என் சன்னலோரப் பேருந்து பயணம்..

சன்னலோரக் குளிர்க் காற்று,
சாயும் காலம் அதை நான் ஏற்று,
சாலையோரத் தென்னங்கீற்று,
சிலிர்த்தபடி நொடிகள் நகர்ந்ததுவே..

வெள்ளிச் சாரல் தொட்டு பேச,
வாடைக் காற்றி விட்டு வீச,
வாகனச் சத்தம் வாடிடவே,
வீசும் காற்று அதை அடித்திடுதே..

விரைந்து ஓடும் வெளிக் காட்சிகள்,
வீசும் காற்றில் பறப்பன அதுவோ,
வாள் கொண்டு துரத்தும் வீரரும் எவரோ,
வெட்டும் மின்னலாய் காட்சிகள் பறந்தோடுதே..

அதட்டும் தாயும் அழுதிடும் சேயும்,
உதட்டினில் சாயம் பூசிய அழகியும்,
அடர்ந்திடும் புல்லில் ஆவும் மெய்யும்,
படர்ந்திடும் காட்சிகள் விழியின் வாயிலில்..

உணர்வின் நேசமென்னைத் தொட்டுச் சென்றது,
உயிரின் சுவாசமதைச் சொல்லிச் சென்றது,
உறையும் நேரம் தான் இதுவென ஆகிடுமோ,
உள்ளம் மெல்ல உருகித் தள்ளிடுதே..

ஓயா அலைகள் ஒவ்வொன்றாய் அடிப்பது போல,
ஓடும் பேருந்து ஓய்வதுமில்லை,
ஓர இருக்கையின் சுகமே சுகம் தான்,
ஓய்ந்து ஓய்ந்து காற்றென் முகம் நனைத்திடவே..!!

எழுதியவர் : பிரதீப் (7-Jan-13, 5:39 pm)
சேர்த்தது : பிரதீப்
பார்வை : 148

மேலே