உழவின்றி உலகில்லை (பொங்கல் கவிதை போட்டி )

நீரின்றி அமையாது உலகு, நித்தம்
உழவனின்றி (உழவின்றி) கிடைக்காது
உன்ன உணவு ...

அட ,கணினி முன்னால் அசையாத
கண்களால் நித்தம் பத்து விரலுக்கு
வேலை தந்து, இயந்திர மானிடனாய்
இயங்கும் இன்றைய மக்களுக்கு எங்கே தெரியபோகிறது ஒரு உழவனின்
வாழ்க்கை போராட்டம் ?..

உழவனின் சிறு குறிப்பு கேள், இறைவனின்
உன்னத படைப்பு இவனென ஒத்துக்கொள்...

அட ,தினந்தினம் சாமத்து சேவல் இவன்
முகத்தில் விழிக்கும், வான் மேகத்து கதிரவன் இவன் வியர்வையில் குளிக்கும் ..கோமாதா
கன்றும் கூட இவன் உழைப்பை கண்டு
வியக்கும் .. காடு தான் வீடு ..! மண்
தான் இவனுக்கு சோறு..!

அதிகாலை குளிர்பனியில் பணி
செய்பவன் எவன் ?.. மார்கழி,
தை பனியுலும் பணிக்கொண்டு
மாதுளை கனி காண்பான் இவன் ..!

உழவன் இருக்கும் வரை தான்
உழவுக்கு உயிர் உண்டு ..அதை நம்பி வாழும்
நமக்கும் வாழ்வுண்டு ..!

எழுதியவர் : dhamu (9-Jan-13, 12:36 pm)
பார்வை : 237

மேலே