பொங்கலோ பொங்கல்!
பொங்கலோ பொங்கல்!
மனத்தகத்து இனிமை யாவும்
மாண்புறப் பொங்குக!
பொங்கிய இனிமை யாவும்
புவியெங்கும் தங்குக !
உழைப்பின் மகிமை
உள்ளத்தில் நிறைக!
உண்மையும் முயற்சியும்
உற்சாகம் பெறுக!
நன்மையையும் உற்பத்தியும்
நானிலத்தில் நிறைக !
மஞ்சளும் கரும்பும்
மங்களம் தருக!
மகிழ்வே பொங்குக!
மனமெங்கும் தங்குக!
குறைவற்ற வாழ்வில்
உலகே உறைக!
குன்றிலிடு சுடராய்
குவலயமே ஒளிர்க!
பொங்கலோ பொங்கல்!
பாலு குருசுவாமி.