கனவுச் செடியில் இன்னும் காதல் மலரவில்லை

அதிர்ஷ்டம் இல்லாதவன்
இனிமையான குரல்
இரண்டுவரி பாடமருக்கிறாய்

பழகத் தெரியாதவன்
எதாவது பேசு என்கிறாய்
பேசினால் பிரிந்து செல்கிறாய்

வலி
நீ இருக்கும் வரை இமைகளுக்கு
பிரிந்த பின்பு இதயத்திற்க்கு

ரசனை இல்லாதவன்
வாழத் தெரியாதவன்
ஏமாளி
ஏய்த்துப் பொருள் ஈட்டத் தெரியாதவன்
அரை மூடன்
கோவக்காரன்
பைத்தியக்காரன்
பஞ்சப் பரதேசி
நீ எனக்களித்த பட்டம்
இன்னொருவன்மீது உனக்கோ இஷ்டம்

மனம் கொண்ட காதலை மறந்து விடலாம்
மாயை மீது கொண்ட சாயை
நான் உன்மீது கொண்ட காதல்

உன் நினைவுத் தீயில் என் உடலும் எரியட்டும்
உயிர் மட்டும் வேணும் என்னக்கு
கனவுச் செடியில் இன்னும் காதல் மலரவில்லை

எழுதியவர் : சம்பத்குமார் - உடுமலை (6-Jan-13, 9:54 pm)
சேர்த்தது : க.சம்பத்குமார்
பார்வை : 191

மேலே