அறியாமை

சனிக்கிழமை மாலை ,பெங்களூரில் பொழுதை களிக்க சென்றோம் நானும் எனது தோழர்களும் .....முதலில் மால்களுக்கு சென்றோம் , பிறகு அங்கு ஒரு சினிமா பார்த்தோம் , அப்படியே நள்ளிரவு 12 ஆனது நாங்கள் ஐந்து பேர் ஒரு ஆட்டோவில் வீடு திரும்பினோம் ..... வரும் வழியில் இரண்டு போலீஸ் நாங்கள் வந்து கொண்டு இருந்த ஆட்டோவை வழி மறித்தனர் ....அந்த ஆட்டோ டிரைவரை கேள்வி எழுப்பினர் , ஐந்து பேர் ஒரு ஆட்டோவில் ஏற்றகூடாது என்று தெரியாதா ? முதலில் பைன்-எ கட்டு என்று .... அந்த ஆட்டோ காரன் எப்டியோ போலிசை சமாளித்து பைன்-யை கட்டாமல் ஆட்டோவை எடுத்து கொண்டு புறப்பட்டு விட்டான் ...பிறகு எங்கள் ஐந்து பேரையும் விசாரிக்க ஆராம்பத்தினர் ...முதலில் எந்த ஊரு என்று விசாரிக்க , தொடர்ந்து கொண்டு போனது எண்கள் வாக்குவாதம்.... அவர்களின் நோக்கம் எங்களிடம் எப்டியாவது பணம் பறிக்க வேண்டும் என்பது ......ஒரு நேரத்தில் நான் கொஞ்சம் ஓவராக பேச ஆரம்பித்துவிட்டேன் ... உடனே அவன் எனது கம்பெனி அடையாள அட்டையை காமிக்க சொன்னான் .... ஆனால் என்னிடம் இல்லை ... அதனால் என்னிடம் இருந்த பான் கார்டை எடுத்து காட்டினேன் ..... இரண்டு போலிசும் ஒரு நிமிடம் திரு திரு வென முழித்தனர் ... உடனே அதில் ஒருவன் குறிகிய குரல் உடன் " சார் நீங்க income tax departmentla வேலை செய்றீங்களா என்று கேட்டுவிட்டு " என்னிடம் கார்டை திருப்பி கொடுத்து விட்டு உடனே அங்கு இருந்து இருவரும் பறந்து விட்டனர்

எழுதியவர் : prabhakaran (16-Jan-13, 3:34 pm)
பார்வை : 274

மேலே