உணவின்றி வாழ்கிறோம் இன்று ......

முன்பொரு காலத்தில் ...
சந்திரனை அனுபிவைதேன்
சூரியனை வரவேற்றேன்
தை மகளை வரவேற்க ...

சித்தாடை கட்டி என் குழந்தை
நடந்துவர பசித்திருந்த வயிறும்
இன்று முழுவதும் நிறைத்தது...

பொங்கல்லிட்டேன் உலகில் அனைவருக்கும்
உணவிட்ட நிலமகளுக்கு அதற்கு
நன்றியாக மேகம் சிந்தின
மழைதுளியாக நிலமகளும்(நிலம்) பாசத்தில்
முழுவதும் நனைத்து விட்டால்....

மாறிவரும் சூழ்நிலையில் இன்றைய என் நிலமகளைகாணவில்லை
தேடிபார்த்தேன் கைகாட்டின
நிலமகளின்(நிலம்) குழந்தைகள்
என கட்டிடங்களை

மாற்றங்கள் ஒன்றே மாறாதது என்பது
பொய்யாய் போனது ...

ஏற்றம் இறைத்து உணவிட்ட
எங்களுக்கு அரைசான்
வயிறும் உணவின்றி
வாழ்கிறோம் இன்று ...

எழுதியவர் : ப்ரியாஅசோக் (12-Jan-13, 11:59 am)
பார்வை : 85

மேலே