில் , ஆற்றலில் , சூழலில், பொருளாதார நிலையில், வசதி வாய்ப்புகளில் ...! பிறக்கும் எவருக்கும், தான் வாழப்போகும் காலமும் அறியாது , முடிவும் தெரியாது . வருங்கால சூழ்நிலை தெரியாது . 

ஆனால், அவரவர் தனக்குள் ஒரு கொள்கையை மையமாக வைத்துஅதை பின்பற்றுவதும் , இலக்கு ஒன்றை தேர்வு செய்து அதனை நோக்கி ஓர் இலட்சியப் பாதையில் பயணிப்பது தான் வாழ்க்கை .அந்த நோக்கம் நிறைவேறியதா இல்லையா என்று தெரியாமல் தொடர்கின்ற நிலை தான் அனைவருக்கும் !!!!

வெற்றி பெற்றால் மகிழ்ச்சி அடைவது, இல்லையெனில் துவளாமல் ,தளராமல் தொடர்ந்து நடை போடுவது என்பது காலத்தின் கட்டாயம் . இறுதியில் முடிவது தான் வாழ்க்கை ! 

அந்தவிதத்தில் தான் எனது வாழ்க்கையும் !!!!

நடந்து முடிந்ததை அசைபோட்டுக் கொண்டு , நடக்க இருப்பதை கற்பனையில் வடிவமைத்து, காலத்தைத் தள்ளிக்கொண்டு இருப்பவன் நான் . எள்ளளவும் பாதை தவறாத கொள்கை, வெற்றி பெறாத லட்சியம் , முடிவு பெறாத நோக்கம் , நிலை மாறாத நெஞ்சம் , அடிக்கடிக் குன்றிவிடும் உடல்நலம், எதிர்பாராத உலகச் சூழல் , திருப்தி இல்லாத நாட்டு நடப்பு என நகர்கிறது .

உள்ளத்தில் உறங்குகிறது சில உண்மைகள் .
நெஞ்சில் படிந்துள்ளது நீறு பூத்த நெருப்பாக சில நோக்கங்கள் .
மனதில் உறைந்துள்ளது சில நிறைவேறா இலட்சியங்கள் .
இதயத்தில் மறைந்துள்ளது மரணித்த சில நிகழ்வுகள் .

நடப்பவை நடக்கட்டும் என்ற மன உறுதியுடன் தொடர்கிறேன் நான் முடிவின் முடிவை அறியாத ,ஒரு சாமானியனாக ,சராசரி மனிதனாக ,மண்ணில் ஒருவனாக , மொழியால், இனத்தால் ஒரு தமிழனாக ! உணர்வால் , பற்றால் இந்தியனாக !


பழனி குமார்
  10.10.2021 

(எனது ஒரு வயது படம் )

மேலும்

ஒருவன் என்னை கடந்து செல்கிறான். அவனைப் பற்றி நான் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில் அழைத்தேன். 

என்னப்பா உன்னை பார்த்தால் இந்த பகுதியில் புதியவராக தெரிகிறது. உனது விவரங்களை பற்றி கூற முடியுமா என்றேன். அவனும் புன்சிரிப்புடன அருகில் வந்து ,ஐயா என்னைப் பற்றி என்ன விவரங்கள் தேவை என்று எதிர் கேள்வி கேட்டான். உனது தனிப்பட்ட விவரங்கள் தான் தேவை என்றேன். ஐயா, உங்கள் மனம் என்ன நினைக்கிறது என்று தெரியவில்லை. ஆனாலும் நான் கூறுகிறேன் , கேளுங்கள் என்றான். 

எனது பெற்றோர் பற்றி விவரங்கள் தெரியாது. ஒரு அனாதை இல்லத்தில் வளர்ந்தேன். எனக்கு பெயர் நானே வைத்துக் கொண்டேன் எனது நண்பர் கூறியபடி. அங்குள்ள அனைவரும் அதற்கும் ஒப்புதல் தந்தனர். நான் சாதி மதம் அறியேன். தமிழ் மட்டும் பேசுவது எழுதுவது இளமைக் காலம் முதல் . எனக்கு தாய் மொழி நிச்சயம் அது என்று புரிகிறது. எனக்கு சொந்த பந்தம் என்று யாரும் இல்லை. 

எனக்கு கல்வி சம்பந்தமாக அனைத்து உதவிகளை 

திரு கிருஷ்ணன் என்பவரும், 

உடை மற்றும் விடுதியின் மாதாந்திர செலவுகள் 

திரு கிறிஸ்டோபர் என்பவர் கவனித்துக் கொள்கிறார் . 

மேலும் இதர செலவுக்கு 
திரு இப்ராகிம் என்பவர் அவ்வப்போது பல உதவிகளை செய்து தருகிறார்.

நான் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை. அதில் விருப்பம் இல்லை. இன்னும் ஓரிரு வாரங்களில் எனக்கு நல்ல வேலையை இந்த விடுதியின் காப்பாளர் ,
திரு கரண் சிங் அவர்கள் வாங்கிக் கொடுப்பதாக உறுதி அளித்துள்ளார் . 

உடனே முதல் நபர் மிக்க மகிழ்ச்சி என்றும் பாராட்டி வாழ்த்துகள் கூறினார். இறுதியாக அவனை அணைத்து கொண்டு, இன்னும் உனது பெயரைக் கூறவே இல்லையே என்று கேட்டவுடன், அவன் உடனடியாக எழுந்து நின்று 
எனது பெயர், 

பாரத் குமார் ( @ ) இந்தியன் என்று பெருமையுடன் கூறினான். நான் தமிழன் என்று கூறிக் கொள்வதில் மிகவும் பெருமிதம் அடைகிறேன் என்றான் .

இது நம் தாய் திருநாடு. உள்ளம் சிலிர்க்க அவனை கட்டி அணைத்தேன். 

இதில் ஒரே மொழி, ஒரே இனம், ஒரே ரேசன், ஓரே கட்சி, ஒரே ஆட்சி என்று கூறத் எவருக்கும் தோன்றாது. மக்கள் ஏற்கவும் மாட்டார்கள் என்பது என் கருத்து.

அனைவரும் அனைத்தையும் மறந்து "இந்தியன்" என்ற எண்ணத்தை நெஞ்சில் நிலை நிறுத்தி இறுதி வரை ஒன்றிணைந்து, ஒன்றிய அரசை வலுவான வல்லரசாக மாற்றி என்றும் மகிழ்ச்சியுடன் வாழ்வோம். 


 ( இதன் கருவும் நோக்கமும். உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். )


பழனி குமார் 
   17.09.2021  

மேலும்

  பொறுப்பும் கடமையும்

    --------------------------------------
புவியில் பிறந்த அனைவருக்கும் தன்னுடைய வாழ்வில் பொறுப்பும் கடமையும் உண்டு . ஒவ்வொருவரின் வயது நிலைக்கேற்ப இவை மாறுகின்றன .ஆனால் அனைவரும் அதனை சரிவர செய்கிறார்களா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது . முதலில் ஒன்றை அனைவரும் புரிந்துக் கொள்ள வேண்டும் . "#பொறுப்பு" என்பது வேறு , "#கடமை" என்பது வேறு . 

ஒவ்வொருவரும் தாம் முதுமை அடைவதற்கு முன்பு , அதாவது தம்மால் ஏதும் செய்ய இயலாத நிலையை எட்டும்வரை , தனது பொறுப்பினை உணர்ந்து , ஆற்ற வேண்டியக் காரியங்களை பொறுமையுடன் செய்திடல் வேண்டும் . அவ்வாறு செயல்பட்டால் மனதில் திருப்தியும் ஆனந்தமும் உண்டாகும் . இதனால் குடுமபத்தில் மகிழ்ச்சியும் நிலவும் . மற்றவர்களும் வியந்து நம்மை வாழ்த்துவர் . பொறுப்பினைத் தவிர்த்து , பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டால் உலகமே நம்மைத் தூற்றும் என்பது மட்டுமல்ல , குற்ற உணர்வு நம்மைத் தாக்கும் . ஆகவே நமது பொறுப்புகளை தட்டிக் கழிக்கவே கூடாது எந்தக் காரணத்திற்காகவும் . கடமை என்பது பெற்றவர்களுக்கும் , நம்மால் முடிந்த அளவு சமுதாயத்திற்கும் , ஆற்றுகின்ற செயல்பாடுகள் ஆகும் . அதை என்றும் தவிர்க்கவோ, விலகி செல்வதோ மாபெரும் குற்றமாகும் . 

பெற்றவர்க்கும் , பெரியோர்க்கும் ஆற்றுகின்ற கடமைகள் ஒருவிதத்தில் நமது நன்றிக்கடன் என்பதை உணர வேண்டும் . அப்போதுதான் நாம் பிறந்தற்கும் , மனிதன் என்ற இனத்திற்கும் ஒருவித அர்த்தம் உண்டு. அதேநேரத்தில் நாம் எதையும் எதிர்பார்க்காமல் செய்வதே உண்மையான கடமையாகும் . மனிதராக பிறந்த நாம் பொறுப்புடன் செயல்பட்டு , தமது கடமைகளை செவ்வனே ஆற்றிட வேண்டும் என்பதே எனது விழைவு , கோரிக்கை ! 

இளைய சமுதாயம் இதனை அறிவுரையாக அல்ல , அனுபவத்தில் விளைந்த ஆலோசனையாக கூறுவதும் எனது கடமை என்று நினைக்கிறேன் !


பழனி குமார்   

மேலும்





நோட்டா
−−−−−−−−
ஆறறிவு நாய்களுக்குப் போடும்
எலும்புத் துண்டு தான்
நோட்டா!
வாய் பேச விடாது
சங்கிலியில் கட்டப்பட்ட
மனிதனின் வாய்மூடும்
நோட்டா!
குவாட்டரும் பிரியாணியும்
வாங்கர் தரும்
நோட்டா!
கூட்டத்திற்குக் கூட்டம் 
ஏற்றிச் செல்லும் 
விலங்குக்குத் தருமந்த
நோட்டா!
விடியாத இருட்டு
நேரத்தில் − பேயாய்
அலைந்து கட்டுக்கட்டாய்
மஞ்சள் பையில் திணித்து
விநியோகிக்கும்
நோட்டா!
ஐந்து வருட குத்தகைக்கு
கையூட்டுக் கொடுக்கும்
நோட்டா!
அஞ்ஞான மனிதரை
அரற்றி மிரட்டிப்
புடுங்கும் − அந்த
நோட்டா!
கமிசன் தொகை கேட்டு
கரண்ட் போல ஷாக்கடிக்கும்
கத்தை கத்தை
நோட்டா!
தோண்டாத கிணறுக்கு
வேண்டாத வேலியிட்டு
காணாமல் போன கணக்கு
அதிலுனக்கு வந்த
நோட்டா!
முடியாட்சி மன்னரெல்லாம்
பிடி சாம்பல் ஆனபின்பும்
குடியாட்சி முடியானதோ!
அதற்கும் மாறும்
நோட்டா!
அள்ளிக் கொடுத்த
அரசன் போயி − இன்று
கிள்ளிக் கொடுத்த ஆட்சியும் போயி
இரும்புப் பெட்டியில்
கருப்பாய் அடைந்தது
நோட்டா!
ஆண்டவனையும் மயக்கி
அமெரிக்காவிற்கு அனுப்பி
அவர் தந்த பிச்சையில் வந்த
நோட்டா!
காட்டை அழித்து
கள்ளத்தன விற்பனையில்
பழம் போயி , புதிதாக வந்த
நோட்டா!
நீங்க வாங்கின
கடனுக்கு − எங்க 
தலைமேலேயும் கடன்
நோட்டா!
5 ரூபாய் டாக்டர் எங்கே?
வசனம் பேசியபின், ஊதியம்
கோடி கோடி 
நோட்டா!
மனமாற்றமும் 
மதமாற்றமும்
கடலலையாய் திரளும்
நோட்டா!
காசு வாங்கி
ஓட்டுப் போடும்
மண்டுக்குத் தெரியாது?
ஓட்டின் மதிப்பு;
தெரிந்ததெல்லாம், எனக்கு
இந்த கவரிலுள்ள
நோட்டா!
குனிந்து கிடந்தவன்
நிமிர்ந்து நடந்தான்
கீழே கிடந்தது
நோட்டா!
ஊழல் ஊழலெனக்
கத்துவோம் − இடையில்
உருவுவோம் அதுவும் பச்சையான
நோட்டா!
பாசமெல்லாம் ஓடி வரும்
பந்தமெல்லாம் தேடி வரும்
ஆட்டம் முடிந்தால்
ஓட்டங் காணும் பாசமெல்லாம்
இனி வரும் − எங்களுக்குப்
பை நிறைய 
நோட்டா!........
        −−−− ப.வீரக்குமார், திருச்சுழி

மேலும்

Mamasu.... 

Manam sollum marrathai.. 
Mannagam sollum valvinthisaiyai..
Megam pol thisai marum-nam
Valkkai aanal pirivathillai 
Vanathai viddu megam...
Nalla ennam manathil vendum....

மேலும்

Plastic-நெகிழி

கார்பன் பிணைப்பில் கருவில் பிறந்த கல்நெஞ்சம் உருவில் கொண்டவனோ!
கனல் சிறிது கண்டால் தன்னை உருக்கிடும் பாலிதீன் தான் இவன் பெயரோ!
தோன்றின் புகழோடு தோன்றியவனும் அல்ல,
இகழ்வதை கண்டு இணங்கியவனும் அல்ல!
கைப்பையாய் கையும் கொடுப்பான் நண்பனும் அல்ல!
மாண்பாய் மண்ணை மாசுபடுத்துவான் எதிரியும் அல்ல!
வேண்டாம் என நினைத்தாலும் வேறொரு உருவம் கொண்டிடுவான் !
எரிக்க எரிக்க எழுந்து வரும் பீனிக்ஸ் பறவையின் வகை ஆவான்!
நன்றும் தீதும் கண்டாலும் கலங்கா நெஞ்சன் நெகிழி தான்!
இடத்திற்கு ஏற்றவாறு மாறிடுவான் , ஆனால் வண்ணம், உருவம் கிடையாது!
மறுசுழற்சி எனும் சொல் இவன் அகராதியில் கிடையாது!
தடையேதும் வந்தாலும் அழிவில்லா ஆற்றலாய் உருவெடுத்தான்!
மக்களின் உயிரைப் பகடையாடும் சகுனியைப் போலே அவதரித்தான்!
அழிக்கவும் முடியாது, ஒழிக்கவும் முடியாது !
இவன் முடிவு முடிவிலி தான்!

மேலும்

மேலும்...

மேலே