உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்

(Uyirththodark Kuttriyalukaram)

உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்

உயிரெழுத்துக்களைத் தொடர்ந்து உகரம் வந்தால் அது உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் (உயிரெழுத்தைத் தொடர்ந்த குற்றியலுகரம்) ஆகும்.

வி'ற'கு, அ'ர'சு, அ'ரி'து, க'ளி'று, மி'ள'கு, வ'ர'கு ஆகியவற்றில் உயிரெழுத்தைத் தொடர்ந்து உகரம் வருவதால் குற்றியலுகரம் உண்டானது.

உதாரணம்

அரசு + ஆட்சி = அரசாட்சி

நிலைமொழியின் ஈற்றயல் எழுத்து 'ர்+அ' என்பதில் 'அ' என்னும் உயிரெழுத்தை அடுத்து 'சு' என்ற உகரம் தொடர்ந்து வந்ததால் உயிர்த் தொடர் உகரம் ஆயிற்று.

இது 'ஆட்சி' எனும் வரும் மொழியின் முதலெழுத்து 'ஆ' உடன் இணைந்து நிலைமொழியின் உகரத்தைத் திரித்து அரசாட்சி என்று புணர்ந்ததால் உயிர்த்தொடர்க் குற்றியலுகரமாயிற்று.



மேலே