யார் தமிழினத்தலைவன்

நாவிலே பூ அவிழ்ப்பான்
நெஞ்சிலே விஷம் வைப்பன்

தான் உயர - பலர்
முதுகை ஏணிஆக்குவன்
ஏறிய பின் எட்டி
உதைப்பான்
சினம் மட்டும்மல்ல - இவனும் தான்
சேர்ந்தாரை கொல்லி

ஒருவனுக்கு ஒருத்தி என்று
தமிழர் பண்பாடு பேசுவான் -ஆனால்
இவன் மட்டும்
பல தாரம் முடிப்பான்

இவன் பதவி பெற -சிலரை
தீக்கிரைஆக்குவான் -பின்
தியாகி ஆக்குவான்

பதவி என்றால்- எதிரியுடன்
கூட்டு அமைப்பான்
நண்பனைய எட்டி
உதைப்பான் -கேட்டால்
அரசியலில் நிரந்தர நண்பனும்
இல்லை - நிரந்தர எதிரியும் இல்லை
என்பான்


கல்லை வணங்குவது
பகுத்தறிவு ஆகுமா - என்பான்
தன்னை கடலில் போட்டால்
கடுமரமாய் மிதப்பேன் - என்று
விஞ்ஞானம் கூறுவான்

அடிவருடிகள் சிலர்
தமிழினத்தலைவன்-இவன்
என்று பட்டம் கொடுப்பார் - ஆனால்
தமிழனத்தை கூண்டோடு
அழிக்கும் கைக்கு கைகொடுப்பான்

காலையிலே தமிழ் மக்களுக்கு
ஆபத்து என்று -ஆதரவு
கொடுப்பான் -மாலையிலே
அதலால் தம் மக்களுக்கு ஆபத்து
என்றவுடன் ஆதரவை விலக்குவான்
விலங்குகள் கூட
தேவைக்கேற்றவாறு - நிறம் தான் மாறும்
இவன் மட்டும்தான்
மனம் மாறுவான்
உண்மை இப்படி இருக்க
நாளை என் பிள்ளை என் பேர பிள்ளை
தமிழினத்தலைவர் இவர் - அறைநூற்று
ஆண்டுகாலம் தமிழுக்கும் தமிழர்க்கும்
வாழ்ந்தவர் என்று பாடம் படிப்பான்

எழுதியவர் : செ.ரூபன் (16-Jan-13, 12:57 pm)
பார்வை : 224

மேலே