சுருக்க கவிதை
சுருக்கமாய் ஒரு கவிதை சொல் என்றாய் ,
"அம்மா" என்றேன் !,
இன்னும் சுருக்கமாய் ? என்றாய் ..
....."நீ" என்றேன் ......
மனப்பத்தாயம் (பக்கம் ;28)
அப்பன் சுத்தம்!................
தவறுதலாய் சோற்றிலோரு
தலைமுடி கிடந்தமைக்காக
தகப்பன் பிசாசு
தருவிக்கும் வசைகளில்
கொச்சைப் படுத்தப்படும்
அம்மாவின் பெண் உறவு
முழுசும் எச்சிக்குவளையில்,
கருவப்புதருக்குள்
மூகைப்பிடித்துகொண்டு
சாராயம் மல்லாத்தும்போதும்
நோய் கொண்ட வைப்பாட்டியை
நெருங்கும்போதும்
அப்பன் மார்களுக்கு
அவசியப்படுவதில்லை
சுத்தம்!!!
" மனப்பத்தாயம் "

