எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

அதிகமாக பகிர்ந்த எண்ணங்கள்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எழுத்து தள தோழமைகளே..!

நமது ராணுவ வீரருக்கு செய்யும் தொண்டாக நினைத்து
இந்த செய்தியை முடிந்த அளவு பகிருங்கள்..!

நட்புடன் குமரி

மேலும்

நன்று 09-Nov-2018 12:05 pm
பாராட்டுக்குரிய பதிவு . 09-Aug-2014 9:40 pm
கண் போன போக்கில்.. இதை பார்த்தால் தயவு செய்து கைப் போனப் போக்கில் பகிருங்கள்.. நம் தேசத்தின் அடையாளத்தைக் காக்கும் இவருக்கு அவர் அடையாளத்தை அடைய உதவுங்கள் .. நல்ல எண்ணம் தோழரே... 09-Aug-2014 7:54 pm

மலையகம் புதைந்தது...

எங்களுக்கென்ன...

மூலைச் செய்தியாய்
முந்தானை அவிழ்த்த கதை....

பெட்டிச் செய்திகளாய்
தாலியறுத்த கதை..

தலைப்புச் செய்தியாய்
ஊர்கூடிக் கொள்ளையிட்ட கதை...

கிரிக்கெட்டில் சல்லாபம்
காவித்துணியில் களவாணி

இன்னும்... இன்னபிறவும்
திகட்டத் திகட்ட
கிடக்கிறது....

இன்னும் உச்சமாய்
உடையிலெது சிறப்பு...?
உயிர்த் தேவையான விவாதம்...

எந்தப் பேனாவும்
எழுதவில்லை... எல்லாக்
காணொளியும் குருடாகி
இருக்கிறது...

மலையகம்
புதைந்து விட்டது..........

இங்கும் சில்லறைகள்
புதைந்து போயிருக்குமடா...
தோண்ட வாருங்கள்..
பிணங்களும் வரும்....

நிர்வாணப் பிண (...)

மேலும்

அருமை நன்பரே 11-Nov-2014 12:01 pm
உண்மையில் நினைத்தாலே நெஞ்சம் வலிக்கிறது. இதை என் கருத்தும் பதிய வேண்டும் என்பதற்காக சொல்லவில்லை. நம் தமிழ் இனம் இன்னும் உணர்வில்லாமல் கிடக்கிறதே எனும் நினைக்கும்போது , இருந்த உணர்வும் குறைந்து விட்டதே என் எண்ணும்போது மிகவும் வருத்தம்தான் . சரவணா உங்கள் எண்ணத்திற்கு தலை வணங்குகிறேன் . தமிழன் என்ற முறையில் வெட்கப்படுகிறேன் வேதனைப்படுகிறேன் .... 11-Nov-2014 7:13 am
செருப்பால் அடித்தாலும் வாங்கிக் கொண்டு நட்புப் பாராட்டும் வெட்கம் கெட்ட வீணர்களிடம் அல்லவா சிக்கிக் கொண்டிருக்கிறோம்! இதில் காங்கிரெஸ் என்ன ?காவி என்ன? காரி உமிழ்ந்தாலும் ,காலணியால் அடித்தாலும் சுரணையா வந்து விடப் போகிறது? 11-Nov-2014 4:46 am
மன்னிக்கவும் தமிழகத்தில் உண்மையான தமிழன் எவனும் இல்லையோ ( நமையும் சேர்த்தே ) என்றே தோன்றுகிறது . சில நேரங்களில் தமிழன் என சொல்லவே வெட்கமாக இருக்கிறது ... என்னை நானே காரி உமிந்து கொள்வதைத் தவிர வேறன்ன செய்ய ? 08-Nov-2014 9:06 pm

மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது!

நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துச் செல்லவிருக்கிறேன்.

என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங்கள்.

இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர். இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது.

இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது.

ஆம்..! இதுதான் "நாவலன் தீவு" என்று அழைக்கப்பட்ட "குமரிக்கண்டம்".

கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங (...)

மேலும்

சிறப்பான பகிர்வு ஐயா! 22-Aug-2014 1:32 pm
குமரிக்கண்டம்........சிந்தனைக்குள் தெளிக்கிறது கடலற்ற வானத்தை...... 17-Aug-2014 10:35 pm
அருமையான பதிவு அகன் அய்யா , நண்பர் குமரிக்கும் , தங்களுக்கும் , தமிழர் வரலாற்றை பதிவு செய்து எங்களுக்கும் உண்மை நிலையினை உணர்த்தியதற்கு என் உளமார்ந்த நன்றிகள் 17-Aug-2014 8:08 pm
ஏதோ பொழச்சி கெடக்கோமுங்க.....!!! என்றும் வழிதொற்றிக்கொண்டு 17-Aug-2014 7:10 pm

எழுத்து நடத்தும் கவிதை போட்டி 2014

நமது Eluthu.com கல்லூரி மாணவ / மாணவியரை ஊக்குவிக்கும் வகையில் கவிதை போட்டி ஒன்றை நடத்த உள்ளது. போட்டி வரும் Oct 17 / 2014 முதல் Nov 17 / 2014 வரை நடைபெறும். போட்டி குறித்த விளக்கங்கள் மற்றும் போட்டிக்கான தலைப்புகளை இங்கே காணலாம்.

பரிசு தொகை ருபாய் 5000/- . இந்த பதிவை முடிந்தவரை அனைவரும் தங்களது வலைத்தளம், வலைபூ, facebook மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பகிர்ந்து இந்த போட்டியை சிறப்பித்து தரும்படி கேட்டுகொள்கிறேன்.

மேலும்

கவிதை எழுது பகுதிக்கு சென்று உங்கள் கவிதையின் தலைப்பு, கவிதை ஆகியவற்றை பதிவு செய்து, மறவாமல் கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் மற்ற போட்டிகளுக்கு சமர்பிக்க என்பதை செலக்ட் செய்யவும். Oct 17 முதல் இந்த போட்டிக்கான இணைப்பு அங்கே தெரியும், அதை செலக்ட் செய்து உங்கள் கவிதையை சமர்பிக்கவும்.. மேலும் உறுதி செய்ய போட்டிகள் பகுதியில் இருக்கும் இந்த போட்டியின் கீழ் "இந்த போட்டிக்கு சமர்பிக்கப்பட்ட படைப்புகள்" என்பதில் உங்கள் கவிதை சேர்த்துள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளவும். 13-Oct-2014 3:30 pm
வரும் அக்டோபர் 17 முதல் நவம்பர் 17 வரை மட்டுமே நீங்கள் உங்கள் கவிதைகளை இந்த போட்டிக்கு சமர்பிக்க முடியும். 13-Oct-2014 11:42 am
எப்படி பங்கேற்பது ? 12-Oct-2014 8:34 pm
இன்றிலிருந்தே துவங்கலாமா? 11-Oct-2014 2:58 pm

எழுத்து தள தோழர் தோழமைகள் அனைவருக்கும் வணக்கம்,

இங்கே பதிய போவதை பார்க்காமலே 
தயவு செய்து யாரும் தங்களுடைய பகிர்வை பகிர்ந்து விடவோ அல்லது கருத்து பதிந்து விடவோ வேண்டாம்..

மேலும் 
இங்கு சொல்லப் பட்டவை யாரையும் புன்படுத்துவன அல்ல
இது வெறும் கற்பனையே என்று சொல்லும் முட்டாளும் நான் அல்ல...

மேலும்
வெறும் மொய்யெழுதும் வாசகம் மட்டும் அல்ல இது...
அதையும் தாண்டி யோசிக்க வைக்கும் ஒரு எண்ணம் இது...

இப்போது நாம் யோசிக்க வேண்டிய நேரம் வந்து விட்டதாகவே கருதுகிறேன்...
இதை இந்த தளத்தார்கள் தவறாக புரிந்துக் கொள்ள மாட்டார்கள் என்றும் நன்புகிறேன்..

பொதுவாக இங்கு வருபவர்கள் யாருக்கும் வேலை இல்லாமல் 
வெட்டியாக சுத்திக் கொண்டிருப்பவர்கள் வருவது இல்லை என்று நினைக்கிறேன்..
(இதில் வேலை தேடி கொண்டிருப்பவர்களை மதிக்கிறேன்... அவர்களை நான் சொல்ல வில்லை என்று 
சொல்லி கொள்கிறேன்... அப்படியும் வருகிறவர்கள்... இன்னும் பாராட்டுக்கு உரியவர்கள்..)

இப்படி 
குடும்பத்தின் ஆசைகளை துறந்து
வேலை பளுவை மறந்து 
இங்கு வருபவர்கள்
வெறும் வேடிக்கை மட்டுமா பார்க்க வருவார்கள்? இங்கு...

மாறாக என் தாய் மொழியில் ஒரு தளம் இருக்கிறது
அங்கு சென்றால் என்னால் முடிந்த வரை 
என்னால் கற்று கொள்ள முடியும் 
என்னால் இயன்ற வரை கற்றுக் கொடுக்கவும் முடியும் 
என்ற உயரிய நோக்கத்தில் வருபவர்கள்தான் அதிகம்...

இன்னும் நான் உறுதியாக நம்பிக் கொண்டிருக்கிறேன்
இப்படி பட்ட மொழி சிந்தனை அல்லது
மொழி பற்று உள்ளவர்கள்தான் இந்த தளத்தை இயக்கி 
கொண்டிருக்கிறார்கள் அல்லது இயங்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள்  என்று
நம்புகிறேன்...

அப்படி வருபவர்களுக்கு இங்கு என்ன கிடைக்கிறது?

தமிழ் மேல் நாட்டம் இல்லாதவர்களுக்கு இந்த தளம் 
எப்படி வடிகாலாகும்?

அப்படி தமிழ் மேல் நாட்டம் இல்லாதவர்கள் இந்த தளத்தில்
புகுந்து வேறு திசை திருப்ப நினைத்தால் இதை
தளம் தாங்கி கொண்டாலும் இதில் படித்து ரசிக்கிறவர்வர்கள்
பொறுத்துக் கொள்வார்களா? என்பதே எனது கேள்வி?

இங்கு வருகிறவர்கள் யாரும் 
தவறான எண்ணத்தோடு வருவது கிடையாது....

வருபவர்கள் யாவரும் 
தமிழ் மேல் ஈடுபாடு கொண்டவர்கள்
அல்லது தமிழ் மேல் ஆர்வம் கொண்டவர்கள்...

அப்படி இருக்கும் போது 
ஒரு தனி நபர் தமிழை தரக்குறைவாக எழுதும் போது 
அல்லது பேசும் போது அந்த தமிழ் எதற்கு 
அல்லது இந்த தளம் எதற்கு?
என்று கேட்க தோன்றுமா இல்லையா?

இதில் இணைந்திருக்கும் பல பேருக்கும் தெரியும்
நாம் தமிழால் இணைந்திருக்கிறோம் என்று...

ஆனால் 
அந்த புனித தன்மை கெடுக்கும் வகையில்
ஒரு சிலர் நடத்தும் நாடகத்தில் எல்லோரும் நடிகர்கள் ஆகி விடுகின்றனர்...

இதில் கொடுமை என்ன வென்றால்
சில கதா நாயகர்களும் வில்லன்களாகி விடுங்கின்றனர்...

இங்கு வரும் எல்லாருமே தமிழை வளர்க்க வருகிறார்கள் 
என்று நினைத்திருந்தேன் ஆனால்
அதை தவிர்த்து எல்லாவற்றையும் வளர்க்க வருகிறார்கள் 
என்றால் இந்த இடம் அதற்கு பொருத்தமானதா?

இங்கு வரும் எல்லாருமே 
ஒரு விதத்தில் கலைஞர்கள்/இளைஞர்கள் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்...

ஆனால் சில பதிவுகளை பார்த்த பிறகு
நாங்கள் இதில் எந்த பகுதியிலும் சேராதவர்கள்...
எனக்கும் தமிழுக்கும் ரொம்ப தூரம் என்பதாக இருக்கிறார்கள்...

அப்படி யோசிக்கும் சில தோழர் தோழமைகள்
வேறு எங்காவது சென்று தங்கள் மனக் குறையை தீர்த்து கொள்ளலாமே...
ஏன் எங்களிடம் அல்லது இந்த தளத்திடம் வந்து இச்சையை தீர்த்துக் கொள்கிறீர்கள்...?

நாங்கள் வேறு திசை நோக்கி பயணம் போகிறோம்
அதுவும் உங்களிடம் சொல்லி விட்டுதான்...
ஆனால் 
அது தெரிந்து கூட 
எப்படி தமிழ் வளர்ந்து விடும் ?
அதை எப்படி வளர விடுவோம்?
 என்று போட்டிக் கொண்டு வந்தால் எப்படி?

எந்த விமர்சனம் என்றாலும் நேருக்கு நேராக வையுங்கள்..
உங்கள் பெயரையும் ஊரையும் 
யாருக்கு மகன் என்றும் 
தெளிவாக சொல்லுங்கள்...

இதில் மூடி மறைக்க என்ன இருக்கிறது...
எனது அப்பா பெயரை சொல்ல 
எனக்கு எந்த தயக்கமும் இல்லை...
எனது அம்மா மொழி (தாய் மொழி) தமிழ் என்று சொல்ல
எப்போதும் நான் தயங்கியது இல்லை...
என் முகத்தை காட்ட எப்போதும் மறுத்ததில்லை...

பிறகு எதற்கு இந்த பிதற்றல்கள்?

உங்கள் சுய விவரத்தை காட்ட துணிவில்லாவதவர்கள் கையில்
எப்படி எங்கள் வருங்காலத்தை சமர்பிக்க முடியும்?

தமிழ் பேசும் எல்லோரும் ஒரு விதத்தில்
அண்ணன் தம்பிகள்தானே...
அல்லது சகோதர சகோதரிகள்தானே...
இதில் என்ன வெக்கம் இருக்கிறது... பெயரை மாற்றி வைத்துக் கொள்ள?

ஒரு வேலை பெயரை மாற்றி வைத்துக் கொள்ளுங்கள்
அது தங்களுக்கு பிடித்த பெயராக இருக்கட்டும்...
அப்படி பெயரை மாற்றி வைத்து கொள்ளும்போது 
உங்களின் மொழியை மாற்றி வைத்துக் கொள்ள முடியுமா?

இங்கு 
யாரை திட்டுகிறீர்கள்?
யாரை குறை சொல்கிறீர்கள்?
யாரை விரட்டுகிறீர்கள்?
யாரை வெளி ஏற்றுகிறீர்கள் ?

ஒரு தமிழனுக்கே ஒரு தமிழன் இப்படி பட்ட செயல் செய்தால்
யார் தமிழனை காப்பாற்றுவார்கள்?
(இதில் எனது தாய் மொழி தமிழ் என்று பெருமையாக போட்டுக் கொள்வீர்கள்... 
அது வேற கதை )
ஆனால் வேறு எங்காவது இலங்கையிலோ அல்லது
வேறு எங்காவது தமிழருக்கு ஒரு பிரச்னை என்றால் 
எப்படி எல்லாரும் ஒன்று கூடுகிறீர்கள்? 
இது வெட்கமாக தோன்ற வில்லையா?

இங்கு வருபவர்கள் யாவரும் தங்களது 
எவ்வளவு சொந்த பந்தத்தை விட்டும்
தங்களது நேரத்தை செலவிட்டும் வருகிறார்கள்
என்று சொன்னால் புரியுமா உங்களக்கு?

அப்படி வந்து பார்க்கும் போது சில 
பதிவுகள் என் தாய் மொழியை களங்கப் படுத்தி எழுதி இருப்பதைக் கண்டு 
யாரால் பொறுமையாக இருக்க முடியும்?

ஒருவேளை அதையும் தாங்கி கொள்ளும் சக்தி
யாருக்காவது இருக்குமென்றால் அதை 
அவர்கள் தாயை தரக்குறைவாக பேசியவரையும்
மகான் என்று சொல்ல கூடும்....

தமிழ் மேல் உணர்வு கொள்ளாதவர்கள் 
இந்த தளத்திற்கு தகுதி இல்லாதவர்கள் என்று நினைக்கிறேன்...

அவர்களுக்கு பொழுது போக வில்லை என்றால்
ஏதாவது முகநூல் அல்லது அப்படி பட்ட சமூக வலைத்தளங்கள்
ஏராளமாக இருக்கிறது...

அதை விடுத்து 
இந்த தளத்தையும்(இங்கு மட்டுமல்ல) நம் தமிழையும் தயவு செய்து அசிங்க படுத்த வேண்டாம்...

எவ்வளவு பெரிய 
உலகம் போற்றும் மொழியை நாம் பேசுகிறோம் என அறியாதவர்கள்தான் தமிழர்கள் (நாம்) எனவும்...
தமிழை தமிழர்களாலே கெடுக்க படுவதாகவும் உலகம் நம்மை காரி துப்புகிறது...

இதற்கு எடுத்துகாட்டாக நாமும் இங்கு 
செயல் படுகிறோம் என்று நினைக்கும் போது 
மனம் வருத்தம்தான் அடைகிறது...

இதில் 
பெயர் மாற்றம் மட்டும்தான் ஒரு சுகம் என்றால்
எல்லோரையும் ஏமாற்றுவதுதான் ஒரு செயல் என்றால்..
எல்லோரையும் திட்டுவதுதான் ஒரு பழக்கம் என்றால்...
எல்லோரையும் கேவலப் படுத்துவதுதான் உங்கள் பொழுது போக்கு என்றால்...
எல்லோரையும் காயப் படுத்துவதுதான் உங்கள் எண்ணம் என்றால்...
அதற்கு தமிழை தயவு செய்து பயன் படுத்தாதீர்கள்...

அதற்கு வேறு தளம் இருக்கிறது
அதற்கு வேறு இடம் இருக்கிறது...

தளத்தார்க்கு ஒரு கேள்வி...

தளத்திற்கு உறுப்பினர்கள் ஆகாமல் 
கருத்து போட முடியாதல்லவா?
அப்படி ஒரு அருமையான முறை வைத்திருக்கும்போது
ஏன் உறுப்பினர் ஆகும்போது அவர்களின் ஆதாரத்தை (ID proof )
வாங்காமல் உள்ளே அனுமதிக்கிறீர்கள்...?

இப்போது இந்தியாவில் எதற்கு எடுத்தாலும் அதை கேட்கிறார்களே...

இப்படி பட்ட பிரச்சனையில் நாம் எத்தனை 
நல்ல எழுத்தாளர்களை இந்த தளம் இழந்து இருக்கிறது என்று
நான் சொல்ல தேவை இல்லை என்று நினைக்கிறேன்...

அது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான் எனவும் கருதுகிறேன்...
அப்படி சிறந்த எழுத்தாளர்களை இழந்து விட்டு 
நாம் என்ன செய்ய போகிறோம் நாம் தனித்து நின்று...

ஒரு சம்பவம் உங்களுக்காக...

நமது மகாத்மாவை அரை நிர்வாண பக்கிரி என்று சொன்ன
வின்சென்ட் சர்ச்சில் (அன்றய ஆங்கிலேய அரசன்/தலைவன்)
ஆனால் அவரை பற்றி புரிந்து கொண்ட பிறகு எப்படி எல்லாம் 
மன்னிப்பு கேட்டான் என்பது நமது வரலாறு...

ஒரு தேசத்துக்கு எத்தனையோ தலைவன் வரலாம்
ஆனால் தேசத்துக்கு ஒரே ஒரு பிதாதான் அது நமது தேசப் பிதா காந்தி..

இங்கே திட்டியவனை இந்த உலகம் போற்ற வில்லை 
மாறாக 
மன்னித்தவனை அல்லது பொறுத்துக் கொண்டவனை 
இந்த தேசமே/உலகமே போற்றியது ஒரு மகாத்மாவாக....

இதை எதற்காக சொல்கிறேன் என்றால்

எல்லா நேரத்திலும் 
நீங்கள் அடிக்கும் போது கன்னத்தை காட்டுகிறோம்...
மீண்டும் நீங்கள் அடிக்கும் போது மறு கன்னத்தையும் காட்டுகிறோம்
ஆனாலும் நீங்கள் அடிக்கும் போதெல்லாம் 
கன்னத்தை காட்டுவதற்காகவே எங்கள் கன்னம் 
படைக்கப் பட்டதாக மட்டும் எண்ணி கொள்ளாதீர்கள்

வாழ்க தமிழ்
வளர்க தமிழர்கள்...

நட்புடன்...
ஜின்னா.

மேலும்

வாழ்த்துக்கள் ஜின்னா நல்லெண்ண பதிப்பிற்கு வாழ்த்துக்கள் தமிழை தாய்த்தமிழை அழகிய சொற்றொடர்களால் அலங்கரிப்பவர்களே மதிப்பு மிக்கவர்கள் - அதை பழகிய வார்த்தைகளால் அலங்கோலப்படுத்துபவர்கள் தமிழை நேசிக்க இயலுமா என யோசிக்க தோணுகிறது 17-Jan-2019 10:06 pm
வாழ்க தமிழ் வளர்க தமிழர்கள்... அருமை, நம் தாய் மொழியாம் தமிழோடு, தமிழர்களும் வளர்க - மு.ரா. 05-Feb-2017 11:13 am
மன்னிக்கவும் வேறு பக்கத்தில் பதிவிட வேண்டியதை மாற்றி பதிவிட்டுவிட்டேன் : 09-Dec-2015 7:35 pm
நான் மிகவும் கர்வம் கொள்கிறேன் !!! இப்படிப்பட்ட உறவுகளுக்குள் நான் ஒருத்தியாய் இருக்கிறன் என்பதில் ! தம்பி திருமூர்த்தி நீ நிச்சயம் வெல்வாய் ஜின்னா தோழரை போன்றோர் உன்னுடனிருக்கையில் ! 09-Dec-2015 7:32 pm

------------------ எழுத்தாளர்களே ...அதிசயம் (அதிர்ச்சி) .ஆனால் உண்மை ------------------------------

உங்கள் கவிதைகளை பத்திரிகை / ஊடகங்களுக்கு அனுப்புவதாக இருந்தால் முதலில் அனுப்பி விட்டு அதில் வந்த பிறகு எழுத்தில் பதிவு செய்யுங்கள் .

என் சமிபத்திய எழுத்து கவிதைகள் வேறு பெயர்களில் இணையங்களில் பதிவு ஆன இணைப்புகள் கீழே .இன்னும் தோண்டினால் எத்தனை நகல்கள் வருமோ தெரியாது . எனக்கு எழுதுவது தொழில் இல்லை .ஆனால் நம்மில் சில பேருக்கு அது லட்சியமாக , கனவாக இருக்கலாம் . கவனமாக இருங்கள் .

https://plus.google.com/101225903415480206307/posts

http://kathiravan.com/%E0%AE%AA%E0%AF%82-%E0%AE%92%E (...)

மேலும்

இப்படி ஒரு முகநூல் முகவரி இல்லை . செக் செய்தேன் . ஓடி விட்டானோ . பாருங்கள் . 23-Nov-2014 4:54 pm
செல்வராஜ் parankuntrapuramஎன்ற பெயரில் ஒரு நாதாரி எல்லா கவிஞர்களின் கவிதைகளையும் திருடி முகப்பத்தகத்தில் அநேகரின் பாராட்டை வாங்கிவிட்டான். அவனுக்கு முதலில் ப்ரண்ட்ஸ ரிகொஸ்ட் கொடுத்து பின்னர் அவன அவன் அடுத்த நிமிடமே அக்ஸப்ட் பண்ணுவான் பின்னர் தாழியுங்கள் அவனை. நான் அவனை திட்டியதால் என்னை அன் ப்ரண்ட் செய்து விட்டான். அவன் கவிதை திருடுவதில் நம்பர் 1. அவனை திருத்த முடியாமல் தவிக்கிறேன். அவன் முக புத்தக முகவரி Selvaraj parankuntrapuram 22-Nov-2014 9:31 pm
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.. குறிப்பாக கவிதை திருடர்கள் ஜாக்கிரதை... சொற்களை கூடவா திருட வேண்டும்.. அறிவு கெட்ட ஜென்மங்கள்...நீங்கள்.... 22-Nov-2014 9:29 am
இதுவும் போச்சா..... அவ்ளோதான் ராஜ்.... 21-Nov-2014 3:39 pm

தோழமை நெஞ்சங்களே

என் இனிய தோழன் யுகபாரதி ........

உழைக்கும் வர்க்கத்தினரின் குரலாய் ...
தஞ்சை மண்ணின் மணம் பரப்பும் வாசமாய் ,
வழக்கு வகைமைகளுக்குள் திரையில் பாடல்கள் புனைந்தும்
மிக அழகிய வடிவமைப்பில் நூல்கள் பல படைத்தும்
எளிமையாய் இன்னமும் எவரிடமும் தோழமைப் பாராட்டியும்
உரை வீச்சிலும் கவியரங்க கவிதைகள் அளிப்பதிலும் தமிழில் அரிதாரம் பூசிக்கொண்டு யதார்த்த கற்பனை அழகை அளித்தும் .....
வாழ்ந்து வரும் ..
சிகரத்தை நோக்கி வளர்ந்து வரும்
அருமையான படைப்பாளி ..படிப்பாளி ... தமிழ்த்தொழிலாளிதளத்தில் தமிழில் தங்களது நொடிகளைத் தொலைத்து படைப்பு நெடி பரப்பும் தோழர்களை ஊக்குவிக் (...)

மேலும்

விருதுகள் அனைவருக்கும் விருந்து.... எனக்கோ.. அது என்றுமே மருந்து.... ஆமாம்.... இன்னும் என் சிந்தனையை ஆழ தூண்டும் அருமருந்து..! மருந்து கிடைத்தது.... பருந்தாய் பறக்குகிறேன்...! பதிவுகள் பதிக்க ... விரைவில் வருகிறேன்..! அரு மருந்தை அளித்த அகன் அவர்களுக்கு.. நன்றிகள்..! என்னோடு விருது பெறும் அனைவையும் இன்னும் பல விருதுகள் பெற வாழ்த்துகிறேன்..! என்றும் நட்போடு.. குமரி பையன் 01-Jul-2015 3:45 pm
அகன் ஐயா அவர்களுக்கும், யுகபாரதி ஐயா அவர்களுக்கும் மற்றும் எழுத்து நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள் நன்றிகள் ! வாழ்க வளமுடன் 26-Jun-2015 11:33 am
திரு. யுகபாரதி அவர்களின் பெயரில் விருது பெற இருக்கும் மேற்காணும் நண்பர்கள் அனைவர்க்கும் மகிழ்வோடியைந்த வாழ்த்துகள்.....!! நண்பர்கள், மென்மேலும் விருதுகள் பல பெற்று சிறக்கட்டும்.....! அகன் ஐயாவிற்கு மீண்டும் எங்கள் நன்றிகள் :) :) 22-Jun-2015 11:59 am
தோழர் யுகபாரதி விருது -2015 பெறவிருக்கும் நட்புக்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் .. 19-Jun-2015 11:12 pm

2015 ஆம் ஆண்டின் மகாகவி ஈரோடு தமிழன்பன் விருது பெறுவோர்
தோழமை நெஞ்சங்களே

வணக்கமும் வாழ்த்தும் .

2015 ஆம் ஆண்டின் மகாகவி ஈரோடு தமிழன்பன் விருது பெரும் தோழர்களுக்கு வாழ்த்துக்கள் .

இனி ஆண்டுதோறும் உலகின் பல பகுதிகளில் இருந்தும் தமிழகத்தின் பல எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்கள் எனப்படும் பெருந்தகைகளோடும் எழுத்து . காம் தளத்தின் தோழர்கள் தெரிவு செய்யப்பட்டு "எழுத்து . காமின் விருதாளர்கள் "என ஒரு வகைமைக்குள் விருது பெறுவர் எனும் இனிப்பான செய்தியை உங்களோடு பகிர்ந்து மகிழ்ச்சி அடைகிறேன் .

விழா குறித்த செய்திகள் தொடரும் .

விருதாளர்கள் :

தோழர்கள் ,
கவிதை

பழனிகுமார்
(...)

மேலும்

அனைத்து தோழமைகளுக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் ....மேலும் மேலும் அவர்கள் கவிகள் பெருக ...எழுத்து தளம் சிறக்க என்றும் தொடர்வோம் .... 02-Aug-2015 12:44 pm
படைப்பளித் தோழர்களுக்குப் பணிவான வணக்கங்களும் பக்குவமாய் வாழ்த்துக்களும் வாழ்க வளமுடன் 26-Jun-2015 11:45 am
விருதுபெறும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்...அகன் அய்யா அவர்களுக்குக்கு மேலும் தன் பணியினை சிறப்பாக தொடர வாழ்த்துக்கள்.... 23-Jun-2015 10:51 am
விருது பெரும் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள், வாழ்க வளமுடன். 18-Jun-2015 10:17 pm
மகாகவி ஈரோடு தமிழன்பன் விருது -2015

விருதாளர்கள்

தோழமைகள் :

சியாமளா ராஜசேகரன்

நிஷா மன்சூர்

சொ.சாந்தி

வீ .திலகவதி

மு .ரா

வளர்மதி

அமுதா அம்மு

பனிமலர்

முதல்பூ

கே .இனியவன்

ஜெயாராஜரத்தினம் 

மகிழினி

எ கே கார்த்திகா

தருமன்

நிலாகண்ணன் 

முகமது சர்பான்

கயல்விழி

குமார் பாலகிருஷ்ணன்

அன்புடன் ஸ்ரீ

நுஸ்கி மு எ மு


சரஸ்வதி பாஸ்கரன்


விருதாளர்களுக்கு வாழ்த்துகள்


பெருகும் அன்புடனும் ஆக்க விழைவுகளுடனும்

அகன்

மேலும்

விருது பெரும் உறவுகளுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள். வாழ்த்திய உறவுகளுக்கு கோடி கோடி நன்றிகள். 06-Jan-2016 9:48 am
விருது பெரும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்....... 05-Jan-2016 11:03 am
விருது பெறும் அனைவருக்கும் அகம் மகிழ் வாழ்த்துகள் 05-Jan-2016 10:10 am
விருதுபெறும் அணைத்து கவிஞர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் 04-Jan-2016 7:31 am

இன்றுடன் HIOX நிறுவனம் துவங்க ஆரம்பிது 10 ஆண்டுகள் முடிகின்றன. எங்களுடன் இணைந்து பணியாற்றும் நண்பர்கள், எங்கள் சேவையை பயன்படுத்தும் தோழர்கள், எங்களுடைய எழுத்து நண்பர்கள் அனைவருக்கும் எங்களின் நன்றிகள்.

மேலும்

மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 23-Nov-2014 6:13 am
நிறைவான வாழ்த்துக்கள். 22-Nov-2014 5:07 pm
இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் 22-Nov-2014 3:06 pm
மனமார்ந்த வாழ்த்துக்கள் !!! HIOX நிறுவனத்திற்கு .... 22-Nov-2014 11:38 am
மேலும்...

மேலே