பொங்கல் திருநாள் கவிதை
தை மகளே வா வா
உன் வரவை எதிர்நோக்கி
ஏரோட்டும் உழவரெல்லாம்
மார்தட்டி மகிழ்கின்றனர்
உன் வரவை சந்தத்தில்
பாடவா
தித்திக்கும் முத்தமிழில்
பாடவா
பைங்கொடியே
உனதழகை நிலவு
வர்ணிக்கும்
உன் வரவால்
உலகமே தன்னை
மீண்டும் ஒரு முறை
புதுப்பித்து கொள்கிறது
பொல்லாங்கு பேசும்
எண்ணமெல்லாம்
பொசுங்கி போகட்டும்