இதுதானா சுதந்திரம்?????
இரண்டாம் தாய் தந்த அரவணைப்பிலே
.முதல் தாயின் அன்பினை
முதியோர் குடும்பத்திற்கு பரிசிடும்
.முட்டாள்கள்.
.....இதுதானா குடும்ப சுதந்திரம்?...
அரைகுறை ஆடை அணிய
.கைமீறி பணம்புலங்கும் தெருவில்
ஆடை எனும் சுவாசம் இல்லாதவர்க்கு
.கரம் விரிக்கும் பணம்படைத்தவன்.
.........இதுதானா பகுத்தறிவின் சுதந்திரம்?......
பசியை புறம் தள்ள
.எழுத்துகள் அகம் பதியா வயதில்
இருவார்த்தை குரலை பதிய வைத்து
.கூவும் குழந்தைகள்,கடலின் அருகே.
............இதுதானா குழந்தைகளின் சுதந்திரம்?...
மஞ்சள் முகத்தை காரிருள்
.கண்டிரா அவலம்
அறிவற்றவர்களின் காமவேலியால்.
.இதுதானா பெண்ணுக்கான சுதந்திரம்?
உயிரை பின்புறம் தள்ளி
.முன்புறம் வெற்றி பெரும் பணத்தாள்
தெருவுக்கு இரண்டான மதுபான கடைகளிலே
. மக்களாட்சி ஆதரிக்கும் சுதந்திரம்.
பூஜ்யங்களின் மதிப்பு
.எண்ணுக்கு பின்னால் புரிந்தது
இதுதானா தனிமனித சுதந்திரம்?