உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பில்

வானம் பார்த்த பூமியாச்சு
வசந்தம் என்றோ ஓடிபோச்சு
மழை பேஞ்சு மண் நனைஞ்சு
மூவெட்டு மாசமாச்சு...

கடனுக்கு நெல் வாங்கி
கழனியில் விதைச்சு
கார் மேகம் எதிர்பார்த்து
கண்ணே பூத்து போச்சு...

காவேரி தண்ணீரு
கழனிக்கு தாய்ப்பாலு
வெள்ளம் போல் தண்ணி வரும்
வெள்ளாம வெளஞ்சு வரும்
போட்ட கணக்கு பொய்யாச்சு
பொழப்பு சிரிப்பா சிரிச்சாச்சு...

ஏர் பிடிச்ச வம்சமிங்கே
எலி கறிய சாப்பிடுது
நாட்டோட முதுகெலும்பு
நார்நாரா கிழிகிறது...

நதிநீர இணைக்காட்டி உழவன் கண்ணீர
ஒருங்கிணைச்சா கங்கை தொட்டு காவேரி வர
கண்ணீர் வெள்ளம் கரை புரண்டு ஓடிவரும்...

சேறு நிரஞ்ச வயலெல்லாம்
வத்த கருவாடு ஆச்சு!
உயிர் தேய உழுதவனோ
தூக்கில் தொங்கும் காலமாச்சு...

நெல்லு வெளஞ்ச நிலமெல்லாம்
இப்போ புல்லு மொளச்சு கிடக்குது
புள்ள குட்டி பட்டினியால் தினம்
வாடி வதங்கி நிக்குது...

பசுமை நிறைஞ்ச வயலில்
இப்போ பத்துமாடி கட்டிடம்
பருத்திக்காடு கூட இப்போ
வீட்டுமனை பத்திரம்...

தண்ணீர் வாங்கி தர முடியல தலைவராகுரார்
தமிழக தலையெழுத்த மாத்துவேன்னு
நீட்டி முழங்குரார்
பச்சரிசி வெல்லம் கூட வாங்க முடியல அரசோ
நூறு ரூபா பிச்ச போட்டு வாய அடைக்குது....

பீசானும் பர்கர்னும் மேலை நாட்டு
காஞ்ச ரொட்டி திங்கற கூட்டம்
நெல்லஞ்ச்சோறும் கம்மஞ்ச்சோறும்
உண்பவன சோத்து மூட்டை என்குது....

மேலை நாட்டு மோகத்துக்கு
விபச்சாரி ஆனவங்க
விலைவாசி ஏற்றத்துக்கு விவசாய
குறை சொல்லுறாங்க...

கம்ப்யூட்டர் சோறு போடும்னு புள்ள போய்ட்டான்
படிக்க வைக்க பாதி நிலத்த பங்கு போட்டுட்டான்
கட்டினவ தாலி கூட அடகு கடையில
கழனிய நம்பினவன் வாழ்க்கை இப்போ
கண்ணீர் கடலுல.....

எழுதியவர் : (10-Jan-13, 4:53 pm)
பார்வை : 98

மேலே