எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சிற்பியின் உளிக்கு 

                உதவாத கல் எப்படி 
சிலையாக பரிணமிக்காதோ
               சிந்தனைக்கு  எழாத 
எண்ணங்கள் எவ்வாறு  
               சிறந்த படைப்பாகாதோ   
 ஆசிரியருக்குப் பணியாத 
                 எந்த மாணவனும் 
    சமுதாயத்தில்  பதராகவே 
                   கருதப்படுவான் 
               

மேலும்

அச்சமில்லை அச்சமில்லை என்று உரக்க பாடிய 5ஆம் வகுப்பு மாணவனின்

 மனதுக்குள் வந்து போனது...!

 தன் ஆசிரியரின் பிரம்பு...!

 மனப்பாடம் செய்து கொண்டான் மீண்டும் இருமுறை

மேலும்

ஹி ஹி ஹி ........சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்று நாம் குழந்தைப் பருவத்திலேயே இருந்திருக்கிறோம் என்று எளிமையாக சுட்டிக்காட்டியிருக்கிரீர். நன்றாக இருக்கிறது 07-Feb-2019 4:19 pm

மாணவர் கடமை

மாணவர் சமுதாயம் உலகில் சிறந்த சமுதாயமாக உருவாக வேண்டும். மாணவர் பருவத்திலிருந்தே எதிர்கால சமுதாயம் உருவாகின்றது. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பன மாணவருக்கு அவசியம். மாணவர் தம் கடமையையும் நல்லொழுக்கத்தையும் நன்கு கடைப்பிடிப்பாராகில் அவர்களை அன்னப்பறவைக்கு ஒப்பிடுவர். அன்னப்பறவையானது பாலில் கலந்துள்ள நீரையொதுக்கி பாலைப் பருக வல்லது என புராணக் கதைகளில் கூறப்படுகிறது. இதுபோன்று நல்ல மாணவர்கள் தீயதை ஒதுக்கி நல்லதைச் செய்ய வேண்டும். நல்லொழுக்கத்தைப் பேணிப்பாதுகாப்பது மாணவர்களது தலையாய கடமையாகும்.

முதலில் இறை நம்பிக்கையாகும். அதனையடுத்து எம்மைப் பெற்றெடுத்து பாலூட்டி, சீராட்டி எம்மை ஆளாக்கிய பெற்றோரை அடி பணிதல், பேணல் இவையும் மாணவர்களின் கடமையாகும். "தாயிற் சிறந்த கோயிலும் இல்லை, தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்ற பழமொழிக்கேற்ப தாய் தந்தையின் சொல் கேட்டு நடந்துகொள்ள வேண்டும். பெரியோர், முதியோர் யாராயினும் மரியாதை செய்தல் வேண்டும். இன்சொல் பேசி இனிமையுடன் பழகுவது மாணவர் கடமையாகும். பொய், களவு இல்லாமல் உண்மை, நம்பிக்கையுடையவர்களாக இருத்தல் வேண்டும்.

அறிவு வளர்ச்சிக்கு உறுதுணையாக வழிகாட்டியாக இருக்கும் ஆசானிடம் பணிவுடன் நடந்துகொள்வதும் மாணவர்களின் கடமையாகும். மாணவர்கள் கடமைகளைப் பேணி பழக்கங்களைக் கடைப்பிடித்து நற்பிரஜைகளாக விளங்க வேண்டும்.

மேலும்

கல்வியின் தரம்

தமிழகம் உட்பட இந்திய கிராமங்களில் உள்ள இளைஞர்களில் 50% பேருக்கு சரியாக நேரம் கூட பார்த்து சொல்ல தெரிவதில்லை என்று ஆய்வில் அதிர்ச்சி முடிவுகள் வெளியாகியுள்ளது.

இந்திய கிராமத்தில் 14 - 18 வயதுள்ளவர்களில்..

* தாய் மொழி வாசிக்க தெரியாதவர்கள் 25 %
* இந்திய வரைபடமே தெரியாதவர்கள் 14 %
* நாட்டின் தலைநகர் தெரியாதவர்கள் 36 %
* மொபைல் போன் வைத்திருப்பவர்கள் 73 %

ப்ரதம் (Pratham) என்ற தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று, 2017ல் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் உள்ள 24 மாநிலங்களில், 28 மாவட்டங்களில் கல்வி தொடர்பான ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வு முடிவுகளை பர்தம் நேற்று வெளியிட்ட நிலையில், பல அதிர்ச்சிகர முடிவுகள் தெரியவந்துள்ளது.​ அதன்படி, 14-18 வயதுள்ளவர்களில் 25% பேருக்கு, தங்கள் அடிப்படை தாய் மொழியை வாசிக்க தெரியவில்லை என்றும், பாதி பேருக்கு வகுத்தல் கணக்கு புரிவதில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. 43% பேருக்கு மட்டுமே ஒரளவுக்கு தவறு இல்லாமல் செய்கிறார்கள்.

இதை விட அதிர்ச்சிகரமான தகவல் என்னவென்றால், தமிழகம் உட்பட இந்திய கிராமங்களில் உள்ளவர்களில் 50% பேருக்கு சரியாக நேரம் கூட பார்த்து சொல்ல தெரிவதில்லை. ஆனால், 73% பேர் செல்போன் பயனாளர்கள்.

மேலும்


மேலே