எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

அதிகமாக பகிர்ந்த எண்ணங்கள்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பகலில் சூரியஒளியில் மண்ணில் விழும் மரத்தின் நிழல்

இரவில் விண்ணில் விழுகிறது கற்பனை ஒளியில்...

மேலும்என்றும் நலமுடன்

 ----------------------

உலகில் பிறந்து இறுதியாக இமை மூடும்வரை வாழ்கின்ற , வாழப்போகிற எவரும், உள்ளவரை, எவ்விதப் பிணியுமின்றி நலமுடன் இருந்தால்தான் வாழ்க்கை என்கின்ற பயணம் சுகமாக , மகிழ்ச்சியாக நிறைவு பெறும் என்பதை அனைவரும் அறிவர் .உடல்நலம் குன்றி நோயுடன் அல்லது ஏதோ ஒரு குறைபாடு ஏற்பட்டு அவதிப்பட்டால் , அவர் எந்த அளவு மனதளவும் பாதிக்கப்படுவர் என்பதை நான் கண்டதும் உண்டு , எனது தனிப்பட்ட  அனுபவத்தில் உணர்ந்ததும் உண்டு . 

ஒருவர் பொருளாதார அடிப்படையில் மேன்மக்களாக உயர்நிலையில் இருந்தாலும் ,  வசதிபடைத்தவர்கள் ஆனாலும் , நலமோடு வாழத்தான் விரும்பும் ஒவ்வொருவரும் தனது நலத்தில் மிகுந்த அக்கறையுடன் இருப்பர் . இது அனைவருக்கும் பொருந்தும் . நான் அந்த அளவிற்கு வசதி படைத்தவன் இல்லையனிலும் , நிச்சயம் வறுமைக் கோட்டிற்கு கீழே இல்லதாவன் என்பது உண்மை . 

எவ்வளவு செல்வம் இருந்தாலும் சீரான உடல்நலமுடன் எவ்விதக் குறையுமின்றி இருந்தால்தான் அது முழுமையான வாழ்வு என்பது முன்னோர் கூறிச்சென்றது . ஆனால் அனைவருக்கும் அவ்வாறு கிட்டுமா என்பது கேள்விக்குறி தான் . மிக குறைவான சதவீதம் தான் அந்த நிலையில் இருந்தனர் ,இருப்பர் இவ்வுலகில் . மற்றபடி மீதமுள்ள அனைவரும் குறைபாடுகளோடு தான் வாழ்கின்றனர் என்பது யதார்த்த நிலை . 


" நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் " என்பது நூற்றுக்கு நூறு உண்மை. மிகப்பெரிய செல்வந்தர்களான டாடா , பிர்லா, அம்பானி  , அதானி போன்று வாழ ஆசைப்படுவதை விடுத்து , ஒரு சாதாரண சராசரி மனிதனாக, வலிமை மிக்க சரீர சுகத்துடன் என்றும் நலம் குன்றாமல் வாழ்ந்திட முற்பட வேண்டும் என்பது எனது கருத்து. அதற்கான வழிமுறைகளை ஆய்ந்து வகைப்படுத்தி முறையாக வாழ்ந்தால் சீரான உடலுடன் சீர்மிகு வாழ்க்கை சிறப்புடன் அமையும். 


எனது தொடர் பதிவுகள் குறைந்து போனதும், சிந்தனை சிதறுவதற்கும் , எழுதுவதில் ஒரு தேக்கமும் உருவானதற்கு , என் உடல்நிலையும் ஒரு காரணம் என்பதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன் .


 பழனி குமார்               
         
 


மேலும்

பெண் குழந்தை என்றதும் பதரிப்போனேன்

உன் முகம் கண்டு மெய் சிலிரத்து போனேன்
நீ தவழ்ந்து வரும் அழகில் பசி மறந்து போனேன்
பட்டாடை கட்டி நடந்த அழகை
பத்திறப்படுத்தினேன்
மழலை குரல் கேட்டு என்னையே மறந்து போனேன்
உன் காலில் கொழுசை அணிந்து
தங்கத்தின் மேல் வெள்ளி உரசும்
ஓசை கண்டேன்
பள்ளிக்கு உன்னை அனுப்பையில்
உன் புத்தகபையாக நானே வந்தேன்
நீ பட்டம் பெருகையில் என்னை நானே பெருமை பேசிக்கொண்டேன்
எனக்கு துணை நின்ற போது
தாயாகவே நினைத்து கொண்டேன்
மணமேடையில் உன்னை கண்டதும்
என் வாழ்வின் லட்சியம் வெறிலை
என எல்லையில்லா ஆனந்தம் கொண்டேன்
நீ பெற்ற செல்வதை வாரியணைத்து
முத்தமிட நான் செய்த புண்ணியம்
என்னவென்று புரிந்தது கொண்டேன்
எத்தனை சந்தோஷங்களை கண்டே
உன் தந்தையாக
இவையெல்லாம் உன்னாலே
என் மகளே.....
                         இப்படிக்கு
உன் சராசரி தந்தை

               இலக்கியாசேதுராமன்.

மேலும்


சிறுபான்மை ,பெரும்பான்மை எனும் மனப்பான்மை நமது சமுதாயத்தில் ஏன், எப்படி வந்தது ?


அரசியல் ஒரு முக்கியக் காரணி என்றாலும் நான் அறிந்தவரை பொதுவாக மக்களின் ஆழ்மனதிலும் இந்த எண்ணம் எழுகிறது என்பதை மறுக்க முடியாது நிச்சயம் . இதை பலரிடமும் பேசும்போதும் பழகும் போதும் நன்கு உணர்கிறேன் . 

இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் சாதி மதமெனும் நச்சுக்காற்றை நாம் சுவாசிப்பதால் தான் . 

அகிலத்தில் அனைவரும் சமம் என்கிற நிலை அடித்தளம் முதல் மேல்மட்டம் வரை வந்தால் மட்டுமே , இந்த நஞ்சை நெஞ்சிலிருந்து அகற்ற முடியும். இதை நாம் காண்போமா என்று தெரியாது . 

ஆனால் வருங்கால சந்ததிகள் இதை உருவாக்கட்டும் . 

​​   
  பழனி குமார்               

மேலும்

என்னதான் அளவிலா பணமும் , வானளவு அதிகாரம் இருந்தாலும் தமது வாழ்க்கையின் முடிவு எப்படி வேண்டுமானாலும் இருக்கும் என்பது சாட்சிகள் நம்மை கடந்து சென்றிடும் நிகழ்வுகள் !  ஆழ்ந்த சிந்தனைகள் அறிவைச் செதுக்கிடும் !
பெற்றிடும் அனுபவங்கள் கற்பிக்கும் வாழ்க்கையை !!!!!!  

மேலும்

அனுபவங்கள் பாடமாக ஆனாலும் 
பாடங்கள் படிப்பினை ஆனாலும் 
படிப்பினை ​செயல்பட வைத்தாலும் 
சிந்திக்கும் ஆற்றலுடைய மனிதன் 
நடைமுறையென வரும் போது 
தடுமாற்றம் அடைந்து செயல்களில் 
தவறு செய்வதும் , பின்பு வருந்துவதும் 
ஏனென்று தெரியவில்லை ?பழனி குமார்  

மேலும்

நமது சிந்தனை ஊற்றும் சிந்திடும் வியர்வையும் 
மற்றவர்க்கும் பலனாக இருந்தால் சிறப்பு !  மக்கள் மிகவும் நம்பிக்கை வைத்திருப்பது காவல் துறை மற்றும் நீதித்துறை மீது. 
அந்த வகையில் அவர்கள் செயல்பட்டால் சமுதாயம் பயனுறும் மகிழ்வடையும் !  

மேலும்

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
பூக்களுக்கு பனித்துளி சுமைதான் 

சூரியன் வரும் வரை
ஆனால் 

என் நினைவுகள் உன்னோடு சேரும் வரை

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

மேலும்

அன்று வில்வித்தை முதல் சொல்வித்தை வரை சொல்லித்தந்த வித்தியாலயங்களில் தேன்  குடித்த வண்டுகள்
இன்று பறக்க தெரியாத பட்டாம்பூச்சிகளாய் பள்ளிகளில் - நம் குழந்தைகள்

மேலும்

கடந்தவையும்
நடந்தவையும்
ஆவணங்களில்
பதிந்தவையும்
வருங்காலம்
வாசிக்கவுள்ள
வரலாற்றின்
பக்கங்கள்...

நடைபெறும்
நிகழ்வுகள்
நாளிதழின்
தகவல்கள்
தொகுத்திடும்
செய்திகள்
தொடரும்
தலைமுறைக்கு
அறிவுப் பெட்டகம்
ஆய்வுக் களஞ்சியம் ...

இறந்தக் காலமும்
அறியாமல்
நிகழ் காலமும்
புரியாமல்
எதிர்காலத்தை
எண்ணாமல்
பொழுதைப்
போக்கிடும்
பொறுப்பற்ற
இளைய சமுதாயம்
இனியாவது
சிந்திக்க வேண்டும்
சரியான முறையில்
செயலாற்ற வேண்டும்
பகுத்தறிவால்
வகுத்துணர்ந்து
வாழ்வியல்
நியதிகளுடன்
நெறிதவறா
வாழ்க்கை
வாழ்தல் வேண்டும் !

பழனி குமார்
10.08.2019

மேலும்

அருமை 15-Aug-2019 9:03 am
உண்மை...அருமை 14-Aug-2019 9:39 am
மேலும்...

மேலே