எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

அதிகமாக கருத்து பதிந்த எண்ணங்கள்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எழுத்து தள தோழர் தோழமைகள் அனைவருக்கும் வணக்கம்,

இங்கே பதிய போவதை பார்க்காமலே 
தயவு செய்து யாரும் தங்களுடைய பகிர்வை பகிர்ந்து விடவோ அல்லது கருத்து பதிந்து விடவோ வேண்டாம்..

மேலும் 
இங்கு சொல்லப் பட்டவை யாரையும் புன்படுத்துவன அல்ல
இது வெறும் கற்பனையே என்று சொல்லும் முட்டாளும் நான் அல்ல...

மேலும்
வெறும் மொய்யெழுதும் வாசகம் மட்டும் அல்ல இது...
அதையும் தாண்டி யோசிக்க வைக்கும் ஒரு எண்ணம் இது...

இப்போது நாம் யோசிக்க வேண்டிய நேரம் வந்து விட்டதாகவே கருதுகிறேன்...
இதை இந்த தளத்தார்கள் தவறாக புரிந்துக் கொள்ள மாட்டார்கள் என்றும் நன்புகிறேன்..

பொதுவாக இங்கு வருபவர்கள் யாருக்கும் வேலை இல்லாமல் 
வெட்டியாக சுத்திக் கொண்டிருப்பவர்கள் வருவது இல்லை என்று நினைக்கிறேன்..
(இதில் வேலை தேடி கொண்டிருப்பவர்களை மதிக்கிறேன்... அவர்களை நான் சொல்ல வில்லை என்று 
சொல்லி கொள்கிறேன்... அப்படியும் வருகிறவர்கள்... இன்னும் பாராட்டுக்கு உரியவர்கள்..)

இப்படி 
குடும்பத்தின் ஆசைகளை துறந்து
வேலை பளுவை மறந்து 
இங்கு வருபவர்கள்
வெறும் வேடிக்கை மட்டுமா பார்க்க வருவார்கள்? இங்கு...

மாறாக என் தாய் மொழியில் ஒரு தளம் இருக்கிறது
அங்கு சென்றால் என்னால் முடிந்த வரை 
என்னால் கற்று கொள்ள முடியும் 
என்னால் இயன்ற வரை கற்றுக் கொடுக்கவும் முடியும் 
என்ற உயரிய நோக்கத்தில் வருபவர்கள்தான் அதிகம்...

இன்னும் நான் உறுதியாக நம்பிக் கொண்டிருக்கிறேன்
இப்படி பட்ட மொழி சிந்தனை அல்லது
மொழி பற்று உள்ளவர்கள்தான் இந்த தளத்தை இயக்கி 
கொண்டிருக்கிறார்கள் அல்லது இயங்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள்  என்று
நம்புகிறேன்...

அப்படி வருபவர்களுக்கு இங்கு என்ன கிடைக்கிறது?

தமிழ் மேல் நாட்டம் இல்லாதவர்களுக்கு இந்த தளம் 
எப்படி வடிகாலாகும்?

அப்படி தமிழ் மேல் நாட்டம் இல்லாதவர்கள் இந்த தளத்தில்
புகுந்து வேறு திசை திருப்ப நினைத்தால் இதை
தளம் தாங்கி கொண்டாலும் இதில் படித்து ரசிக்கிறவர்வர்கள்
பொறுத்துக் கொள்வார்களா? என்பதே எனது கேள்வி?

இங்கு வருகிறவர்கள் யாரும் 
தவறான எண்ணத்தோடு வருவது கிடையாது....

வருபவர்கள் யாவரும் 
தமிழ் மேல் ஈடுபாடு கொண்டவர்கள்
அல்லது தமிழ் மேல் ஆர்வம் கொண்டவர்கள்...

அப்படி இருக்கும் போது 
ஒரு தனி நபர் தமிழை தரக்குறைவாக எழுதும் போது 
அல்லது பேசும் போது அந்த தமிழ் எதற்கு 
அல்லது இந்த தளம் எதற்கு?
என்று கேட்க தோன்றுமா இல்லையா?

இதில் இணைந்திருக்கும் பல பேருக்கும் தெரியும்
நாம் தமிழால் இணைந்திருக்கிறோம் என்று...

ஆனால் 
அந்த புனித தன்மை கெடுக்கும் வகையில்
ஒரு சிலர் நடத்தும் நாடகத்தில் எல்லோரும் நடிகர்கள் ஆகி விடுகின்றனர்...

இதில் கொடுமை என்ன வென்றால்
சில கதா நாயகர்களும் வில்லன்களாகி விடுங்கின்றனர்...

இங்கு வரும் எல்லாருமே தமிழை வளர்க்க வருகிறார்கள் 
என்று நினைத்திருந்தேன் ஆனால்
அதை தவிர்த்து எல்லாவற்றையும் வளர்க்க வருகிறார்கள் 
என்றால் இந்த இடம் அதற்கு பொருத்தமானதா?

இங்கு வரும் எல்லாருமே 
ஒரு விதத்தில் கலைஞர்கள்/இளைஞர்கள் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்...

ஆனால் சில பதிவுகளை பார்த்த பிறகு
நாங்கள் இதில் எந்த பகுதியிலும் சேராதவர்கள்...
எனக்கும் தமிழுக்கும் ரொம்ப தூரம் என்பதாக இருக்கிறார்கள்...

அப்படி யோசிக்கும் சில தோழர் தோழமைகள்
வேறு எங்காவது சென்று தங்கள் மனக் குறையை தீர்த்து கொள்ளலாமே...
ஏன் எங்களிடம் அல்லது இந்த தளத்திடம் வந்து இச்சையை தீர்த்துக் கொள்கிறீர்கள்...?

நாங்கள் வேறு திசை நோக்கி பயணம் போகிறோம்
அதுவும் உங்களிடம் சொல்லி விட்டுதான்...
ஆனால் 
அது தெரிந்து கூட 
எப்படி தமிழ் வளர்ந்து விடும் ?
அதை எப்படி வளர விடுவோம்?
 என்று போட்டிக் கொண்டு வந்தால் எப்படி?

எந்த விமர்சனம் என்றாலும் நேருக்கு நேராக வையுங்கள்..
உங்கள் பெயரையும் ஊரையும் 
யாருக்கு மகன் என்றும் 
தெளிவாக சொல்லுங்கள்...

இதில் மூடி மறைக்க என்ன இருக்கிறது...
எனது அப்பா பெயரை சொல்ல 
எனக்கு எந்த தயக்கமும் இல்லை...
எனது அம்மா மொழி (தாய் மொழி) தமிழ் என்று சொல்ல
எப்போதும் நான் தயங்கியது இல்லை...
என் முகத்தை காட்ட எப்போதும் மறுத்ததில்லை...

பிறகு எதற்கு இந்த பிதற்றல்கள்?

உங்கள் சுய விவரத்தை காட்ட துணிவில்லாவதவர்கள் கையில்
எப்படி எங்கள் வருங்காலத்தை சமர்பிக்க முடியும்?

தமிழ் பேசும் எல்லோரும் ஒரு விதத்தில்
அண்ணன் தம்பிகள்தானே...
அல்லது சகோதர சகோதரிகள்தானே...
இதில் என்ன வெக்கம் இருக்கிறது... பெயரை மாற்றி வைத்துக் கொள்ள?

ஒரு வேலை பெயரை மாற்றி வைத்துக் கொள்ளுங்கள்
அது தங்களுக்கு பிடித்த பெயராக இருக்கட்டும்...
அப்படி பெயரை மாற்றி வைத்து கொள்ளும்போது 
உங்களின் மொழியை மாற்றி வைத்துக் கொள்ள முடியுமா?

இங்கு 
யாரை திட்டுகிறீர்கள்?
யாரை குறை சொல்கிறீர்கள்?
யாரை விரட்டுகிறீர்கள்?
யாரை வெளி ஏற்றுகிறீர்கள் ?

ஒரு தமிழனுக்கே ஒரு தமிழன் இப்படி பட்ட செயல் செய்தால்
யார் தமிழனை காப்பாற்றுவார்கள்?
(இதில் எனது தாய் மொழி தமிழ் என்று பெருமையாக போட்டுக் கொள்வீர்கள்... 
அது வேற கதை )
ஆனால் வேறு எங்காவது இலங்கையிலோ அல்லது
வேறு எங்காவது தமிழருக்கு ஒரு பிரச்னை என்றால் 
எப்படி எல்லாரும் ஒன்று கூடுகிறீர்கள்? 
இது வெட்கமாக தோன்ற வில்லையா?

இங்கு வருபவர்கள் யாவரும் தங்களது 
எவ்வளவு சொந்த பந்தத்தை விட்டும்
தங்களது நேரத்தை செலவிட்டும் வருகிறார்கள்
என்று சொன்னால் புரியுமா உங்களக்கு?

அப்படி வந்து பார்க்கும் போது சில 
பதிவுகள் என் தாய் மொழியை களங்கப் படுத்தி எழுதி இருப்பதைக் கண்டு 
யாரால் பொறுமையாக இருக்க முடியும்?

ஒருவேளை அதையும் தாங்கி கொள்ளும் சக்தி
யாருக்காவது இருக்குமென்றால் அதை 
அவர்கள் தாயை தரக்குறைவாக பேசியவரையும்
மகான் என்று சொல்ல கூடும்....

தமிழ் மேல் உணர்வு கொள்ளாதவர்கள் 
இந்த தளத்திற்கு தகுதி இல்லாதவர்கள் என்று நினைக்கிறேன்...

அவர்களுக்கு பொழுது போக வில்லை என்றால்
ஏதாவது முகநூல் அல்லது அப்படி பட்ட சமூக வலைத்தளங்கள்
ஏராளமாக இருக்கிறது...

அதை விடுத்து 
இந்த தளத்தையும்(இங்கு மட்டுமல்ல) நம் தமிழையும் தயவு செய்து அசிங்க படுத்த வேண்டாம்...

எவ்வளவு பெரிய 
உலகம் போற்றும் மொழியை நாம் பேசுகிறோம் என அறியாதவர்கள்தான் தமிழர்கள் (நாம்) எனவும்...
தமிழை தமிழர்களாலே கெடுக்க படுவதாகவும் உலகம் நம்மை காரி துப்புகிறது...

இதற்கு எடுத்துகாட்டாக நாமும் இங்கு 
செயல் படுகிறோம் என்று நினைக்கும் போது 
மனம் வருத்தம்தான் அடைகிறது...

இதில் 
பெயர் மாற்றம் மட்டும்தான் ஒரு சுகம் என்றால்
எல்லோரையும் ஏமாற்றுவதுதான் ஒரு செயல் என்றால்..
எல்லோரையும் திட்டுவதுதான் ஒரு பழக்கம் என்றால்...
எல்லோரையும் கேவலப் படுத்துவதுதான் உங்கள் பொழுது போக்கு என்றால்...
எல்லோரையும் காயப் படுத்துவதுதான் உங்கள் எண்ணம் என்றால்...
அதற்கு தமிழை தயவு செய்து பயன் படுத்தாதீர்கள்...

அதற்கு வேறு தளம் இருக்கிறது
அதற்கு வேறு இடம் இருக்கிறது...

தளத்தார்க்கு ஒரு கேள்வி...

தளத்திற்கு உறுப்பினர்கள் ஆகாமல் 
கருத்து போட முடியாதல்லவா?
அப்படி ஒரு அருமையான முறை வைத்திருக்கும்போது
ஏன் உறுப்பினர் ஆகும்போது அவர்களின் ஆதாரத்தை (ID proof )
வாங்காமல் உள்ளே அனுமதிக்கிறீர்கள்...?

இப்போது இந்தியாவில் எதற்கு எடுத்தாலும் அதை கேட்கிறார்களே...

இப்படி பட்ட பிரச்சனையில் நாம் எத்தனை 
நல்ல எழுத்தாளர்களை இந்த தளம் இழந்து இருக்கிறது என்று
நான் சொல்ல தேவை இல்லை என்று நினைக்கிறேன்...

அது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான் எனவும் கருதுகிறேன்...
அப்படி சிறந்த எழுத்தாளர்களை இழந்து விட்டு 
நாம் என்ன செய்ய போகிறோம் நாம் தனித்து நின்று...

ஒரு சம்பவம் உங்களுக்காக...

நமது மகாத்மாவை அரை நிர்வாண பக்கிரி என்று சொன்ன
வின்சென்ட் சர்ச்சில் (அன்றய ஆங்கிலேய அரசன்/தலைவன்)
ஆனால் அவரை பற்றி புரிந்து கொண்ட பிறகு எப்படி எல்லாம் 
மன்னிப்பு கேட்டான் என்பது நமது வரலாறு...

ஒரு தேசத்துக்கு எத்தனையோ தலைவன் வரலாம்
ஆனால் தேசத்துக்கு ஒரே ஒரு பிதாதான் அது நமது தேசப் பிதா காந்தி..

இங்கே திட்டியவனை இந்த உலகம் போற்ற வில்லை 
மாறாக 
மன்னித்தவனை அல்லது பொறுத்துக் கொண்டவனை 
இந்த தேசமே/உலகமே போற்றியது ஒரு மகாத்மாவாக....

இதை எதற்காக சொல்கிறேன் என்றால்

எல்லா நேரத்திலும் 
நீங்கள் அடிக்கும் போது கன்னத்தை காட்டுகிறோம்...
மீண்டும் நீங்கள் அடிக்கும் போது மறு கன்னத்தையும் காட்டுகிறோம்
ஆனாலும் நீங்கள் அடிக்கும் போதெல்லாம் 
கன்னத்தை காட்டுவதற்காகவே எங்கள் கன்னம் 
படைக்கப் பட்டதாக மட்டும் எண்ணி கொள்ளாதீர்கள்

வாழ்க தமிழ்
வளர்க தமிழர்கள்...

நட்புடன்...
ஜின்னா.

மேலும்

வாழ்த்துக்கள் ஜின்னா நல்லெண்ண பதிப்பிற்கு வாழ்த்துக்கள் தமிழை தாய்த்தமிழை அழகிய சொற்றொடர்களால் அலங்கரிப்பவர்களே மதிப்பு மிக்கவர்கள் - அதை பழகிய வார்த்தைகளால் அலங்கோலப்படுத்துபவர்கள் தமிழை நேசிக்க இயலுமா என யோசிக்க தோணுகிறது 17-Jan-2019 10:06 pm
வாழ்க தமிழ் வளர்க தமிழர்கள்... அருமை, நம் தாய் மொழியாம் தமிழோடு, தமிழர்களும் வளர்க - மு.ரா. 05-Feb-2017 11:13 am
மன்னிக்கவும் வேறு பக்கத்தில் பதிவிட வேண்டியதை மாற்றி பதிவிட்டுவிட்டேன் : 09-Dec-2015 7:35 pm
நான் மிகவும் கர்வம் கொள்கிறேன் !!! இப்படிப்பட்ட உறவுகளுக்குள் நான் ஒருத்தியாய் இருக்கிறன் என்பதில் ! தம்பி திருமூர்த்தி நீ நிச்சயம் வெல்வாய் ஜின்னா தோழரை போன்றோர் உன்னுடனிருக்கையில் ! 09-Dec-2015 7:32 pm

இதுதான் சமத்துவம் !
~~~~~~~~~~~~~~~~~~~

சவுதி மக்களின் மற்றும்
உலக முஸ்லிம்களின்
அன்பிற்கு பாத்திரமான

மன்னர் அப்துல்லா
இறைவனடி சேர்ந்து
விட்டார்!

இவ்வளவு....
புகழ் வாய்ந்த
ஒரு தலைவர் இறந்துள்ளார்.

ஆனால்...

சவுதியில் அன்றாட
நடவடிக்கையில்
எந்த மாற்றமும் இல்லை.

நம் ஊரைப் போல்
கடைகள் அடைக்க
நிர்பந்திக்கப்படவில்லை.

சாலைகளில்...

வாகனங்கள் எந்த
பயமும் இன்றி
வழமைபோல் செல்கின்றன.


மொத்தத்தில்
இவரது இழப்பு....

சவுதியின்
அன்றாட வாழ்வில்
எந்த மாற்றத்தையும்
ஏற்படுத்தவில்லை.

எல்லோருக்கும்
எங்கு
இறப்புக்கான
தொழுகை நடைபெறுமோ

அந்த இடத்தில்
இவருக்கும்
த (...)

மேலும்

பழமொழி வேண்டாம் அண்ணா ! இபோ புது மொழி கேளுங்க அன்ன உடையான் எந்த அரசனுக்கும் அஞ்சான் ! 30-Jan-2015 11:21 pm
நல்லதை சொன்னாலும் நாட்டு மக்கள் ஒன்னா சேர்ந்து இருந்தாலும் பொறுக்காதே ...இந்த மாதிரி கூட்டத்துக்கு எதையாச்சும் விசமத்த விதைத்து கல்கத்த உண்டு பண்ணனும் இவுங்களுக்கு .. புரிந்துணர்வு மிக்க கருத்துக்கும் வரவுக்கும் நன்றி முகில் தம்பி உடையான் படைக்கு அஞ்சான் ! ஹஹ்ஹஹஹா 27-Jan-2015 1:08 pm
ஹஹாஹஹா சுயேட்சையா நின்னாலும் சும்மா சுத்தி சுத்தி அடிப்பாரு எதைனு கேட்கப்படாது...ஆமா (உங்க மைன்ட் வாய்ஸ் கேட்குது) எதிரியை தான் தம்பிக்கு தான் வெற்றிக் கோப்பை! 27-Jan-2015 12:53 pm
டீல் டீல் ஆனா எனக்குதான் முதல் ரவுண்டு 27-Jan-2015 12:46 pm

அன்பு உள்ளங்களுக்கு வணக்கம்...!


சில மாதங்களுக்கு முன் திரு. மணிகன் என்ற மென்பொருள் பொறியாளர் மற்றும் குறும்பட இயக்குநர் தளத்தில் எனது கவிதைகளை படித்து, எனக்கு அவரின் குறும்படம் ஒன்றில் கவிதை எழுதுவதற்கான வாய்ப்பு கொடுத்தார்.

கவிதையும் எழுதிகொடுத்துவிட்டேன். படப்பிடிப்பு முடிந்துவிட்டது.

அந்த படத்தின் பெயர் : உயிரெழுத்து.

கவிஞர், எழுத்தாளர், ரசிகர் என்று மூன்றுவிதமான கதாபாத்திரங்களுடன் உலக குறும்பட போட்டி ஒன்றுக்காக எடுக்கப்பட்டது.


அடுத்து..!

இப்போது.

பிரபல திரைப்பட நிறுவனத்திலிருந்து எனக்கொரு அழைப்பு வந்திருக்கிறது.

இந்த தளத்தில் நான் பதிவு செய்த கதை ஒன்ற (...)

மேலும்

சந்தொஷ்குமாரின் வரிகளை சந்தித்திருக்கிறேன்...புதிய சிந்தனை.. நிச்சயம் வெற்றி பெரும்... காற்றலையோடு என் காதுகளும் காத்துக்கிடக்கின்றன. பாடல்களுக்காக..வாழ்த்துக்க்கள்.. 25-Jul-2015 7:38 pm
மிக்க நன்றி கேத்ரீன். .... சந்தோஷம் 25-Sep-2014 9:28 am
ரொம்ப சந்தோஷம், மேலும் பல வெற்றிகள் வந்து சேரட்டும் 25-Sep-2014 9:25 am
நன்றி நன்றி சகி உன்னை போன்றவர்களின் அன்பான உற்சாக தூண்டுதலின் பலன் இது. 23-Sep-2014 6:51 pm

கஜல் கவிதைகள்
================

இப்போது தமிழில் அரிதாகி வரும் ஒரு படைப்பு இந்த கஜல் கவிதைகள் தான்... 
அதற்காக கூடிய விரைவில் ஒரு கஜல் கவிதை தொடர் இங்கே உலா வர போகிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்...

கஜல் ஓர் அறிமுகம்
===================
'கஜல்' அரபியில் அரும்பி, பாரசீகத்தில் போதாகி, உருதுவில் மலர்ந்து மணம் வீசும் அழகான இலக்கிய வடிவம்.
'கஜல்' என்றாலே காதலியுடன் பேசுதல் என்று பொருள்.
கஜல் பெரும்பாலும் காதலையே பாடும், அதுவும் காதலின் சோகத்தை.
'கஜல்' இரண்டடிக் கண்ணிகளால் ஆனது. ஒரு கண்ணிக்கும் அடுத்த கண்ணிக்கும் கருத்துத் தொடர்பு இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

கவிக்கோ அப்துல் ரகுமான், கஜல் எனும் கவிதை வடிவத்தை தமிழுக்கு அறிமுகப்படுத்திய முன்னோடிக் கவிஞர்களில் ஒருவர் அவருடன் இன்னும் பல கவிஞர்கள் எழுதினார்கள் அதில் முக்கியமாக மகாகவி ஈரோடு தமிழன்பன் ஐயா கஜல் என்ற தனி நூலே போட்டுள்ளார்கள். 

இன்னும் பல வெளி நாட்டு கவிஞர்களும் நிறைய இருக்கிறார்கள் அவர்கள் உருதுவில் எழுதிய கஜல் கவிதைகள் இன்றளவும் உலகப் புகழ் பெற்றவை அதில் குறிப்பிடும் படியாக மிர்சாகாலிப், கலீல் ஜிப்ரான், இக்பால், சாதாத் ஹசன், ஜாவேத் அக்தர் மற்றும் அபுல் கலாம் ஆசாத். அதிலும் கஜல் என்றாலே அதில் 'மிர்சாகாலிப்'பின் வாசம் வீசும்.' என்கிற அளவுக்கு அதில் அவர் சிறந்த கவிஞர். 

அவரின் கஜல் ஒன்று...

காதல் என்பது
நம் வசத்தில் இல்லை

அது ஒரு
வினோதமான நெருப்பு!

பற்றவைத்தால் பற்றாது
அணைத்தால் அணையாது!

- மிர்சாகாலிப்

அப்துல் ரகுமானின் கஜல் துளிகள் சில...

நாம்
நிர்வாணமாக இருந்தோம்
ஆடையாகக் கிடைத்தது
காதல்
*******
என் உயிரைக்
காதலில்
ஒளித்து வைத்துவிட்டேன்
மரணமே!
இனி என்ன செய்வாய்?
*********
உன் முகவரி
தேடி அலைந்தேன்
கிடைத்துவிட்டது
இப்போது
என் முகவரி
தேடிஅலைகிறேன்.
*******
மரணம்
உன்னைவிட நல்லது
வாக்களித்தும்
நீ வரவில்லை
வாக்களிக்காதிருந்தும்
அது வந்துவிட்டது

************
என் கனவு
உன்முன் ஏந்திய
பிச்சை பாத்திரம்
*******
உன் கண்களால்தான்
நான் முதன் முதலாக
என்னப் பார்த்தேன்.
- அப்துல் ரகுமான்.


அடுத்த எண்ணத்தில் என்னோடு சேர்ந்து எழுத போகும் நமது தள தோழர் தோழமைகளின் பெயர் பட்டியலோடு 
வருகிறேன்...

நட்புடன்,
ஜின்னா.

மேலும்

நன்றி...வாழ்க வளர்க... 16-Dec-2015 11:40 am
மிக்க நன்றி தோழரே... தங்களுக்கான இடம் ஏற்கனவே ஒதுக்கப் பட்டு விட்டது... அடுத்த எண்ணத்தில் பதிகிறேன்... வாழ்த்துக்கள்... வளர்வோம் வளர்ப்போம்... 16-Dec-2015 11:32 am
அறிமுகம் செய்துவைத்து அழைத்துச் செல்லும் தங்கள் தொண்டு போற்றத்தக்கது.... அழகு.... வாழ்க வளமுடன் 16-Dec-2015 11:27 am
மிக்க நன்றி தோழரே... வாழ்த்துக்கள்... வளர்வோம் வளர்ப்போம்... 13-Dec-2015 6:04 pm

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் .

நான் கவிதை எழுத ஆரம்பித்து , பல படைப்புகளை வடித்திட்டப் பின்னும் , ஓரிரு விருதுகள் பெற்றிருந்தாலும் ,
எனக்கு ஒரு முழு கவிஞனாக மாற்றிய பெருமை எழுத்து தளத்தையே சாரும் . எனக்கு ஒரு அங்கீகாரம் அளித்து , ஊக்கப்படுத்தி , என்னுடைய சமுதாய வேட்கைகளை பலவிதத்தில் வெளிப்படுத்திட ஓர் அரிய வாய்ப்பை அளித்திட்ட நம் தளத்தை என்றும் மறக்க முடியாது. மறுக்கவும் முடியாது . பல அருமை கவி நட்புகளை உருவாகிட முக்கிய காரணம் எழுத்து தளம் என்பதை மிகவும் மகிச்ச்சியோடு பெருமையோடு குறிப்பிட விரும்புகிறேன் . தளத்தில் பல கவிஞர்கள் எனக்கு கருத்து மூலமும் வாழ்த்துக்கள் மூலமும் வளர்த்திட்டனர (...)

மேலும்

மிக்க நன்றி குமரேசன் . தற்போது சற்று பரவாயில்லை . வரும் அக்டோபர் 18ம் நாள் சந்திப்போம் . 26-Sep-2015 2:57 pm
உங்கள் பரந்த உள்ளத்திற்கும் ஆழமான அன்பிற்கும் எந்த நன்றி ராஜேந்திரன் . கவிகள் படைக்க படிப்பு கட்டாயம் அல்ல என்பதை கடந்த காலத்தில் பல கவிஞர்கள் வாழ்ந்து இருக்கிறார்கள் ..இன்னும் பலர் வாழ்ந்தும் வருகிறார்கள் . கவலையை விடுங்கள் ...புது வேகத்துடன் , புதிய கவிதைகள் மேலும்படைத்திட வாழ்த்துக்கள் . விருதைவிட உங்களைப் போன்றவர்களின் உள்ளன்பும் உணர்வு பூர்வ வாழ்த்தும் என் மனதை நிறைக்கும் மிக்க நன்றி சார். 26-Sep-2015 2:56 pm
மிக்க நன்றி பிரியா தங்கள் அன்பிற்கும் வாழ்த்திற்கும் 26-Sep-2015 2:51 pm
வாழ்த்துக்கள் அய்யா, இன்னும் வாழ்வின் மிக உயரத்தை அடைய இறைவன் அருள் புரியட்டும், வாழ்க வளமுடன். 24-Sep-2015 9:47 am

எழுத்து தளத்தில் எனது பயணம்  3 வருடம்  பூர்த்தி 

#######################################################

எனது முதலாவது கவிபயணம் 7 Dec 2012 5:31 pm அன்று எழுத்து தளத்தில் ஆரம்பமாகி இன்றுடன் 3 வருடங்கள் பூர்தியாகியுளேன் 

7 Dec 20125:31 pmகண்ணீரில் 
கே இனியவன்
இதுதான் எனது முதல் கவிதை 
...................................................

எழுத்தில் எனது மொத்த பதிவுகள் 

#### கவிதை 6879 சொந்த கவிதைகளே பதிந்துள்ளேன் 
####### #### கதை 1397 பாட்டி சொன்ன கதை 46 கட்டுரை -1263  நகைச்சுவை 2760 பிறர் பதிவுகளே முழுமையாக மீள் பதிவு செய்துள்ளேன் .ஒரு சில சொந்த பதிவும் இடம்பெற்றுள்ளன ##################### 

எண்ணம் ##### கேள்வி பதில் ########### போன்றவையும் ஒருசில இடம்பெற்றுள்ளன --------------

எழுத்தில் எனது சாதனைகள் 
###############################

மொத்த பார்வை 253271 இதனை ஒரு சாதனையாகவே கருதுகிறேன் .3 வருடத்துக்குள் இந்த இலக்கை அடைவது என்பது சாதாரண விடயம் இல்லை 

மொத்த தேர்வு 25775 இது இன்னுமொரு சாதனை  இது எப்படி நடந்தது என்பது ஒரு புதிராக உள்ளது. கடின உ ழைப்புக்கு  கிடைத்த மகா வெற்றி . -------

இங்கு 3 நபருக்கு நான் நன்றி சொல்லியே ஆக வேண்டும் 

#######################################

1) HARI HARA NARAYANAN.V 
-----------------------------------------

எனது முதலாவதும் இறுதியுமான முன் மாதிரியாளர் 2012 ஆண்டு முதல் பதிவை பதிந்த காலத்தில் அவரின் மொத்த பார்வை 150000 மேல் இவைரை எப்படி அடைவது என்று தினமும் ஜொசிப்பேன் .இன்று 250000 பார்வையை பெற்றாலும் அத்தனை பெருமையும் சகோதரனையே சேரும் 

2)AUDITOR SELVAMANI 
---------------------------------

அண்மை காலத்தில் என்னோடு போட்டி போட்டு பதிந்து கொண்டிருபப்வர் .என்னை தொடுவதே தனது குறிக்கோள் என்று தனிப்பட்ட மடலில் சொல்லி . என்னை அடைவதற்கு என்ன செய்யணும் என்று ஆலோசனையும் கேட்டார் . நான் சொனனது நிறைய பதிவுகள் போடுங்கள் .அதில் கவிதையாக இருந்தால் பார்வை கூடும் என்றேன் . கவிதைகள் சொந்த கவிதையாக இருந்தால் பார்வை கூடும் என்றென் . அதையே அவர் பின்பற்றுகிறார் போலும் 200000 மொத்த பார்வையை மிக மிக குறுகிய காலத்தில் அடைந்து சாதனை படைத்துள்ளார் 

3)Mohamed Sarfan 
-----------------------
அண்மை காலத்தில் எனது கவிதைக்ள் அனைத்துக்கும் பின்னூட்டல் செய்யும் ஆர்வலர் . நல்ல ரசிகன் அவரையும் இவிடத்தில் பாராட்டியே ஆகணும் 


அண்ணன்  ஜின்னா அண்ணன் பழனி குமார் மற்றும் மூத்த எழுத்தாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன் 

எழுத்தில் உள்ள பலம் அதிகம்  என்றாலும் எழுத்தில் எனக்கு புரியாத விடயங்களும் உண்டு 
###################################################################################################
1) இதை இயக்குபவர்கள் ஒருவரா....? பலரா ....? யாருடன் தொடர்புகொள்வது ...? பல sms போட்டேன் பதில் வரவில்லை ;குறிப்பாக எனது ப்ரோபிலே பெயரை கவிப்புயல் இனியவன் என்று மாற்றி தருமாறு பலமாதங்களுக்கு முன் கேட்டேன் பதில் வரவில்லை . மாற்றப்படவும் இல்லை .


2) பரிசு பெற்ற கவிதைக்குள் எனது கவிதை தெரிவாகவில்லை . இதற்கு நான் பிற பதிவுகள் பதிவதும் காரணமா ..? கட்டுரை கதை நகைசுவை (பிறர் பதிவுகள் ) அல்லது அதிக வாக்கு பெறாமையா ...?வாக்குக்கு பலருடன் வாக்கு கேட்க வேண்டும் .அதை நான் செய்ய முடியாது .எனது பணிசுமை தனிநபருடன் தொடர்பு கொள்ள இடமளிபப்தில்லை . 


3) என்றாலும் இதுவரை எனக்கு ஊக்கம் தந்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி .எனது வேலை பழுவும் .வயதும் முன்னர்போல் பதிவுகளை மேற்கொள்ள இடமளிக்குமா ..? என்பது கேள்விக்குறியாக உள்ளது .
வாராந்தம் 500 கிலோ மீற்றர் பயணம் செய்கிறேன் .( போய் திரும்பி வர 1000 கிலோ மீற்றர் ) இதுவரை பேருந்தில் இருந்து கூட கவிதைகள் போட்டிருக்கிறேன் . நள்ளிரவு 1மணி 2 மணி க்கு எல்லாம் கவிதை எழுதி மறுநாள் வீடு வந்து கணனியில் பதிவேன் . இவ்வாறு கடினபட்டே இந்த சாதனையை அடைந்தேன் 

புதிய எழுத்தாளர்கள் அனைவருக்கும் ஒரு கருத்து .நிறைய எழுதுங்கள் அப்போதுதான் எண்ணம் தூண்டபப்ட்டு புதிய படைப்புகள் தோன்றும் .

திருக்குறளை கவிதையாக்கி பதிந்தேன் .(இன்பத்துப்பால் ) இன்று அதற்கு பெரிய முக்கிய துவத்தை வாசகர் தரவில்லை என்றாலும் ஒரு காலத்தில் அது திரும்பி பார்க்கப்படும் 

நன்றி 
வாழ்க வளமுடன் 
கவி நாட்டியரசர் 
கவிப்புயல் இனியவன் 

மேலும்

தங்கள் எழுத்துப்பணி தொடரட்டும்.. 21-May-2021 1:39 am
Nanri nanri 02-Apr-2016 6:48 pm
கவிக்குயில் ....கவிப்புயல் நன்றி நன்றி தங்கள் கருத்துக்கு நன்றி 25-Jan-2016 3:05 pm
மிக்க நன்றி நன்றி 25-Jan-2016 3:04 pm

இன்றைய எங்கள் ஊர் ( ஹைதராபாத் ) முதன்மை பத்திரிக்கையில் முதல் பக்கத்தில் ...
யாரு ? இவன் தந்தை என்னோற்றான் ..
என மகிழ்ச்சி தந்திருக்கிறான்.
என் மகன் வசந்தன்.

89% in X - ICSE

ICSE syllabus எவ்வளவு கடினமானது என இங்கு பலர் அறிந்திருக்கக் கூடும்.

மேலும்

மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது தோழரே... தம்பி வசந்திற்கு எனது வாழ்த்துக்களை கூறுங்கள். வாழ்த்துக்களுடன் நிலாசூரியன். 21-May-2015 1:42 pm
exposure கொடுப்பது மட்டுமே முக்கிய கடமையாய் வைத்து இருக்கிறோம் இருவரும் ...முடிந்தவரை கொடுக்கிறோம் .வளர்ச்சி , அதில் இருந்து நல்லதை எடுத்தல் , தீயதை அறிதல் , ஒதுக்குதல் எல்லாம் அவர்கள் பாடு ...இன்றைய பிள்ளைகள் / மாணவர்கள் சில விஷயங்களில் மிக சிறப்பாக இருக்கிறார்கள் .அந்த சில விஷயங்களை ஊக்குவித்து நிறைய சாதிக்க வைக்கலாம் ..நிறைவாய் வாழ வைக்கலாம் . 20-May-2015 8:23 pm
மிக்க நன்றி மகா 20-May-2015 8:10 pm
வாவ் .......... 20-May-2015 8:04 pm

நண்பர் கருணாநிதி அவர்கள் மிக குறைந்த கால அளவில் ஆயிரம் கவிதைகளை தாண்டி படைப்புக்கள் கொடுத்து வருகிறார். வாழ்வியல் கவிதைகள் மட்டுமல்ல..ஐம்பது வயதை தாண்டிய அந்த இளைஞர் படைத்த காதல் கவிதைகளும் பல. தனக்கே உரித்தான மொழிபெயர்ப்புத் திறன் கொண்டு நமது தளத்தில் சிறந்த மொழிபெயர்ப்பு படைப்பாளி என்கிற நிலையில் மகாகவி ஈரோடு தமிழன்பன் விருதும் பெற இருப்பவர். ஒரு முதிர்ந்த படைப்பாளி மட்டுமல்ல. நல்ல மனிதரும் கூட.அவரது எழுத்துப் பணிகள் தொடர எழுத்து நண்பர்கள் சார்பாக அவரை வாழ்த்துகிறேன்.

மேலும்

//"கவியருவி" கருணா// jinna அவர்கள் சொன்னது மிகமிகப் பொருத்தம் !! அய்யாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் !! வெற்றிப் பயணம் தொடரட்டும் !! 10-Aug-2015 12:27 pm
மிக சிறந்த படைப்பாளிக்கு (சகோதரர் கருணாநிதி) முதலில் எனது வாழ்த்துக்கள்... எவ்வளவு எழுதுகிறோம் என்பது பெரிதல்ல அதை எப்படி எழுதுகிறோம் என்பதில்தான் ஒரு எழுத்தாளரின் வெற்றி இருக்கிறது ஆனாலும் இவ்வளவு எழுதியும் அத்தனையிலும் தாங்கள் வெற்றியே பெற்றிருக்கிறீர்கள் என்று நினைக்கும் போது வியப்பு வருகிறது... ஒரு கவிதைக்கு பாடு பொருள் தேடி அதை எழுதுவதற்குள் எவ்வளவு பாடு பட வேண்டி இருக்கிறது ஆனாலும் இவருக்கு எப்படி இவ்வளவு எளிதில் வந்து விடுகிறது என்று பல நாள் தங்களை பற்றி யோசித்ததுண்டு... கவிதை அப்படியே அருவி மாதிரி கொட்டுகிறதே... தங்களை "கவியருவி" கருணா என்றே அழைக்கலாம்... இதை எண்ணம் போட்டு பகிர்ந்த தோழர் ராஜன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி... 09-Aug-2015 3:56 pm
ஹ்ம்ம்...என்று இனிப்போடு சொல்லி ஊக்குவித்தே என்னை நிறைய எழுத வைத்தவர் அல்லவா நீங்கள் உதயா..இப்போது இவ்வளவு அன்பினை ஒரு கவிதையாகவே படைத்து இந்த எளியவனுக்கு முழு சாப்பாடே அளித்துள்ளீர்கள்..உங்கள் அன்புக்கு தலை வணகுகிறேன்..என் அன்பும் வாழ்த்துக்களும் என்றும் உங்களுக்கு ..! நீங்கள் வாழ்வில் எல்லா வளங்களும் பெற விழைகிறேன் ..! 07-Aug-2015 8:58 am
இளம் வயதிலேயே நீங்களும் உங்கள் போன்று இன்னும் சிலரும் உயர்ந்த சிந்தனைகளோடும், நிறைந்த கவித்துவத்தோடும் , நல்ல மனதோடும், திகழ்வதை பார்க்கும் போதும் படிக்கும் போதும் ஒவ்வொரு நிமிடமும் மகிழ்ச்சியும் பேருவகையும் அடைகிறேன்..நீங்கள் எல்லாம் நல்லா இருக்க வாழ்த்துகிறேன்..கனா! உங்கள் வாழ்த்தினை மனம் நிறைந்த அன்போடு பெற்றுக் கொள்கிறேன்! 07-Aug-2015 8:54 am

உலக கவிதை தினம்....

உலகத்தின் யோசனை
இன்று உன்னைப் பற்றியதாக
இருக்கும்...

எனது நமுத்த சமிஞ்சைகள்
தெளிவாகவே
அறிவுறுத்துகின்றன....

யாரேனும் ஒருவனுக்கோ ...
அல்லது.. யாவரிலும் ஒருவனுக்கோ
நீ
அட்சயப் பாத்திரமாகி இருக்கலாம்..

காதலுக்காய்
நீ இரண்டோ... நான்கோ வரிகளில்
புன்னகைத்திருக்கலாம்...

காட்சிக் குவியங்களின்
இடிபாடுகளில் நீ..
மூச்சுத் திணறிக் கொண்டும் இருக்கலாம்..

மரபுப் பிழைகளாகவும்
நவீனத் திருத்தங்களாகவும்
உன்னை வெளியீடு செய்திருப்பர்...

பிரெஞ்சு யுவதிகளின்
சிகையலங்காரம்... பிறிதோர் மொழிகளின்
நறுமணப் பரவலென...

சுகந்தங்கள் கக்கிக் கொண்டும்
இரு (...)

மேலும்

கவிதைகளின் கவிதை ...... இதை எழுதியதால் சரவணா , கவிஞர்களின் கவிஞன் ! 22-Mar-2015 12:44 am
யாரேனும் ஒருவனுக்கோ யாவரிலும் ஒருவனுக்கோ//-- ஒரு மணிநேரம் முக்கா சைக்கிளை வாடகைக்கு எடுத்து கீழே விழாமல் ஒரு தெருமுனை வரை முதல் முதறையாய் மெதுவாக பெடல் போட்ட சுகம். 21-Mar-2015 10:04 pm
ஏனய்யா இப்படி செய்தீர்..?? இன்னும் மீளவில்லை.. எழுதியவருக்கே சில நேரம் பல முறை தனது படைப்பை வாசிக்கயில் அப்படி ஒன்றம் பிரமாதமாக எழுதிடவில்லையே என்று தோனலாம்.. ஆனால் அது வாசிப்பவனை என்னவெல்லாம் செய்யும் என படைத்தவனே சில சமயம் அறியான்.. ச்சை என்ன இது காதல் போல் தொந்தரவு செய்கிறது.. மனதில் நன்றாக பதிந்துவிட்டால் மறுபடி வாசிக்கயில் சுகம் காணேனோ என படித்தவுடன் மறந்தும் தொலைக்கிறது மூளை.. போய்யா.. ஒருவேளை நம்மள பைத்தியம் நினச்சிருவாாரோ னு தோனுனாலும்.. அட நினச்சா நினச்சிட்டு போட்டும்னு திரும்ப திரும்ப சொல்லுதேன் இங்க வந்து.. 21-Mar-2015 9:57 pm
தங்கள் வாழ்த்திற்கு மிக்க மகிழ்ச்சியும் ,நன்றியும் ஐய்யா ...... எங்களின் வழிகாட்டி அய்யாவிற்கும் கவிதை தின வாழ்த்துக்கள்......... 21-Mar-2015 7:03 pm

ஹைக்கூ தொடர்

=================

எழுத்து தள தோழர் தோழமைகள் அனைவருக்கும் வணக்கம்... 
வரும் சனிக்கிழமை (06-FEB-2016) அன்று உதயமாக போகிறது...

இந்த தொடரில் எழுத விரும்புவோர்கள் தங்கள் முழு பெயர் மற்றும் அலைபேசி எண் உடன் தங்களது உறுதி மொழியை  எனது மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்... கடந்த தொடரை போலவே ஒவ்வொரு எழுத்தாளருக்கும் ஒரு தேதியும் வரிசை எண்ணும் அளிக்கப் படும்...
இந்த தொடரில் எழுதுவதற்கு முன் ஹைக்கூ என்றால் என்ன வகை கவிதை என்பதை இப்போது பார்க்கலாம்...

ஹைக்கூ - சொல் விளக்கம்:
*******************************

‘ஹை’ என்பதற்கு ஜப்பானிய அடிச் சொல்லுக்கு அணுத்தூசி, கரு, முழுமையான கரு என்ற பொருள் உண்டு. ‘கூ’என்பது சொற்றொடர், வெளிப்பாடு, வாக்கியம், பகுதி, ஒரு வரி, ஓர் அடி, ஒரு செய்யுள், ஒரு கவிதை என்றும் பொருள் தருகிறது ஜப்பானிய அகராதி. 

இவற்றை இணைத்துப் பார்க்கையில் ஹைக்கூ என்பது கரு போன்றும், உயிரணு போன்றும் உருவானதொரு கவிதை என்னும் முழுப்பொருளைத் தரும். மேலும் வளர்ச்சிக்கும் விரிவுக்கும், ஒரு கருவுக்கு உள்ளிருக்கும் இன்னொரு கவிதைக் கருவைக் காண்பதற்கும் ஹைக்கூ என்ற சொல் சிறப்பாக அமைந்திருப்பதைக் காணலாம்.

ஆரம்ப காலத்தில் ஹைக்கூ கவிதை ஹொக்கூ என்றே அழைக்கப்பட்டது. பிறகு ஹைகை என்று திரிந்து ஹைக்கூ என்றாயிற்று. ‘Haiku’ என்ற சொல்லுக்கு இணையாகத் தமிழில் ஹைகூ, ஹைக்கூ, ஹைய்கு, ஹொக்கு, அய்க்கூ, ஐக்கூ என்ற சொல்லாட்சிகளும், அதன் வடிவத்தைச் சுட்டும் வண்ணம் துளிப்பா, குறும்பா, சிந்தர், கரந்தடி, விடுநிலைப்பா, மின்பா, அகத்தியக் கவிதை, கடுகுக் கவிதை, குட்டைக் கவிதை, குறுங்கவிதை, நறுக் கவிதை, மத்தாப்பூக் கவிதை, மின்மினிக் கவிதை, வாமனக் கவிதை முதலான பெயர்களாலும் அடையாளப்படுத்தப்படுகிறது. இன்று ஹைக்கூ என்ற சொல்லாட்சியே தமிழ் இலக்கிய உலகில் இடம்பெற்றுள்ளது.

ஹைக்கூ வாசிப்பு முறை: 
*****************************

ஹைக்கூவை முறையாக எப்படி வாசிக்க வேண்டும் என்ற புரிதல் ஹைக்கூ எழுதுபவர்களுக்குக் கூட தெரியாமல் இருப்பது வினோதமானது. 3 அடிகள் கொண்ட ஹைக்கூவை முதல் இரண்டு அடிகளை தொடர்ந்து படித்து நிறுத்த வேண்டும் (மூன்றாவது அடியைப் படிக்கக் கூடாது). மூன்றாவது அடி என்ன சொல்லவரும் என்று சிந்தனையில் மூழ்க வேண்டும்... மீண்டும் முதல் இரண்டு அடிகளை படித்து நிறுத்தி மூன்றாவது அடியைப் படிக்க வேண்டும். அப்படிப் படிக்கும் போது அந்த இறுதி அடி நாம் சிந்தித்த கருத்தைப் பிரதிபலிக்காது எதிர்பாராதத் திருப்பம் கொண்டதாக இருக்க வேண்டும்.

ஹைக்கூவும் வாசகனும்:
****************************


ஹைக்கூ ஒரு காட்சியைக் காட்டுகிறது. அதைப்பற்றிச் சொல்வதில்லை. அதன் விளைவான உணர்ச்சிகளையும் சொல்வதில்லை, படிப்பவரின் கற்பனைக்கே அவைகளை விட்டுவிடுகின்றது.
எழுதும்போது கவிஞனுக்கும் கருப்பொருளுக்கும் ஒரு சிறு இடைவெளிகூட இல்லாமல் எண்ணங்களைக் கலையவிடாமல் நேரடியாகச் சொல்லும்போது கவிஞனின் உணர்வுக்கும், வாசகனின் மனதிற்கும் கவிதை ஒரு பாலமாக அமைந்து நேரடித் தொடர்பை உண்டாக்கிவிடுகிறது.
கவிஞனின் எண்ணம் முழுவதையும் ஹைக்கூ வெளிப்படுத்துவதில்லை, ஹைக்கூ கவிதைகளைப் புரிந்துகொள்வதில் வாசகனுக்கு மிகப்பெரிய பங்குண்டு ‘ஹைக்கூ ஒரு பொருளை சுட்டிக் காட்டுவதோடு நின்றுவிடும், வாசகனே அதில் மறைந்திருக்கும் உணர்ச்சிகளைத் தேடித் துருவிக் கண்டுபிடித்து சுவைக்க வேண்டும்.

மேலும், ஈரோடு தமிழன்பன் அவர்கள் ‘ஹைக்கூ முழுமையானதாகவோ, தெளிவான கருத்துத் தெறிப்புடனோ இருந்தாக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. வாசகன் தனது கைவசம் கொஞ்சம் வார்த்தைகளை வைத்துக் கொண்டு ஹைய்குவைப் படிக்க வேண்டும். அவை தேவைப்படலாம். அவன், தனது அனுபவங்களையும், அனுமானங்களையும், கற்பனைகளையும் எடுத்துக் கொண்டு சென்றால், தானும் படைப்பாளியோடு ஒரு பங்குதாரராகிப் பயனை இதயக்களத்தில் வரவு வைக்கலாம். வாசகனும் கவிஞனோடு சேர்ந்து ஹைய்குவை மணந்துகொண்டு அவனுக்கு ஒரு விதத்தில் சகலையாகி விடுவதைத் தவிர வேறு வழியில்லை’ (தமிழன்பன், சூரியப் பிறைகள், ப.10.) என்று குறிப்பிடுவதிலிருந்தும் ஹைக்கூ கவிதையைப் புரிந்து பொருள் கொள்வதில் வாசகன் எந்த அளவுக்கு இன்றியமையாதவனாக விளங்குகின்றான் என்பதை உணரலாம்.

ஹைக்கூவில், நாம் காட்டும் காட்சி அல்லது நிகழ்ச்சி இயற்கையைப் பற்றி, மனிதனைப் பற்றி, வாழ்க்கையைப் பற்றி ஓர் அரிய உண்மையை உணர்த்துவதாக, வாசகன் உள்ளத்தில் ஒளியேற்றுவதாக இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் ஹைகூ எழுத வேண்டிய அவசியமில்லை (அப்துல் ரகுமான், சோதிமிகு நவகவிதை, ப.44.) என்பார் அப்துல் ரகுமான்.

தமிழ்நாட்டு ஹைக்கூக்கள் பெரும்பான்மையும் ஒற்றைப் பரிமாணத்தில்தான் வருகின்றன என தன் வருத்தத்தைப் பதிவுசெய்வார் கோவை ஞானி.

ஹைக்கூவில் நாம் கடைபிடிக்க வேண்டிய முக்கிய மரபுகள்: ********************************************************************

1. ஹைக்கூவில் முதல் இரண்டடி ஒரு கூறு. ஈற்றடி ஒரு கூறு. ஹைக்கூவின் அழகும் ஆற்றலும் ஈற்றடியில்தான் உள்ளது. ஈற்றடி ஒரு திடீர் வெளிப்பாட்டை, உணர்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி முழுக் கவிதையையும் வெளிச்சப்படுத்த வேண்டும். 

2. மற்றொரு மரபு ஹைக்கூவின் மொழி அமைப்பு.ஹைக்கூவின் மொழி ஊழல் சதையற்றமொழி. தந்தி மொழியைப்போல், அவசியமற்ற இணைப்புச் சொற்களை விட்டு விட வேண்டும். 

3. உயிர் நாடியான ஈற்றடியில் ஆற்றல் மிக்க வெளிப்பாட்டிற்காகப் பெயர்ச் சொல்லையே பயன்படுத்த வேண்டும்.

4.ஹைக்கூவுக்குத் தலைப்பிட்டு எழுதக் கூடாது. ஒரு ஹைக்கூவிற்கு இரண்டுக்கு மேற்பட்ட அல்லது குறைந்த பட்சம் இரண்டு உட்கருத்தாவது (குறியீடு போல; உட்பொருள்) இருக்க வேண்டும். ஹைக்கூவுக்குத் தலைப்பிடக் கூடாது என்பதற்கான காரணம் இதுதான்: தலைப்பைத் தாண்டிச் சிந்திப்பதைத் தடை செய்கிறது. ஒரு ஹைக்கூவின் உட்பொருள் (குறியீடு போல்) விரிந்து செல்வதாக இருக்க வேண்டும்.  ஒரு உண்மையான ஹைக்கூ குறைந்தபட்சம் இரண்டு உட்பொருளையாவதுத் தாங்கி நிற்பது சிறப்பு.

மேற்கண்டவற்றை ஹைக்கூப் படைப்பாளர்கள் கடைபிடிக்க வேண்டும். ஏனென்றால் ஹைக்கூவின் அடையாளமும், அழகும், ஆற்றலும் இவற்றில்தான் இருக்கின்றன என்றால் மிகையாகாது.

ஹைக்கூ கவிதையின் பண்புகள்:
**************************************


ஹைக்கூ கவிதைகளைக் குறித்து முனைவர் பட்டத்துக்காக ஆராய்ந்த நிர்மலா சுரேஷ் அவர்கள் ஹைக்கூவின் பண்புகளாகப் பின்வருவனவற்றை எடுத்துரைக்கிறார். இக்கருத்துக்கள் ஹைக்கூ கவிதையை புரிந்துகொள்ள பெரிதும் உதவும்.

  • ஹைக்கூ கற்பனையை ஏற்காது.
  • ஹைக்கூ உவமை, உருவகங்களைப் பயன்படுத்தாது.
  • ஹைக்கூ உணர்ச்சியை வெளிப்படையாய்க் கூறாது.
  • ஹைக்கூ தன்மைப் பாங்கினைத் தவிர்க்கும்.
  • ஹைக்கூ கவிதைக்குள்ளே ஒரு சொல் மட்டும் குறியீடாய்ப் பயின்று வருதல் இல்லை. ஹைக்கூ இருண்மையை மேற்கொள்ளாது.
  • ஹைக்கூவில் நுண்பொருண்மை இல்லை.
  • கவிஞன் தன் கருத்தை ஏற்றிச் சொல்லாமை.
  • பிரச்சாரமின்மை.
  • எளிமையாகக் கூறுவது.
  • சொல்லுவதைக் காட்டிலும் சொல்லாமல் விடுவது.
  • சின்ன உயிர்களையும் சிறப்பித்துப் பாடுவது.
  • மின்னல் என வரும் ஈற்றடி அமைப்பினைக் கொண்டதாக இருப்பது.
  • மெல்லிய நகைச்சுவையுணர்வு இழையோடியிருக்கும்படி அமைவது.
  • இயற்கையைப் பாடுவதுடன் இயற்கையை மனித உணர்வுகளோடு இணைத்துப் பாடுவது. ஆழ்மன உணர்வுகளும் மெல்லிய சோகமும் இழையோடும்படி அமைவது. 
  • பிற உயிர்களைத் தனக்கு இணையாக மதித்துப் பாடுவது.
  • மூன்றடிகளால் பாடுவது.
என்ற கருத்தை ஹைக்கூ படைப்பாளர்களும், வாசகர்களும் கருத்தில் கொண்டு ஹைக்கூ கவிதைகளை அணுக வேண்டும்

தாயாராகுங்கள் தோழர் தோழமைகளே...
இனி வரும் காலம் ஹைக்கூ தொடரில் செல்லட்டும்...
உங்களது பெயரை பதிவு செய்ய எனது மின்னனசலில் தொடர்பு கொள்ளவும்...

எனது அடுத்த எண்ணத்தில் 
தொடருக்கான பெயரும்  எழுத போகும் பட்டியலோடும் வருகிறேன்...

வாழ்த்துக்கள் அனைவருக்கும்,

வளர்வோம் வளர்ப்போம்...

அன்புடன் 
ஜின்னா.

மேலும்

மிக்க நன்றி சார். வளர்வோம் வளர்ப்போம்.. 06-Feb-2016 1:30 am
ஹைக்கூ தொடர் வெற்றிபெற வாழ்த்துக்கள் ஜின்னா..! 04-Feb-2016 2:01 pm
மிக்க நன்றி வளர்வோம் வளர்ப்போம்.. 03-Feb-2016 12:40 pm
மிக்க நன்றி வளர்வோம் வளர்ப்போம்.. 03-Feb-2016 12:40 pm
மேலும்...

மேலே