உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே... (பொங்கல் கவிதை போட்டி)

" யர்ர் அங்கே ..! தை திங்களை எதிர்பார்த்து
பொங்கல் திருநாளை போற்றுவது ...!
வறுமைப்போர் இங்கே..! நித்தம் வயலுக்கு
காவிரி நீரை எதிர்ப்பார்த்து,எங்கள்
வாலைத்தாரின் கானல் நீரும் வற்றியது ....!

உழவன் ஏமாற்றம் பட்டுப்பட்டு வெறுமையில்
சில பொழுது கழித்து, இன்று
வறுமையில் வாழ்வை தொலைத்து
நிர்பானியாய் நிற்க்கிறான் ..! இதோ
குமறுகிறான், கொந்தளிக்கிறான் ..!

வானிலை மாற்றம் தந்தது ஏமாற்றம்

காவிரி நீர் வரும் எங்கள் வாழ்வு
மலரும் என்ற எதிர்ப்பார்ப்பும்,
ஊற்று நீர் கூட கிடைக்காமல்
சாக்கடையில் கலந்து விட்டது ..!

மின்சார பற்றாக்குறையால் வற்றிய
ஆழ்துளை கிணறு, உர விலை ஏற்றம்
நித்தம் உயிர் விட்ட செடி கொடிகள் ..!

இவை யாவும் இயற்கையால் வந்த
விதியல்ல ?. இவற்றின் பின்னால் இருப்பது
பல மானிடனின் சுயநல சதி மட்டுமே ..!

இன்னும் வெளுக்கவில்லை அரசியல்
சாயம் , கொஞ்சம் கொஞ்சமாய்
அழிந்துவருகிறது தமிழனின் விவசாயம்..!

எழுதியவர் : dhamu (9-Jan-13, 1:11 pm)
பார்வை : 113

மேலே