எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

அதிகமாக கருத்து பதிந்த எண்ணங்கள்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அண்ணா   உனக்காய் தங்கையின் கவி😍😍😍😍😍😍


மனம் ஏனோ அன்று 
உன்னிடம் பேச அச்சம்
கொண்டது- ஆனாலும்
இழந்து விட கூட எனும்
 உள்ளுனர்வு என்னுள்

சரி ஏதோ கடவுளின் சித்தம்
என தொடங்கியது என் 
ஆழ் மனதின் உரையாடல்
         உன்னுடன்....

உன் மன ரணங்களை 
என்னிடம் கொட்டி தீர்த்த
    தருணம்
உன்னுடன் நடு நிசியில்
    ஒர் நடைவலம்........

நிலா அற்ற மாலை பொழுதுகளில் அலைபேசி
அழைப்புகள் அதிலும்
   உன் ரணகுரல்கள்
உன்னை சமாதான படுத்த - 
நான்
அழுத தருணங்கள்
என் அழுகையின் போது 
எனக்காய் நீர் வடித்த உன் 
கண்கள்.....

ஓர் நாள் அழைப்பு 
இல்லாமல்
இருந்தால் பதறிய தருணங்கள்

உன் தொலைபேசி குறிப்பில்
அறிந்த உன் பிரச்சனைகள்
அதை நினைத்து புலரா 
     என் இரவு வேளை

அதிகம் கோபம் கொள்ளும்-நீ
 அதை சமாளிக்தெரியாமல்
       விளிக்கும்- நான்
அதன் பின் வரும் சமரசத்தை
     சேர்ந்து ரசிக்கும் நாம்

உன் ஒரே தங்கை-நான் எனும் 
         பிடிவாதம்
அதை ரசிக்க நீ செய்யும் சின்ன சின்ன சில்மிசம்
இத்தனை அழகா
 நம் உறவு????

தொப்பிள் கொடி உறவால் 
வந்த பந்தம் அல்ல-ஆனாலும்
தொடர்கிறது நம் பாசம்

        இப்படிக்கு உன் பிசாசு😈
                கதிர் மோதா

மேலும்

Tharamana kavithai 02-Oct-2021 9:49 pm

மேலே