சுனாமி...

கல்லூரி விடுமுறையை
காரிருள்
கவர்ந்த நேரம்...

கால் தடம் பதிக்க வந்து
காலச்சுவடாக மாறினேன்...

உன் மழலைகளின்
துள்ளல் சிரிப்பை பார்க்க
தினம் பார்த்து வந்தவன்
இவ் வுலகம் மறந்து போனேன்...

நீ
சூரிய நமஸ்காரம் செய்ய
உயர்த்திய கைகளில்
சுருட்டிக் கொல்லப்பட்டவர்களில்
நானும் தானே....

மெரினா வில்
உனக்கென ஒரு மேமொராண்டம் உண்டாக்கினாய்...

மெய்யோடு வந்தவனை
பொய்யாக்கி அனுப்பி வைத்தாய்...

உன் விரதம் கலைக்க
இத்தனை
உயிர்களா?

உனக்கென்று
ஒரு வேண்டுதல்
இனியொரு முறை வேண்டாமே...

எழுதியவர் : விநாயக மூர்த்தி.பு (16-Jan-13, 7:08 pm)
சேர்த்தது : vinayputhu
Tanglish : sunaami
பார்வை : 124

மேலே