தங்கை புராணம்

செம்பருத்தி பூ போன்ற கால்களால்
செதுக்கிய தங்க சிற்பம் போல்
அருகில் வந்து பல அறிய கருத்துரைப்பாள்
அரஞ்சு பழ சுளை இதழ்களால்

மனம் வாடும் போது அன்னையாக
மனம் மகிழும் போது குழந்தையாக
மாறி மாறி தோன்றிடுவாள்

இன்னும் சொல்வேன் கேளிர் !
இன்முகம் கொடுத்து கேளிர் !

அழகு அறிவு அன்பு தேவதைகள் சச்சரவு கொண்டன
அனைவருள் யார் பெரியவள் என்று
அங்கே ஒரு அசிரீரி சொன்னது
அமைதி ,அமைதி,அங்கே பாருங்கள்
முன்றும் கலந்த தேவதை
முத்துவின் தங்கை வருகிறாள்
அவளே பெரியவள்,அவளே பெருந்தேவதை என்றது

எழுதியவர் : choodamanejeya (9-Jan-13, 6:04 pm)
பார்வை : 100

மேலே