மூவர் முயற்சி..=====அசரலாம்

சாயும் நிலவு ( அகன் ரமேஷ் சரவணா )

எமது கொடியில்...
தர்மத்தின் அடையாளம்தான்.
ஒளி திருடிய களங்க நிலவில்லை.

சாயும் நிலவு பதிந்த
அந்நியக் கொடியொன்று
சாய்க்கத்துடிக்கிறது
எம் இறையாண்மையை.

கண்ணீரால் காத்த வேள்வியை
கருக்கத் துடிக்கிறது
பங்காளிப் பகைகள் மூட்டி.

ரோஜாக்களை இரத்தத்துளிகளோடு
பூக்கவைத்து
தன் ஓநாய் நாக்குகளை
ஈரமாக்குகிறது.

தினம் தேயும்
சாய்நிலவின் பௌர்ணமிக் கனவழிக்க...
எப்போதும் தயாராயிருக்கும்
எம் ஏவுகணைகள்.

(சரவணன் தொடர்ந்தார் )

ஈசல்பூச்சியது சிறகொன்று
முளைத்துவிட்டால்
ஓடிவந்து கெஞ்சுமாம்
பறவைகளுக்கு தீனியாக......

வஞ்சம் தீர்க்க வாளெடுத்த
வறண்டுபோன வனங்களுக்கு
கொஞ்சம் கொஞ்சமாய்
வலி நீர் புகட்டுவோம்...!

கார்கில் இன்னமும்
கழுவிக் கொண்டிருக்கிறது
உங்கள் புழுத்த சதைக் கறிகளையும்
வெளுத்த இரத்தக் கரைகளையும்..

முதுகுகளில் கவசமிட்டுக்
கொள்ளுங்கள்...
ஓடி ஒளிவதை
வரலாறுகளிலேனும்
மறைக்கலாம்...

(இனி எனக்காக இரண்டொரு வரி...என அவர் அளித்த வரிகள் இவை)

எங்கள் வீரம் விளக்க வேண்டுமெனில் ....
ராவண தேசத்து இராணுவங்களைக்
கேட்டுப்பார்.. தாய்ச் சொந்தங்களின்
கழுத்தருத்தலை
சத்தமின்றி ரசித்தவர்களென
பூமாலை போர்த்தும்....

கவிதை வரிகளின் முன்னவர் எண்ண ஒட்டத்தினின்று இறுதி வரிகள் வேறு கோணம் பெற்றதால் பின் வரும் வரிகளை நான் அளித்து கவிதையை நிறைவு செய்தேன்..

(அகன் முடிப்பு )
ஒரு பூமியில் எங்கள் மெளனம்
நிரந்திரமல்ல..
அதிலேனும் தந்திரமும் இல்லை...
ஓர் இனம் அழிய
ஒரு குடும்பத்திற்கான யந்திர முடுக்கு
உலகளாவிய அவமான தெளிப்பதை
நிலை பெற வைத்திடோம் நாங்கள்....
ஏனெனில் ,
நாங்கள் புதைக்கப் படுபவர்கள் அல்ல...
விதைக்கப் படுபவர்கள்..
விடியலுக்குக் காத்திராமல்
கிழக்கைப் பிளந்து
சூரியன் எடுக்கும் இனமாக
உரு மாறி வருகிறது இன்றைய தலைமுறை...

எழுதியவர் : அசரலாம் (16-Jan-13, 7:09 pm)
சேர்த்தது : agan
பார்வை : 101

மேலே