எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

அதிகமாக பகிர்ந்த எண்ணங்கள்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அவளுக்கு இரண்டாவது காதலாக 
இருக்க விருப்பமில்லாதவனாய் 
முதல் காதலை அழிக்க முயற்சித்தேன் !!!
இன்று இல்லாவிட்டாலும்
என்றோ ஒருநாள் 
அவளை நீ பிரிந்து செல்வது உறுதி 
என தெரிந்தும்... 
அவளை பிரிந்தால் நீ  இறந்து விடுவாய் 
என புரிந்தும்...  
இயற்கையாய் நீ பிரியும் வரை 
காத்திருக்க விருப்பமில்லாம் 
செயற்கையாய் 
உன்னை அழிக்க  இரக்கமற்றவனாய் இரவில் கள்வன் போல் வந்தேன் 
அவள் அறைக்கு ...
உறக்கத்திலும் அவள் உன்னை 
இருக்க பற்றிருந்தால்!!!
கோவம் கொண்டு பிரிக்க 
எண்ணினேன்... 
அதன்பின் சிறிதுநேரம் 
அவள் உன் மேல் வைத்த 
காதலை எண்ணி  
அழிக்க மனமில்லாமல்...
நானும் காதல் கொண்டேன் 
உன்னை இரண்டாவதாக... 
இப்போது புரிந்தது அவள் ஏன் உன் மீது இவ்வளவு காதல் கொண்டால் என்று... 
அவளின் முதல் காதலே!!!
விரல்களின் ராணியே!!!
உனக்கு யார் பெயர் வைத்தது 
நகம் என்று? 

மேலும்

நாம் வாழும் வாழ்க்கையை வரலாறாக மாற்றுவது நம் கையில் தான் இருக்கிறது. வந்தோம் , வாழ்ந்தோம் , சென்றோம் என்பதல்ல வாழ்க்கை . ஏதாவது ஒரு இலட்சியத்துடன் பயணிப்பதும் , அதனை சாதிக்க நினைப்பதும் தான் முற்றுப்பெற்ற வாழ்க்கையாகும் .அதுமட்டுமன்றி நாம் கொண்ட கொள்கையில் ஒருதுளியும் மாற்றம் இல்லாமல் இறுதிவரை உறுதியாக வாழ்வதும் , நம்மைப்பற்றி மற்றவர் நாம் மறைந்தப் பின்னும் பேசும்படி வாழ்ந்துக் காட்டுவதும், பலரும் நம்மை பின்பற்ற வைப்பதும் தான் உண்மையான வாழ்க்கை .


நம்முடன் பயணிப்பவர்கள் , உறவாடுபவர்கள் , நம்மீது அக்கறை செலுத்துபவர்கள் என்றும் நிலையாய் உடனிருப்பர் என்பது நிரந்தரமல்ல .நாம் தனி ஒருவராக இருந்தாலும் , மனம் தளராமல் நமது இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும். அதற்கு ஏற்றாற்போல நம்மை தயார்படுத்திக் கொள்ளல் அவசியம் .

இது அனுபவத்தில் நான் உணர்ந்தது .பல சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாறு அதற்கு சான்றாக விளங்குகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

புரிந்து நடப்போம் ,
புவியில் வாழும்வரை !
அறிந்து செயலாற்றுவோம்
அகிலத்தில் உள்ளவரை !


பழனி குமார்
13. 7.2020

மேலும்

நமது பாதச்சுவடுகள்
இந்த மண்ணில் பதிவதை விட,


நமது வாழ்க்கைப் பதிவுகள் ,
அனைவரின் இதயத்திலும்
சுவடுகளாக நிலைத்தால் ,

நாம் வாழும் வாழ்க்கை
அர்த்தமுள்ளதாகவும்
பயனுள்ளதாகவும் இருக்கும் !

நாம் இந்த மண்ணில் வாழ்ந்ததை விட
மறைந்தும் மற்றவர் மனதில் வாழ்வதுதான்
உண்மையான , பெருமைக்குரிய வாழ்க்கை !


பழனி குமார்  

மேலும்

       "வற்றாத நீரூற்றாய்  நம்                               காதல்"

 என் அன்பான முரடனே எனை  காலமெல்லாம் உன்னோடு  ஆட்கொள்ள      
                 எப்போது வருவாயடா... 


 காதலின் கட்டுப்பாடுகளை மறந்து மூச்சற்று நிற்கிறேன் உன்னாலே இப்போது இனி     
                 எப்போதும் .. 

 எனக்காக என்னோடு   நீ போதும்  நாமாக     
                   எப்போதும்.. 

உனை விட்டு அகலாமல் உன் கைக்குள்ளே உனது கட்டு பாட்டுக்குள் நான் வேண்டும் 
                    எப்போதும்... 

 ஆசையோடு உன் வரவை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் 
                    எப்போதும்...

 உனை காணும் நேரம் அத்தனையும் நான் மறந்து வெட்கத்தில் தலை குனிந்து பேச்சிழந்து போகும் நேரம்
                     எப்போது....


 இலக்கணமாய் நானும்.. 
 இலக்கியமாய் நீயும்...
 பிழையே இல்லாத செந்தமிழாய் 
 பிரிக்க முடியாத தேன் தமிழாய் நாம்... 

நாவில் ருசித்து நாசி எங்கும் நுழைந்து 
உன் மடியினில் நான் கிடக்க 
மறுமொழி ஏதும் என்னிடம் இல்லை...

 பேச்சற்ற பேதையாய்  எண்ணிலடங்கா இனிய ஏகாந்தமாய் நானோ ... 

 எல்லாம் உன்னால்  தானடா.. 
 இப்படியும் நான் இல்லை
 இத்தனை காலமாய்....

 என்னையும் மறந்து நித்தமும் 
உன் நினைவில் உன்னை நினைத்து...
 கவிதை கிறுக்கிய 
எனக்கு  மொழியும்  மறந்து போனதடா... 
என் பேனாவும் பாதியில் நிற்கிறதடா... 
நீ வந்து முழுமையடைய செய்வாய்    
              எப்போது ....
 நம் காதல் வற்றாத நீரோடை போல முடிவே இல்லாத அழகான வாழ்க்கை  வாழ     
         வருவாய் 
          எப்போது.... 
   

மேலும்


மேலே